Sunday 24th November 2024

தலைப்புச் செய்தி :

தமிழகத்தில் 5 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு: வரும் 25-ம் தேதி 7 மாவட்டங்களில் கனமழை  *  மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை - மத்திய மந்திரிக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் *

துயரங்களை தூக்கி எறியும் ஆஞ்சநேயர்!

Niranjhana

சர்வேஸ்வரனையே ஆட்டிபடைத்தவர் சனீஸ்வரர். அதனால்தான் ஈஸ்வர பட்டத்தை பெற்று, “சனீஸ்வர பகவான்” niranjanaஎனப் போற்றப்படுகிறார். ஆனால் எல்லோரையும் ஆட்டிபடைக்கும் சனீஸ்வரரால், ஸ்ரீ இராம பக்தரான ஆஞ்சநேயரின் பக்தர்களுக்கு மட்டும் பெரிய பாதிப்புகளை செய்ய மாட்டார். காரணம் சனி பகவானின் பிடிக்குள் எப்போதும் சிக்காதவர் ஸ்ரீஅனுமன்.

புராணத்தில் உள்ள இதன் காரணத்தை படித்தாலும், காது கொடுத்து கேட்டாலும் சனி பகவான் மட்டுமல்லாமல் எந்த கிரக கோளாறும் நம்மை பாதிக்காது.

அரசாங்க ஆதரவு வேண்டும் என்று கருதுகிறவர்கள் சூரியனை வணங்கினாலும், ஸ்ரீ ஆஞ்சநேயரையும் வணங்க வேண்டும். அப்படி வணங்குவோருக்கு அரசாங்கத்தால் யோகம் எளிதில் கிட்டும்.

திருமண பாக்கியம் தடை உள்ளவர்கள், பல பரிகாரங்களை செய்திருந்தாலும் கூட, ஆஞ்சநேயருக்கு உகந்த பரிகாரத்தை, அதுவும் நம் வீட்டிலேயே எளிய முறையில் செய்ய இயலுகிற பரிகாரத்தை செய்தால் நிச்சயம் திருமண பாக்கியம் கிடைக்கும் என்று பலர் அனுபவத்தில் உணர்ந்து சொல்கிறார்கள். அது என்ன பரிகாரம் என்பதை தெரிந்துக்கொள்வதற்கு முன்னதாக, “சொல்லின் செல்வன்” என்று பெயர் பெற்ற அனுமனுக்கு “எழுத்து வித்தகர்” என்கிற பெயரும் உண்டு என்பது உங்களுக்கு தெரியுமா?. இன்று ஸ்ரீ இராம பக்தர்கள் வழக்கமாக தினமும் எழுதும் “ஸ்ரீஇராம ஜெயம்“ என்ற மந்திரத்தை முதன் முதலில் எழுதியவரும் ஆஞ்சநேயர்தான்.

எழுத்து வித்தகர் ஆஞ்சநேயர்

இராவணனால் கடத்தப்பட்ட சீதாப் பிராட்டி  சிறை வைக்கப்பட்ட இடத்தை கண்டறிந்த அனுமன், சீதையை சந்தித்து தைரியம் சொன்ன பிறகு, இந்த விஷயத்தை ஸ்ரீ இராமரிடம் சென்று, “சீதையை கண்டேன்.” என்று சொன்னால் முதலில் சீதை என்ற வார்த்தையை கேட்டவுடனே சீதாப் பிராட்டிக்கு ஏதோ ஆகிவிட்டது என்று ஸ்ரீஇராமசந்திர மூர்த்தி எண்ணி விடுவாரோ என்ற அச்சத்தில், “கண்டேன் சீதையை” என்று உரக்க குரல் கொடுத்தார்.

இதை கேட்டManamakkal Malai இராமர், “சொல்லின் செல்வன்” என்று அனுமனுக்கு பட்டம் தந்து பாராட்டினார்.

அதேபோல், “எழுத்து வித்தகர்” என்று சீதை, ஆஞ்சநேயரை பாராட்டிய சம்பவம் ஒன்றும் நடந்தது.

இராவணனை போரில் வீழ்த்தி வென்றார் இராமர். இந்த தகவலை சீதையிடம் சொல்ல அனுமன் சென்றார். அந்த சமயம் சீதையை கண்ட ஸ்ரீஅனுமனுக்கு மகிழ்ச்சியில் பேச்சே வரவில்லை. அவரின் கண்களில் ஆனந்த கண்ணீர்.

ஆஞ்சநேயரின் கண்களில் இருந்து வரும் கண்ணீரை கண்ட சீதை, இராமருக்கு ஏதும் ஆபத்தோ என பயந்து போனார். அப்போது அங்கு இருந்த மணலில், “ஸ்ரீராம ஜெயம்” என்று எழுதினார் அஞ்சநேயர். போரில் ஸ்ரீஇராமருக்கு வெற்றி என்பதை மிக ரத்தின சுருக்கமாக “ஸ்ரீ இராம ஜெயம்” என்று அனுமன் எழுதியதை கண்ட சீதை மகிழ்ந்தார். “எழுத்தின் வித்தகன் நீ” என்று சீதை, அனுமனை பாராட்டினார்.

