இந்த ஆண்டில் மட்டும், நம் நாட்டில், 24 ஆயிரம் கோடி ரூபாய், இணைய தளங்கள் மூலமாக திருடப்பட்டு உள்ளது.
புதுடில்லி: இந்த ஆண்டில் மட்டும், நம் நாட்டில், 24 ஆயிரம் கோடி ரூபாய், இணைய தளங்கள் மூலமாக திருடப்பட்டு உள்ளது.
வீடுகள் தோறும் கம்ப்யூட்டர், இன்டர்நெட் என, தகவல் தொழில்நுட்ப புரட்சி நிலவும் நம் நாட்டில், கம்ப்யூட்டர் தொடர்பான குற்றங்களான, ‘சைபர்’ குற்றங்களும் அதிகரித்து விட்டன. சைபர் செக்யூரிட்டி நிறுவனமான, ‘சைமன்டெக்’ வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தின்படி, இந்த ஆண்டின், பத்து மாதங்களில் மட்டும், 24 ஆயிரம் கோடி ரூபாய், சைபர் கேடிகளால், அபகரிக்கப் பட்டு, ஏப்பம் விடப்பட்டுள்ளது. இது, கடந்த ஆண்டை விட, 8 சதவீதம் அதிகம் என்பது, மேலும் அதிர்ச்சி தரக் கூடியதாக அமைந்துள்ளது. 24 நாடுகளின், 13 ஆயிரம் பேர், சைபர் குற்றங்களில், தங்களின், கடினமாக சம்பாதித்த பணத்தை இழந்துள்ளனர்; அவர்களில், 1,000 பேர் இந்தியர்கள். மேலும், உலக அளவில், அதிக சைபர் குற்றங்கள் நடைபெறும் நாடுகளில், நம் நாடு, முதல் ஐந்து நாடுகளில் ஒன்றாக விளங்குகிறது.
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
மருத்துவம் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
அறுசுவை சமையல் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
http://www.youtube.com/bhakthiplanet