உடல் எடை குறைய சுலபமான வழி
உடலைக் குறைக்க வேண்டும் என்று சொன்ன உடனே பலரும் நினைப்பது என்ன தெரியுமா? காலை உணவைத் தவிர்த்து விடுவது அல்லது இரவில் சாப்பிடாமல் இருப்பது என்பதுதான். ஏதாவது ஒரு வேளை உணவைத் தவிர்ப்பதன் மூலம் நாம் சாப்பிடும் உணவின் அளவு குறைந்து, அதனால் நம் உடல் எடை குறைந்து விடும் என்று நினைத்தால் இதை விடத் தவறு வேறு எதுவும் இல்லை. நிச்சயம் இந்த வழிமுறை பயன் தராது.
ஏன் தெரியுமா?
ஏதாவது ஒரு வேளை உணவைத் தவிர்ப்பதன் மூலம் அடுத்த வேளை நிச்சயம் இயல்பை விடக் கூடுதலாக சாப்பிட்டு விடுவோம். வழக்காமான கலோரி சக்தியை பெற்றுவிடுவோம்.
சரி, எப்படிக் குறைப்பது? சமச்சீராகக் குறைப்பது தான் சிறந்த வழி. எந்த ஒரு வேளை உணவையும் தவிர்க்காமல் மூன்று வேளை உணவையும் சாப்பிட வேண்டும். ஆனால் குறைவாகச் சாப்பிட வேண்டும். கலோரி சக்தியை அதிகரிக்காத உணவாக அவை இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். அதே சமயம் நம் உடலுக்குத் தேவையான சத்துக்கள் போதுமான அளவுக்ககு இருக்கும் படி சமச்சீராக அமைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு வேளைக்கு சுமார் 400 – 450 கி. கலோரி சக்திக்கு மிகாமல் உணவைத் தேர்வு செய்து மூன்று வேளையும் சாப்பிடுவது நல்லது.
கலோரி குறைவான உணவுப் பொருட்கள் எவை?
பச்சைச் காய்கறிகளான வெண்டை, பீன்ஸ், கத்திரிக்காய், வெள்ளரி, அவரை, முருங்கை, சுரைக்காய், பூசணிக்காய், பாகற்காய், கீரைத்தண்டு, காலிஃபிளவர், கோவைக்காய், நூல்கோல், வாழைப் பூ, வாழைக்காய், வாழைத்தண்டு, பீர்க்கன்காய், புடலங்காய், தக்காளி. வெங்காயம் போன்ற காய்கறிகள் குறைவான கலோரிகள் கொண்டவை. பொதுவாக இவற்றில் சுமார் 15 முதல் 50 கலோரிகள் மட்டுமே கூடும்.
கால் கிலோ சுரைக்காய் அல்லது வெள்ளரிக்காயை ஒருவர் ஒரு வேளை உணவில் சேர்த்துக் கொண்டால் கூட 40 கலோரிகளை தான் இருக்கும். இந்தக் காய்கறிகளை சமைக்கும் போது எண்ணெய் போன்றவற்றை முடிந்த வரை தவிர்ப்பது அல்லது மிக மிக குறைவாகப் பயன்படுத்துவது நல்லது.
கீரைகளும் குறைவான கலோரிகளைக் கொண்டவை தான்.
சீறுகீரை, தண்டுக்கீரை, கேரட்கீரை, முள்ளங்கிக் கீரை, வெந்தயக் கீரை, மணத்தக்காளிக் கீரை, புதினா, பசலைக் கீரை, பருப்புக் கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை போன்று கீரை வகைகளும் 100 கிராம் அளவுக்குப் பயன்படுத்தும் போது சுமார் 50 கலோரிகள் மட்டுமே தரக் கூடியவை.
எனவே உங்கள் உணவு தயாரிப்பில் இது போன்ற கலோரி குறைவான உணவுப் பொருட்கள் அதிகமாக இருக்கும்படி அமைத்துக் கொள்வது நல்லது.
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
மருத்துவம் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
அறுசுவை சமையல் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
http://www.youtube.com/bhakthiplanet