உடல் நலம் தரும் திராட்சைப் பழம்
திராட்சை வைட்டமின் C நிறைந்தது. இதயநோய்க்கு பச்சை திராட்சை சிறந்தது. நரம்புத் தளர்ச்சியால் உடல் நடுக்கம் கொண்டவர்கள் தினமும் சிறிது திராட்சை உண்டு வந்தால், நரம்புத்தளர்ச்சி குறையும். ஜீரண சக்தியை அதிகரிக்கம்.
பலவகையான குடல் கோளாறுகளுக்கும் பச்சை திராட்சை நல்ல வகையில் பயன் படுகின்றது.
இருதய நோய்களையும் பச்சை திராட்சை சீராக்கும் இயல்பு பெற்றிருக்கிறது.
நரம்புத் தளர்ச்சி காரணமாக ஏற்படுகிற உடல் நடுக்கத்தை சீர் செய்யும் வல்லமையும் இதற்கு உண்டு.
பச்சைத் திராச்சையின் சாறு எடுத்து பகல் உணவுக்குப் பிறகு சாப்பிட்டு வர நாக்குப் புண், வாய்ப்புண் ஆறும்.
கருப்புத் திராட்சையில் பச்சை திராட்சையை விடச் சிலவகை சத்துக்கள் அதிகமாக இருக்கின்றன.
உலர்ந்த திராட்சைப் பழத்தில் வைட்டமின் “ஏ” சத்து மட்டுமே அதிகமாக உள்ளது.
உலர்ந்த திராட்சையை அப்படியே சாப்பிடுவதை விட, சுட வைத்த பசுவின் பாலில் இட்டு சிறிது நேரம் ஊறச் செய்து பாலுடன் சேர்த்துச் சாப்பிட்டால் அதன் இயல்பான சத்து சற்றுக் கூடுதலாகும்.
உடல் இளைத்தவர்கள் உலர் திராட்சையை பாலில் ஊறவைத்து உண்டால், உடல் பருமனடையும்.
உலர்ந்த திராட்சையை இரவு வெந்நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் குழந்தைகளுக்கு உண்ணக் கொடுத்தால் மலச்சிக்கல் நீங்கும். வாய்ப்புண், நாக்குப் புண் போன்றவற்றை ஆற்றும்.
வளரும் குழந்தைகளுக்கு உலர்ந்த திராட்சையைக் கொடுத்து வந்தால் அவற்றின் தசை வளர்ச்சி நல்ல முறையில் இருக்கும். மற்றும் அவற்றின் எலும்புகளின் வளர்ச்சியும் நன்றாக இருக்கும்.
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
மருத்துவம் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
அறுசுவை சமையல் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
http://www.youtube.com/bhakthiplanet