அனுமன் எழுதி காட்டிய “ஸ்ரீ இராம ஜெயம்” என்கிற வாக்கியம், மந்திர சொல்லாக இன்றும் நமக்கு எண்ணற்ற வலிமையை-ஆற்றலை-நல்வாழ்க்கையை-வெற்றியை தந்துக்கொண்டிருக்கிறது.

சனியை திண்டாட செய்த அனுமன்.

சனீஸ்வரர், தெய்வங்களை ஆட்டிபடைக்க வேண்டிய காலம் வரும்போது அவர்களின் அனுமதி வாங்கியபிறகுதான் பிடிக்க வேண்டும் என்பது ஒரு விதி. அதுபோல ஒரு சமயம், அனுமனை பிடிக்க வேண்டிய நேரம் வந்து விட்டது என்பதால், அனுமாரிடம் சென்ற சனி பகவான், “என் கட்டுப்பாட்டுக்குள் நீ சில காலம் இருக்க வேண்டியது உன் விதி. அதனால் நான் எப்போது வந்து என் கடமையை செய்ய வேண்டும்?” என அனுமதி கேட்டார்.Bhakthi Planet

அதற்கு ஆஞ்சநேயர், “நல்லது. இப்போது நான் ஸ்ரீஇராமசந்திர மூர்த்திக்கு உதவியாக இருப்பதால், இந்த தருணத்தில் நீ என்னை பிடித்தால், இதனால் ஸ்ரீஇராமருக்கு என்னால் உதவ முடியாமல் ஆகிவிடும். அதனால் நான் அழைக்கும் போது நீ வந்து என்னை தாராளமாக பிடித்துக் கொள்.” என்றார் அனுமன்.

தன் நலனுக்காக இல்லாமல் ஸ்ரீஇராமருக்கு உதவி செய்ய வேண்டும் என்கிற சுயநலம் இல்லாத அனுமனின் நல்ல எண்ணத்திற்காக சனிபகவான், “அப்படியே ஆகட்டும். உன் அனுமதியோடு நான் உன்னை பிடிக்கிறேன். ஆனால் என் பொறுமைக்கும் எல்லை உண்டு.  நீ என்னை அழைக்காமல் இருந்தால் உனக்கு கூடுதலாக பல இன்னல்களை கொடுப்பேன். என்னிடம் இருந்து சர்வேஸ்வரனே தப்பிக்க முடியாமல் சிக்கினார் என்பதை நீயும் அறிவாய். அதை மறக்க வேண்டாம்.” என்று கூறி அந்த இடத்தை விட்டு சென்றார் சனி பகவான்.

இராம-இராவண யுத்தத்தில் நாகாஸ்திரத்தால் அடிபட்டு மூர்ச்சையாகிவிட்டார் லட்சுமணர். அவரை உயிர் பிழைக்க வைக்க சஞ்சீவி மூலிகை  வேண்டும் என்று சொல்ல, அந்த மூலிகையை நான் எடுத்து வருகிறேன்.” என சொல்லி புறப்பட்டார் அனுமன்.

சஞ்சீவி மூலிகை இருக்கும் மலைக்கு வந்த அனுமன், வந்த அவசரத்தில் சஞ்சீவி மூலிகை எப்படி இருக்கும்? எவ்வளவு தேவை? என்பதையெல்லாம் கேட்க மறந்தோமே என குழப்பம் அடைந்தார். அந்த மலையில் எண்ணற்ற பல மூலிகைகள் இருந்ததால் சஞ்சீவி மூலிகை எது என்று அனுமனால் அறிய முடியவில்லை. அதனால் அந்த மலையையே பெயர்த்து எடுத்து தன் உள்ளங்கையில் தாங்கி அங்கிருந்து புறப்படும் போது அவருக்கு சனிஸ்வர பகவானின் ஞாபகம் வந்தது. சனி பகவானை அழைத்தார் அனுமன்.

அனுமனை இன்று பிடித்துவிடலாம் என்ற ஆவலில் வந்த சனி பகவானின் முதுகில் அந்த சஞ்சீவி மலையை தூக்கி வைத்தார் அனுமன். இதை சற்றும் எதிர்பாராத சனி பகவான், சஞ்சீவி மலையை சுமந்து வர தயங்கினார். இதனால் தன் விஸ்வரூபத்தை காட்டினார் ஆஞ்சநேயர். சனிபகவான் கதி கலங்கி போனார். அனுமனின் கட்டளைக்கு பணிந்து, தன் முதுகில் மலையை சுமந்துக் கொண்டு வந்தார்.

greensiteசிறிது தூரம் வந்தவுடன் சனி பகவானால் அந்த மலையின் சுமை தாங்க முடியாமல் துவண்டார். “வாயு புத்திரனே என்னை மன்னித்து விடு. சூரியனையே கலங்கடித்தவன் நீ. அவ்வளவு ஆற்றல் படைத்த உன்னை சாதாரணமாக நினைத்துவிட்டேன். ஆனால் இப்போது உன் ஆற்றலை நேரில் கண்டேன். இனி உன்னை நான்  பிடிக்க மாட்டேன். அத்துடன் உன்னை வணங்கும் பக்தர்களுக்கும் நான் இன்னல் தர மாட்டேன். தயவு செய்து என் முதுகில் இருக்கும் இந்த மலையை இறக்கி என்னை விடுவித்து விடு.” என்று ஆஞ்சநேயரிடம் கெஞ்சினார் சனி பகவான்.

