வயிற்று இரைச்சலை நீக்கிக் குடலுக்கு வலுவை கொடுக்கும் கறிவேப்பிலை
உணவு பதார்த்தங்களுக்கு சிறந்த மணமூட்டியாக விளங்குவது கறிவேப்பிலை. இதைப் பச்சையாகவும் உண்ணலாம். இரத்த சுத்திக்கேற்றது. பித்தம், மாற்றும் வாந்தியைத் தடுக்கும். வயிற்று இரைச்சலை நீக்கிக் குடலுக்கு வலுவைக் கொடுக்கும். மூல பேதியை கட்டும் இதில் வைட்டமின் “ஏ“ சத்து அதிகமாக இருக்கிறது. அத்துடன் வைட்டமின் பி, சி யும் உண்டு. ஓரளவு இரும்புச் சத்தும் உண்டு.
கறிவேப்பிலையைக் காயவைத்து, பொடித்து சோற்றுடன் சிறிது நெய்யும் கலந்து உண்டால் குடல் இறுக்கம், மூலக்கடுப்பு போன்றவை குணமாகும்.
கறிவேப்பிலையை இஞ்சி, உப்பு, பருப்பு போன்ற வற்றோது துவையலாகச் செய்து உண்பதால் ருசியில்லா நாக்கிலும் ருசி தோன்றும். ஜீரணத்திற்கும் நல்லது. மேலும் சீரகம், புளி, இஞ்சி, உப்பு, பச்சைமிளகாய் இவற்றோடு சேர்த்து துவையலாக உண்ணலாம். நாக்கு சுவை உண்டாவதோடு காய்ச்சலையும் குணப்படுத்தும்.
இதை விழுதாக அரைத்து எருமை தயிரில் கலந்து பருகினால் சீதபேரி நீங்குகிறது.
வெயில் காலங்களில் கறிவேப்பிலையை இஞ்சியோடு விழுதாக அரைத்து, நீர்மோரில் உப்பு கலந்து பருகிவர உடல் குளிர்ச்சி பெறும். நா வறட்சி நீங்கும்.
கறிவேப்பிலையை உணவில் அதிகம் சேர்த்தக் கொண்டால் முடி உதிர்வது நிற்கும். கூந்தல் அடர்த்தியாக வளரும்.
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
மருத்துவம் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
அறுசுவை சமையல் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
http://www.youtube.com/bhakthiplanet