ஒரே மேடையில் பிரதமர் மன்மோகன், பா.ஜ.க பிரதமர் வேட்பாளர் மோடி…!
அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் வருகிற 29ம் தேதி நடைபெறும் படேல் நினைவகம் திறக்கும் பிரமாண்ட விழாவில் ஒரே மேடையில் பிரதமர் மன்மோகன் சிங்கும், பாஜ பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியும் கலந்து கொள்கின்றனர்.சுதந்திரத்திற்கு பிறகு தனித்தனியாக இருந்த சமஸ்தானங்களை இந்தியாவுடன் ஒருங்கிணைத்தார் அப்போதைய முதல் உள்துறை அமைச்சரான சர்தார் வல்லபாய் படேல். ‘இரும்பு மனிதர்’ என்று அழைக்கப்படும் படேலுக்கு அமெரிக்காவில் உள்ள சுதந்திர தேவி சிலையைப் போல பிரமாண்ட சிலை அமைக்க போவதாக குஜராத் அரசு அறிவித்தது.
இதற்கிடையில் குஜராத் முதல்வர் நரேந்தி மோடி, பாஜவின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு தற்போது நாடு முழுவதும் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். தனது பிரசாரத்தில் குறிப்பாக பிரதமர் மன்மோகன் சிங், ராகுல் காந்தி போன்றோரை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். இந்நிலையில் ஏற்கனவே குஜராத்தில் சர்தார் வல்லபாய் படேலுக்கான நினைவு அருங்காட்சியகம் ஒன்றை அமைப்பதற்கான கமிட்டி ஒன்றை மத்திய அரசு அமைத்தது. மத்திய அமைச்சர் தின்ஷா படேல் தலைமையில் அமைக்கப்பட்ட குழு இதனை கவனித்தது. தற்போது படேல் நினைவு அருங்காட்சியக திறப்பு விழா வருகிற அக். 29ம் தேதி அகமதாபாத்தில் நடைபெற உள்ளது. இதற்காக அம்மாநில முதல்வர் நரேந்திர மோடியை தின்ஷா படேல் நேரில் சென்று அழைப்பு விடுத்தார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மன்மோகன்சிங் கலந்து கொண்டு அருங்காட்சியகத்தை திறந்து வைக்கிறார். இதனையடுத்து மன்மோகன் சிங்கும், முதல்வர் என்ற முறையில் நரேந்திர மோடியும் ஒரே மேடையில் பங்கேற்க உள்ளனர்.ஏற்கனவே அறிவித்திருந்தபடி அக்டோபர் 31ம் தேதி சர்தார் சரோவர் அணைப்பகுதியில் படேலின் பிரமாண்ட சிலை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் மோடி கலந்து கொள்கிறார்.
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
மருத்துவம் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
அறுசுவை சமையல் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
http://www.youtube.com/bhakthiplanet