ஒபாமாவின் கை ஓங்குமா?
Sri Durga Devi upasakar, V.G.Krishnarau
அமெரிக்க அதிபர் திரு. பராக் உசேன் ஒபாமா (Barack Hussin Obama) 04.08.1961-ஆம் ஆண்டு, மாலை 07.24 மணிக்கு, அமெரிக்காவின் Honolulu என்ற ஊரில் ரிஷப இராசி, மகர லக்கினம், ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்துள்ளார். மகர லக்கினத்தில் குரு, சனி இணைந்து “வசுந்தர யோகம்” தருகிறார்கள். தன-குடும்ப ஸ்தானத்தில் கேது, பஞ்சமத்தில் சந்திரன், 6-ல் சுக்கிரன் மற்றும் சப்தமத்தில் சூரியன், புதன் இணைவு, “புத ஆதித்யாய யோகம்” உண்டாக்கியது. இதன் பலனாக உயர்வு கல்வி பெற்றார்.
திருமணம்
களத்திர காரகன் என அழைக்கப்படுபவர் சுக்கிரன். ஒபாமாவின் ஜாதகத்தில் சுக்கிரன் 5-10-க்கு அதிபதியாக இருந்து லக்கினத்திற்கு 6-ல் வீற்றிருக்கிறார். இராகு திசை, சுக்கிர புக்தி நடைப்பெற்றபோது, 03.10.1992-ல் மிசெல் ராபின்சனை திருமணம் செய்தார். பஞ்சமத்தில் (பூர்வ புண்ணிய – புத்திர ஸ்தானத்தில்) சுக்கிரனின் இல்லத்தில் சந்திரன் இருப்பதால் இரு பெண் குழந்தைகளுக்கு தந்தையானார்.
போராட்ட வாழ்க்கை
அஷ்டமத்தில் செவ்வாய், இராகு.
சுகாதிபதி செவ்வாய் 8-ல் இராகுவுடன் சேர்ந்ததால் இளம் வயதில் பெரும் போராட்ட வாழ்க்கையை சந்தித்தார். 4-ம் இடம், தாயாரின் நிலை அறியக்கூடிய இடமாகும். தாயாரின் இடத்தின் அதிபதி செவ்வாய், 8-ல் இராகுவுடன் சேர்ந்ததால், இராகு திசை, செவ்வாய் புக்தி 1995-ல் நடைப்பெற்றபோது தாயாரை இழந்தார்.
குரு – சனியால் பேராசிரியர்
குருவும், சனியும் சேர்ந்தால் மத ஈடுபாடு, மத போதகராகாவோ, கல்வி போதிப்பவராகவோ திகழ்வது கிரகங்களின் கட்டளை. அதன்படியே இவர், சிக்காகோ பல்கலைகழகத்தில் பேராசிரியராக பணி புரிந்திருக்கிறார். தேவாலயங்களிலும் நிர்வாகியாக பணியாற்றி இருக்கிறார். இதற்கு குரு, சனியின் இணைவே காரணம் எனலாம்.
உயர்ந்த அந்தஸ்து
பொதுவாகவே மகர லக்கினத்தில் குரு நீச்சம் பெற்று, அந்த வீட்டுக்குரிய அதிபதி சனி, லக்கினத்தில் ஆட்சி பெற்று இருப்பதால், “நீச்சபங்க இராஜயோகம்” கொடுக்கிறது. “நீச்சபங்க இராஜயோகம்” என்பது, படு பள்ளதில் இருப்பவரையும் பல்லாக்கில் உட்கார வைத்துவிடும்.
இந்த நீச்ச பங்க இராஜயோகத்தின் துணை காரணமாக, தன் பேச்சு திறனால் மக்களை தன்பால் கவர்ந்து வெள்ளை மாளிகை அதிபரானார். இது குரு திசை, சந்திர புக்தியில் நடந்தது.
2008-ல் மக்களாட்சி கட்சி வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார். சந்திரனை குரு பார்வை செய்து, “கஜகேசரி யோக”த்தை உண்டாக்கியதால் முடியரசர் ஆனார்.
வரும் காலகட்டங்கள்…
06.11.2012-ல் மறுபடியும் தேர்தலை சந்தித்து வெற்றி பெற்று மீண்டும் அதிபரானார். அப்போது அவருக்கு சனி திசையில், சனி புக்தி நடைப்பெற தொடங்கியது.
பொதுவாக ஒரு திசையின் ஆரம்பம், அதாவது, சுய புக்தி சாதனை செய்ய வைத்தால், அதன் பிறகு வரும் காலகட்டங்கள் சோதனை தரும் என்பது ஜோதிட விதி.
இந்த சனி திசை, சுய புக்தி (சனி புக்தி) 30.07.2015 நடைப்பெறுகிறது. ஆகவே, இந்த காலகட்டம்வரை சற்று சோதனையான நேரம்தான். இவருடைய இராசி ரிஷபமாக இருந்து, தற்காலம் சனி 6-ல் இராகுவுடன் இருப்பதால் கவலையில்லை.
ஆனால் வரும் 2014 நவம்பர் மாதம் 7-ல் சனி சஞ்சரிக்கிறபோது, கவனமுடன் இருக்க வேண்டிய காலம். வெல்லமாக பேசி வெள்ளையர்களை கவர்ந்திருக்கிறார் என்றால் அதற்கு சனியே காரணம்.
ஒரு ஜாதகத்தில் லக்கினத்தில் சனி இருந்து, 10-ம் இடத்தை பார்த்தாலும், 10-ம் இடத்தில் சனி இருந்தாலும் மாபெரும் கூட்டம் அவர்களை சுற்றி இருக்கும்.
இவர் ஜாதகத்தில் சனியை, சூரியன் பார்வை செய்வதால், அதாவது லக்கினத்திற்கு 8-ம் அதிபதி பார்வை செய்வதால் இனி வரும் காலங்களில் ஒவ்வொரு அடியேடுத்து வைக்கும்போதும் இவர் கவனமாகவும், நிதானமாகவும் அவசரம் இன்றி எடுத்து வைக்க வேண்டும். இவருடைய ஜாதகத்தில் பூர்வ புண்ணியத்தில் சந்திரன் இருப்பதும், குரு பார்வை செய்வதுமே இவருடைய உயர்வுக்கு காரணமாக அமைந்தது.!
Send your feedback to: editor@bhakthiplanet.com
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India
http://www.youtube.com/bhakthiplanet
http://www.facebook.com/bhakthiplanet
For Astrology Consultation CLICK Here
© 2013 bhakthiplanet.com All Rights Reserved