பிரசவ மருத்தவர் குங்குமப்பூ-அன்றாட வாழ்வுக்கு உபயோகமான டிப்ஸ்-பகுதி–4
ஜீரணசக்தியை கொடுக்கும் வாழை பழம்
வயிற்றை கிள்ளும் பசி நேரத்தில் அறுசுவை உணவாக இருப்பது எங்கும் குறைந்த செலவில் கிடைக்கிற வாழை பழம். பசிக்கு மட்டுமல்ல நல்ல மருத்துவ குணமும் கொண்டது வாழை பழம். இது. ஜீரணசக்தியை கொடுக்கும். வாழைபழத்தில் தரமான விளக்கெண்ணையை ஒரு சொட்டுவிட்டு சாப்பிட்டால் மலசிக்கல் நீங்கி விடும். உடல் உஷ்ணத்தால் அவதிப்படுபவர்கள் வாழைபழத்தை தினமும் ஒன்று சாப்பிட்டு வந்தால் உடலில் இருக்கும் உஷ்ணத் தன்மை நீங்கும்.
வைட்டமி ஏ, கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், இரும்பு சத்து, குளுக்கோஸ் போன்றவை வாழை பழத்தில் இருப்பதால், உடலுக்கு நன்மையை தருகிறது. அதுபோல, நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கும். அஜீரணம், மூலநோய், உடல்சொர்வையும் போக்குகிறது. தினமும் ஒரு டம்ளர் பாலுடன் வாழைபழத்தை சாப்பிட்டு வந்தால் மருத்துவரிடமே போக வேண்டாம்.
எவ்வளவ உணவு சாப்பிட்டாலும் உடல் எடை ஏறவில்லையே என்கிற கவலையா? அப்படி என்றால் அதற்கும் சிறந்த மருந்து வாழைபழம்தான். உடல் மெலிந்து இருப்பவர்கள் தினமும் இரண்டு வாழைபழம் சாப்பிட்டு வந்தால் உடலின் எடை கூடும். ஆனால் சர்க்கரை நோயாளிகள் வாழைபழம் சாப்பிடக் கூடாது.
ரத்தத்தை உற்பத்தி செய்யும் அத்திப்பழம்
நன்றாக சாப்பிடுபவர்களாக இருந்தாலும் சிலர் சோர்வாகவே உணர்வார்கள். இதற்கு காரணம் உடலில் தேவையான அளவு ரத்தம் இல்லாததே. இதற்கு சிறந்த பழம் – அத்திப்பழம். தினமும் இரண்டு அத்திப்பழத்தை இரவில் சாப்பிட்டு, பால் அருந்தினால் ரத்தசோகை நீங்கும். அதுபோல, பித்தத்தால் ஏற்படும் வியாதிகளும் நீக்கும். முகம் பொலிவு பெறும். வைட்டமின் பி2 இருப்பதால் வயிற்றுப்போக்கை தீர்க்கிறது. வைட்டமின் ஏ, இருப்பதால் மாலைக்கண் நோய், சுவாசகோளாறு போன்றவற்றுக்கும் மிக சிறந்த மருந்து அத்திப்பழம்.
நச்சு தன்மை அகற்றும் மணத்தக்காளிக் கீரை
வயிற்றில் புண் இருந்தால் அதனை குணப்படுத்தும் தன்மை மணத்தக்காளிக் கீரைக்கு உண்டு. வயிற்றுக்கு தேவையான குளிர்ச்சியை தரும். வாய் துர்நாற்றம் போக்கும். ரத்தத்தில் இருக்கும் நச்சு நீரை வெளியேற்றும். நாள்பட்ட நோயாக இருந்தாலும் விலகி விடும். அதிகபட்சம் நோய் வருவதற்கு காரணம் உடல் உஷ்ணத்தால்தான் என்பதால், அந்த உடல் உஷ்ணத்தை போக்கும் ஆற்றல் மணத்தக்காளி கீரைக்கு இருக்கிறது.