சரி போனால் போகட்டும் என்று சனி பகவானின் மீது பரிதாபப்பட்டு, சனி பகவானின் முதுகில் இருந்து மலையை இறக்கி தன் உள்ளங்கையில் அந்த சஞ்சீவி மலையை தாங்கி அங்கிருந்து புயல் வேகத்தில் யுத்த களம் நோக்கி பறந்தார் வாயு புத்திரரான ஆஞ்சநேயர்.

இந்த சம்பவத்திற்கு பிறகுதான் ஆஞ்சநேயரை வணங்கினால் சனிபகவானின் இன்னல்கள் நமக்கு ஏற்படாது என்ற உண்மையை தெரிந்துக் கொண்டாம். ஏழரை சனி, அர்தாஷ்டம சனி, அஷ்டம சனி, போன்றவற்றால் பாதிப்பு அடைந்து வருகிறவர்கள், அனுமனை வணங்குங்கள். அத்துடன் சனி கிழமையில் அனுமாருக்கு வெண்ணை, வடைமாலை, வெற்றிலை மாலை, துளசி இதில் ஏதாவது ஒன்றை ஆஞ்சநேயருக்கு சமர்பித்து வணங்கினால் நிச்சயம் சனீஸ்வர பகவானால் எந்த இன்னலும் ஏற்படாது.

திருமண பாக்கியம் தரும் எளிய பரிகாரம்

வீட்டில் மாலை நேரத்தில் தீபம் ஏற்றி, அனுமார் படத்தில் வால் ஆரம்பிக்கும் பகுதியில் சந்தனபொட்டும், செந்தூரமும் வைத்து வணங்க வேண்டும். இப்படி தினமும் ஒவ்வொரு பொட்டாக வைக்க வேண்டும். வாலின் நுனிபகுதி எந்த நாள் வருகிறதோ அந்த நாளில்  வால் நுனிபகுதியில் சந்தனபொட்டு – செந்தூரம் வைத்து, அனுமார் வாயில் வெண்ணை வைத்து தீப ஆராதனை காட்ட வேண்டும்.

அத்துடன் ஆஞ்சநேயர் கோயிலுக்கு சென்று துளசி மாலை-வெற்றிலை மாலை அணிவித்து உங்கள் பெயருக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். இந்த பரிகாரத்தை சனிகிழமையில் செய்வது விசேஷ நன்மை தரும்.

இப்படி நம்பிக்கையுடன் இந்த பரிகாரத்தை செய்தால் நிச்சயம் திருமண பாக்கியம் கிடைக்கும். இந்த பரிகாரத்தை திருமண பாக்கியத்திற்காக மட்டுமல்லாமல் அனைத்து பிரச்சனைகள் நிவர்த்தி பெறவும் செய்யலாம். அவரவருக்கு என்னென்ன இன்னல்கள் இருந்தாலும் அனைத்து இன்னல்களையும் நீக்கி தன் பக்தர்களின் வாழ்வில் மகிழ்சியை அள்ளி தருவார் ஸ்ரீஇராம பக்தரான அஞ்சனை மைந்தர் ஸ்ரீ ஆஞ்சநேயர்.!

அஞ்சிலேஒன்றுபெற்றான்அஞ்சிலேஒன்றைத்தாவி
அஞ்சிலேஒன்றாகஆரியர்க்காகஏகி
அஞ்சிலேஒன்றுபெற்றஅணங்கைக்  கண்டுஅயலாரூரில்
அஞ்சிலேஒன்றைவைத்தான்அவன்நம்மைஅளித்துக்காப்பான்!

அனுமன் ஜெயந்தி சிறப்பு கட்டுரை பகுதி 1 

ஆட்டி படைக்கும சர்ப்ப தோஷத்தை அடக்குவார் அனுமான்! 

அனுமனுக்கு உகந்தது என்ன? அதன் பலன் என்ன?

2015 New Year Rasi Palan All Rasi Palan Click Here 

SANI PEYARCHI 2014 TO 2017 RASI PALANCLICK HERE

இராகு – கேதுபெயர்ச்சிபலன்கள் 2014-2015 கிளிக்செய்யவும்

Guru Peyarchi Palan 2014-2015  CLICK HERE

ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்

வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும் 

ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும் 

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India 

For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com

http://www.youtube.com/bhakthiplanet

http://www.youtube.com/niranjanachannel

http://www.facebook.com/bhakthiplanet

For Astrology Consultation CLICK Here

© 2014 bhakthiplanet.com  All Rights Reserved

Posted by on Dec 18 2014. Filed under ஆன்மிக பரிகாரங்கள், ஆன்மிகம், ஆன்மிகம், பிற கோயில், பெருமாள் கோயில், முதன்மை பக்கம். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech