சென்னை உயர்நீதிமன்றத்தின் ஏழு புதிய நீதிபதிகள் பதவி ஏற்பு
சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய நீதிபதிகளாக ஏழு நீதிபதிகள் வெள்ளிக்கிழமை பதவி ஏற்றுக் கொண்டனர். இவர்களுக்கு தலைமை நீதிபதி ராஜேஷ்குமார் அகர்வால் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகளாக ஜி.சொக்கலிங்கம், வி.எஸ்.ரவி, ஆர்.மகாதேவன், எஸ்.வைத்தியநாதன், கே.கல்யாணசுந்தரம், புஷ்பா சத்யநாராயணா, பி.என்.பிரகாஷ் ஆகியோரை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டார்.
இதையடுத்து ஏழு புதிய நீதிபதிகளின் பதவிப்பிரமாணம் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இவர்கள் அனைவருக்கும் தலைமை நீதிபதி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
புதிய நீதிபதிகள் பதவியேற்ற பிறகு, தமிழக அரசின் தலைமை வழக்குரைஞர் ஏ.எல்.சோமையாஜி, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்குரைஞர்கள் சங்கத்தின் தலைவர் டி.செல்வம், சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கத்தின் தலைவர் ஆர்.சி.பால்கனகராஜ், சென்னை வழக்குரைஞர்கள் சங்கத்தின் தலைவர் எஸ்.முத்துகுமாரசாமி, பெண் வழக்குரைஞர்கள் சங்கத்தின் தலைவர் பிரசன்னா ஆகியோர் வரவேற்று பேசினர்.
இவர்களின் வரவேற்புரைக்கு புதிய நீதிபதிகள் ஏழு பேரும் பதில் உரையாற்றினர்.
இந்த நிகழ்ச்சியில், உயர்நீதிமன்ற நீதிபதிகள், பதிவாளர் ஜெனரல் பொன் கலையரசன், வழக்குரைஞர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். ஏழு புதிய நீதிபதிகளுடன் உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 48-ஆக உயர்ந்தது. 12 நீதிபதிகளின் பணியிடங்கள் காலியாக உள்ளன.
சென்னை உயர்நீதிமன்ற புதிய நீதிபதிகளாக வெள்ளிக்கிழமை பொறுப்பேற்ற (இடமிருந்து) ஜி.சொக்கலிங்கம், வி.எஸ்.ரவி, ஆர்.மகாதேவன், எஸ்.வைத்தியநாதன்,
கே.கல்யாண சுந்தரம், புஷ்பா சத்யநாராயணா, பி.என்.பிரகாஷ் ஆகியோருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்த தலைமை நீதிபதி ராஜேஷ்குமார் அகர்வால்.
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
மருத்துவம் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
அறுசுவை சமையல் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
http://www.youtube.com/bhakthiplanet