தொண்டை கரகரப்பை போக்கும் அதிமதுரம்
அதிமதுரம். இது, பார்ப்பதற்கு மரதுண்டுபோல இருக்கும். குளிர்ச்சிதன்மை கொண்டது. உடலுக்கு குளிர்ச்சியை தரும். இனிப்பாக இருக்கும். தொண்டை அடைப்பு இருப்பவர்கள், தொண்டை கரகர என்று இருப்பவர்கள், இந்த அதிமதுரத்தை சாப்பிட்டால் தொண்டை அடைப்பும், கரகரப்பும் நீங்கும். உடலுக்கு தேவையான குளிர்ச்சியை தந்திடும். தலைமுடி நன்றாக வளர உதவும். எலும்பை பலப்படுத்தும். உடலில் இருக்கும் புண்களை ஆற்றும் சக்தி படைத்தது. அதிமதுரத்தை தூள் செய்து ஒரு சிட்டிகை அளவு எடுத்து, தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் ஆயுள் முழுவதும் எந்த வியாதியும் ஏற்படாது. அதனால் இதை மருத்துவ மூலிகை என்று கூறுவார்கள்.
பிரசவ மருத்தவர் குங்குமப்பூ
குங்குமப்பூ என்றவுடன் அனைவருக்கும் நினைவுக்கு வருவது கர்ப்பவதி பெண்கள் குங்குமப்பூவை பாலில் சிறிய அளவு போட்டு சாப்பிட்டால் குழந்தை சிகப்பாக பிறக்கும் என்று கூறுவார்கள். இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியாது.
ஆனால் குங்குமப்பூவுக்கு அற்புதசக்தி இருக்கிறது என்பது மட்டும் உண்மை. குங்குமப்பூவை தினமும் பாலில் 5 நிமிடம் ஊற வைத்து கர்ப்பமாக உள்ள பெண்கள் அருந்தினால், அந்த கர்ப்பவதியின் ரத்தம் சுத்தகரிக்கபடும். நன்றாக பசி எடுக்கும். பொதுவாக தாய்மை அடைந்த பெண்களுக்கு பசி உணர்வு இருக்காது. இதனால் சரியாக சாப்பிடாமல் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு போதிய ஆகாரம் இல்லாமல் அவதிப்படும். வயிற்றில் இருக்கும் குழந்தையின் கஷ்டத்தை போக்கும் ஆற்றல் குங்குமப்பூவுக்கு இருக்கிறது.
குங்குமப்பூவை தொடர்ந்து பாலில் ஊற வைத்து அருந்தி வந்தால் நன்றாக பசி எடுக்கும். இதனால் குழந்தைக்கு நல்ல உடல் வலிமை கிடைக்கும். அந்த தாய், ஆரோக்கியமான குழந்தையை பிரசவிக்கும். ஆரோக்கியமான குழந்தை பிறப்பதே அழகுதானே.
எந்த நோய்நொடியும் இல்லாமல் அடுத்த தலைமுறை பிறக்க வேண்டும் என்பதுதானே தாய்மார்களின் பிராத்தனை. அந்த பிராத்தனையை குங்குமப்பூ நிறைவேற்றி தரும்.
பொதுவாகவே அனைவருமே குங்குமப்பூவை பாலில் ஊற வைத்து சாப்பிடலாம். இதனால் ரத்தத்தில் இருக்கும் நச்சு நீர் வெளியேறும். அலர்ஜி நீங்கும், நன்றாக பசி எடுக்கும், உடல் வலிமை பெறும்.!
மேலும் மருத்துவ பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்.
http://www.youtube.com/bhakthiplanet
ஆன்மிக பரிகார கட்டுரை படிக்கவும்
சிவன் கோயி்ல், அம்மன் கோயில், முருகன் கோயில், பெருமாள் கோயில், பிற கோயில்கள்
இலவச ஜோதிட கேள்வி–பதில் பகுதிக்கு கிளிக் செய்யவும்
For Astrology consultation Click Here
© 2012 bhakthiplanet.com All Rights Reserved