புதிய காற்றழுத்தம்: கடலோர மாவட்டங்களில் மழை எச்சரிக்கை
சென்னை, நவ. 5 – வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவானதால். தமிழக கடலோர மாவட்டங்களில் மழை எச்சரிக்கை கொடுத்துள்ளார். இயக்குனர் ரமணன் தகவல்.
வங்க கடலில் கன்னியாகுமரி அருகே நிலைக்கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் இலங்கை அருகே வங்க கடலில் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இதனால் பலத்த மழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் நேற்று சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:_
வங்க கடலில் நேற்றுமுன்தினம் கன்னியாகுமரி அருகே நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை மேற்கு நோக்கி நகர்ந்து நேற்று காலை 8.30 மணி அளவில் மாலத்தீவு _ லட்சத்தீவு கடல் பகுதியில் நிலை கொண்டுள்ளது.
இதற்கிடையே மேலும் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு நிலை இலங்கையையொட்டி தென் மேற்கு வங்க கடலில் உருவாகி உள்ளது.
இதன் காரணமாக தமிழ்நாடு _ புதுச்சேரியில் பரவலாக மழை பெய்து வருகிறது. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அனேக இடங்களில் பலத்த மழை பெய்யும்.
கடலோர மாவட்டங்களில் மிக கனத்த மழை பெய்யும். குறிப்பாக காவிரி டெல்டா மாவட்டங்களில் மிக பலத்த மழை எதிர்பார்க்கலாம். உள் மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில் கனமழை பெய்யும். தரை காற்றும் சற்று பலமாக வீசும்.
சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். ஒருசில நேரங்களில் திடீர் மழையை எதிர்பார்க்கலாம்.
இன்று காலை 8.30 மணி நிலவரப்படி நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் அதிகபட்சமாக 10 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. திருவாடானை 8 செ.மீ., ராமநாதபுரம், தொண்டி 5 செ.மீ., சேரன்மாதேவி, சிவகங்கை 4 செ.மீ., பேச்சிப்பாறை, தாமரைப்பாக்கம் 3 செ.மீ., சென்னை விமான நிலையம் 2 செ.மீ., நுங்கம்பாக்கம் 1 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
மருத்துவம் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
அறுசுவை சமையல் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
http://www.youtube.com/bhakthiplanet