சருமநோய் தீர்க்கும் கொய்யப்பழம் – அன்றாட வாழ்வுக்கு உபயோகமான டிப்ஸ்-பகுதி–3
சருமநோய் தீர்க்கும் கொய்யப்பழம்
சருமநோய் தொந்தரவுகள் இப்போது அதிகமானவர்களுக்கு இருக்கிறது இதன் காரணம் வைட்டமி சி குறைபாடு. பிரிட்டிஷ் கடற்படையினர் தங்கள் கப்பல்களில் பயணம் செய்பவர்களுக்கு சர்மவியாதிகள் வராமல் தடுக்க எலுமிச்சை பழச்சாற்றை கொடுத்தார்கள். அதுபோல கொய்யாப்பழத்திலும் வைட்டமி சி இருக்கிறது. கொய்யாப்பழம் சாப்பிட்டால் சர்மவியாதிகள் நீங்கும். அத்துடன் இருதயத்தை பலப்படுத்தும். மலசிக்கலால் அவதிப்படுபவர்கள், தினமும் ஒரு கொய்யப்பழத்தை சாப்பிட்டு வந்தால் மலசிக்கல் பிரச்சனை தீரும். ரத்தசோகைக்கும் நல்ல மருந்து கொய்யப்பழம். ஐதராபாத்தில் உள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் சிறந்த பழங்களை பட்டியலிட்டப்போது அதில் முதல் இடம் பிடித்தது கொய்யப்பழம்தான்.
தினமும் கொய்யப்பழம் சாப்பிட்டால் ரத்தசோகை, இருதயபாதிப்பு, சருமவியாதி இவ்வனைத்தும் நீங்கும்.
நீரிழிவு நோய்யை கட்டுபடுத்தும் நெல்லிகாய்.
நெல்லிக்காயில் உவர்ப்பும், புளிப்பும் சேர்ந்து இருக்கிறது. நெல்லிக்காயில் வைட்டமின் சி, கால்சியம், இரும்புசத்தும் இருக்கிறது. இது உடல் உஷ்ணத்தையும் கட்டுபடுத்தும். ஒரு நெல்லிக்காய் மூன்று நான்கு ஆப்பிளுக்கு சமம் என்கிறது மருத்துவம். நெல்லிக்காயை அனைவரும் சாப்பிடலாம். ஆயுளை பலப்படுத்தும். சிலருக்கு வயிற்றில் உஷ்ணம் அதிகமானால் வாய் துர்நாற்றம் ஏற்படும். அவர்களுக்க நெல்லிக்காய் நல்ல மருந்து. நெல்லிக்காயை சாப்பிட்டு வந்தால் வயிற்றில் இருக்கும் உஷ்ணத்தையும், வாய் துர்நாற்றத்தையும் தீர்க்கும். அத்துடன் நெல்லிக்காய், இன்சுலின் சுரப்பதை தூண்டுகிறது. இதனால் இரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவை குறைக்கிறது. நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் ஏற்றது நெல்லிக்காய்.
தலைமுடி நன்றாக வளர
நெல்லிக்காய், வெந்தயம், கருவேப்பிலை இந்த மூன்றையும் சிறிது அளவு எடுத்து வெயிலில் நன்றாக காயவைத்து, பிறகு அதை அரைத்து தேங்காய் எண்ணெயில் கலந்து. அடுப்பில் வைத்து காய்ச்சவேண்டும். ஆனால் அதிகமாக சூடாக்கக் கூடாது. மிதமாக சூடாக்கி, அந்த தேங்காய் எண்ணெய்யை ஒரு பாட்டிலில் ஊற்றிவைத்து கொண்டு, தினம் தலையில் தேய்த்து வந்தால் துலைமுடி நன்றாக வளரும். முடி உதிர்வை தடுக்கும்.
தேகத்தை பளபளப்பாக்கும் பால்
உடலில் இருக்கும் கருமையை நீக்க, தினமும் பசும்பாலை உடலில் தேய்த்து 10 நிமிடம் ஊற வைத்த பிறகு குளித்தால், உடலில் இருக்கும் கருமை நிறம் குறையும். தேகம் பளபளப்பாக இருக்கும்.
கண்நோய் தீர்க்கும் மாம்பழம்
மாம்பழம். இதில் ’வைட்டமி ஏ’வும், இரும்பு சத்தும் இருக்கிறது. மாம்பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் ரத்தவிருத்தியாகும். உடலுக்கு நல்ல சக்தி கிடைக்கும். தோல்நோயும் நீங்கும். முகப் பொலிவு இல்லாதவர்கள், தினமும் மாம்பழத்தை சாப்பிட்டு வந்தால் முகம் பொலிவு பெறும். உடலும் புஷ்டியாக மாறும். வைட்டமின் ஏ குறைவினால் கண் பார்வை குறைவு ஏற்படுகிறது. கண்நோய் தீர மாம்பழம் சாப்பிடலாம். ஆனால் நீரிழிவு நோயாளிகள் மாம்பழத்தை சாப்பிடக் கூடாது.
மருத்துவம் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
http://www.youtube.com/bhakthiplanet
ஆன்மிக பரிகார கட்டுரை படிக்கவும்
Click here for 2012 New Year Rasi Palan / 2012 புத்தாண்டு இராசி பலன்கள் CLICK செய்யவும்
சனி பெயர்ச்சி பலன்களுக்கு இங்கே CLICK செய்யவும்
சிவன் கோயி்ல், அம்மன் கோயில், முருகன் கோயில், பெருமாள் கோயில், பிற கோயில்கள்
இலவச ஜோதிட கேள்வி-பதில் பகுதிக்கு கிளிக் செய்யவும்
For Astrology consultation Click Here
© 2012 bhakthiplanet.com All Rights Reserved