Sunday 24th November 2024

தலைப்புச் செய்தி :

தமிழகத்தில் 5 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு: வரும் 25-ம் தேதி 7 மாவட்டங்களில் கனமழை  *  மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை - மத்திய மந்திரிக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் *

வேப்ப மரம் உள்ள இடத்தில் குலதெய்வம் குடியிருக்கும்!

Written by Niranjana NIRANJHANA

ஒரு காலத்தில் பிரளயம் ஏற்பட்டு உலகமே தண்ணீரால் மூழ்கியது. அந்தக் காலத்தில் மிக பெரிய சுனாமி அதுவாகத்தான் இருக்கும். அதன் பிறகு வேலையில்லாமல் சிவபெருமானுக்கு போர் அடித்தது. மறுபடியும் உலகத்தை உருவாக்கலாம் என்ற எண்ணத்தில் மறுபடியும் உலகத்தை உருவாக்கினார். முதலில் எதை உருவாக்குவது என்று தீவிர சிந்தனையில் இருந்த போது, வேதங்களை அதாவது வேத மந்திரங்களை வேப்பமரங்களாக மாற்றினார் சிவபெருமான். அதன் பிறகுதான் ஜீவராசிகளை படைத்து புதிய உலகத்தை உருவாக்கினார்.

Bhakthi Planetகண்களுக்குத் தெரியாத திருஷ்டி போலவே, கண்களுக்குப்புலப்படாத வைரஸ் கிருமிகளால் நோய் பரவும் வாய்ப்பு உண்டு.

அந்த வைரஸ் கிருமிகளை அழிக்கும் ஆற்றல் வேப்ப மரக்காற்றிற்கு உள்ளது. அதனால் தான் கிராமங்களில் இன்று வரை வளைகாப்பன்று கர்ப்பவதிப் பெண்ணுக்கு முதலில் வேப்பிலையால் செய்யப்பட்ட வளையலை அணிவித்த பிறகே மற்றவர்களை வளையல் அணிவிக்க அனுமதிப்பார்கள். காரணம், கர்ப்பவதியாக இருக்கும் பெண்ணின் அருகில் பலர் வருவதால் அவர்களின் மூச்சுக் காற்று வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு ஏதாவது பாதிப்பு உண்டாகாமல் இருக்கவும், அவர்களின் தோஷம் வயிற்றில் இருக்கும் குழந்தையைத் தாக்காமல் இருப்பதற்காகவும்தான்.

யாகம் செய்யயும் இடத்தில் வேப்பமரம் இருந்தால், மந்திரங்களுக்குManamakkal Malai வலிமை அதிகம் உண்டாகும். காரணம், வேதங்கள்தான், வேப்பமரங்களாக மாறின என்கிறது புராணம்.

வேப்பமரம் உள்ள இடத்தில் எந்த தீய சக்திகளும் அண்டாது. தெய்வீக யாகம் செய்ய முடியாதவர்கள்,  வேப்பமரத்திற்கு செவ்வாய்க்கிழமையிலோ, வெள்ளிக்கிழமையிலோ பால் அபிஷேகம் செய்து  மஞ்சள், குங்குமம் வைத்து பூ வைத்து தீபாராதனை செய்தால் எல்லா தோஷங்களும் விலகி, சர்வ வளங்களும் பெறுவார்கள்.

வேப்ப மரம் உள்ள இடத்தில் குலதெய்வம் குடியிருக்கும். குலம் தழைக்கவும், குடும்பத்திற்கு எந்தக் கெடுதலும் வராமல் இருக்கவும், சுப நிகழ்ச்சிகள் தடையில்லாமல் நடக்கவும், குலதெய்வங்களும் மற்ற தெய்வங்களும் ஆசி வழங்குவார்கள்.

வேப்பமரத்தை வெட்டினால், பிரம்மஹத்தி தோஷம் உண்டாகும். தெய்வத்திற்குச் சமமான தெய்வத்தால் உயிர் பெற்ற வேப்பமரத்தை வெட்டினால் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் பாவம் போகாது. வேப்பமரம் இருக்கும் இடத்தில் துஷ்ட சக்திகள் அண்டாது.

ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும் 

வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும் 

ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும் 

மருத்துவம் பகுதியை படிக்க கிளிக் செய்யவும் 

அறுசுவை சமையல் பகுதியை படிக்க கிளிக் செய்யவும் 

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India 

For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com 

http://www.youtube.com/bhakthiplanet

http://www.facebook.com/bhakthiplanet

For Astrology Consultation CLICK Here

© 2013 bhakthiplanet.com  All Rights Reserved

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech