வாயுப் பிரச்சனையை எப்படி தீர்ப்பது?
ஒரு சிலருக்கு மேலும், கீழுமாக காற்று அவ்வப்போது வெளியாகிக் கொண்டே இருக்கும். மேலே வாய் வழியாக வெளியாகும் வாயுவைப் பற்றி பெரிதாக யாரும் கண்டு கொள்வதில்லை. மாறாக கீழே வெளியாகும் வாயு அவ்வப்போது தர்மசங்கடத்தை ஏற்படுத்திவிடும்.
மூக்கு வழியாக உள்ளே சுவாசிக்கப்படும் காற்று முழுவதுமாக நுரையீரலுக்குள் செல்லும். மற்றபடி, வாய் வழியாக உள்ளே இழுக்கப்படும் காற்றின் ஒரு பகுதி நுரையீரலுக்கும் இன்னொரு பகுதி உணவுக்குழாய் வழியாக இரைப்பைக்கும் செல்கிறது.
இரைப்பை என்பது, உணவு செரிமானத்துக்காக அமிலம் சுரக்கும் ஒரு பகுதி. அதனால் இரைப்பைக்கு காற்று என்பதே என்னவென்று தெரியாது. உணவுக்குழாய் வழியாக வரும் காற்றை, அது திருப்பி அனுப்பும். அது தான் ஏப்பமாக வெளியேறுகிறது.
இரைப்பைக்குள் வரும் நூறு சதவீத காற்றில் எண்பது சதவீதம் ஏப்பமாக வெளியேறிவிடும். மீதம் இருக்கும் இருபது சதவீத காற்று, இரைப்பையிலேயே தங்கிவிடும்.
நாம் சாப்பிடும் உணவு செரிமானம் ஆகும்போது, சில இராசாயன மாற்றங்களால் வாயு உருவாகிறது.
சரி வாயுத் தொல்லையால் பிரச்சனையா? என்று கேட்டால், இல்லை என்று உறுதியாகச் சொல்ல முடியாது. பெரிய பிரச்சனை இல்லை என்று சொல்லலாம் என்றாலும் வயிற்றுக்குள் உற்பத்தியான வாயு, வெளியே போவில்லை என்றால் அதுபற்றி நிச்சயம் கவலைப்பட வேண்டும்.
வயிற்றுக்குள் உருவான வாயும் மலமும் வெளியேறித்தான் ஆக வேண்டும். உள்ளேயே தங்கிவிட்டால், பிரச்சனைதான்.
வாயுத்தொல்லை அதிகமாக இருக்க என்னென்ன காரணங்கள் என்பதைப் பார்ப்போம்.
உணவில் கிழங்கு வகைகளை அதிகம் சேர்த்துக் கொண்டால் வாயுத் தொல்லை இருக்கும்.
வாயினால் காற்று விழுங்கும் பழக்கத்தினாலும் வாயுத் தொல்லை இருக்கும்.
அதிகமாகச் சாப்பிடும் போதே, பேசிக்கொண்டு சாப்பிடும்போதோ, நம்மை அறியாமல் விழுங்கப்படும் காற்றும் வாயுத் தொல்லைக்கு ஒரு முக்கிய காரணம்.
சரி வாயுப் பிரச்சனையை எப்படி தீர்ப்பது?
நைட்ரஜன் அதிகம் உள்ள இறைச்சி, பூண்டு வெங்காயம் சேர்ந்த உணவு வகைகளைத் தவிர்க்கவும்.
கிழங்கு வகைகளான உருளைக் கிழங்கு, சேனைக்கிழங்கு, கருணைக் கிழங்கு போன்றவற்றைத் தவிர்க்கவும்.
இப்படி உணவு கட்டுப்பாடுடன் இருந்தாலே வாயுத்தொல்லை நீங்கும்.
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
மருத்துவம் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
அறுசுவை சமையல் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com