Thursday 26th December 2024

தலைப்புச் செய்தி :

யோகத்தை தரும் சுக்கிரன் வழிபாடு

நிரஞ்சனா

ஒருவருக்கு சுகபோகவாழ்க்கை அமைந்தால், “அவர்களுக்கு என்னயா சுக்கிரதிசை” என்பார்கள். ஒருவரின் வாழ்வை உயர்த்தும் அந்தஸ்து சுக்கிரனுக்கு மட்டுமா உள்ளது என்றால் அப்படியில்லை. நவகிரகங்களுக்கும் அதிர்ஷ்டம் தருகிற ஆற்றல் இருக்கிறது. இருந்தும் ஏன் சுக்கிரனை மட்டும் இப்படி சொல்கிறார்கள் என்பதை பற்றி இந்த கட்டுரையில் தெரிந்துக்கொள்வோம்.

சுக்கிரபகவான் அசுரர்களுக்கு குருவாக இருப்பவர். இவருடைய பெயர் சுக்கிரசாரியார் என்றும், பார்க்கவன் என்றும் அழைக்கப்படுகிறார். சிவபெருமானை நினைத்து தவம் செய்து, அமிர்த சஞ்சீவி என்ற மந்திரத்தை கற்றார். இந்த மந்திரத்திற்கு ஒரு முக்கிய ஆற்றல் இருக்கிறது. அது என்னவென்றால், இறந்தவர்களுக்கு மீண்டும் உயிர் தரும் ஆற்றல் வாய்ந்த மந்திரம் அது.

சுக்கிரபகவானின் நல்ல குணத்தை கண்டுதான் சிவபெருமான் இந்த மந்திரத்தை சொல்லிகொடுத்தார்.   இவருடைய வாகனம் கருடன். பெருமாளுக்கு உகந்த கருடவாகனம் பெற்றவர். பார்ப்பதற்கு வெள்ளை உருவமாக இருப்பதால் இவர் வெள்ளி என்றும் அழைக்கப்படுகிறார்.

திருமால், வாமன அவதாரத்தில் மகாபலி சக்கரவர்த்தியிடம் மூன்றடி நிலம் கேட்டார். வந்திருப்பது பெருமாள் என்பதை உணர்ந்து கொண்ட சுக்கிரசாரியர், மகாபலி சக்கரவர்த்தியிடம், மூன்றடி மண் தரவேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். ஆனால் மகாபலியோ சுக்கிரனின் பேச்சை கேட்காமல் இருந்ததால் சுக்கிரசாரியர், வண்டாக உருவெடுத்து கமண்டலத்தின் வழியில் நீர் வெளியேற முடியாதபடி அடைத்துக்கொண்டார்.




இதனால் மகாபலி சக்கரவர்த்தி. கமண்டலத்தின் நீர் வெளியேறும் பகுதியில் தர்ப்பைப்புல்லை விட்டு அடைப்பை நீக்க முயற்சித்தார். இதனால் வண்டின் உருவத்தில் இருந்த சுக்கிரசாரியாரின் ஒரு கண்ணில் தர்ப்பை புல் அடிப்பட்டு சுக்கிரசாரியர் ஒரு கண்பார்வையை இழந்தார்.

தன் நலத்தைவிட தன்னை நம்பி இருப்பவர்களின் நலமே பெரியதென்று இருக்கும் இவர், உண்மையானவர் – நல்ல மனம் படைத்தவர் என்பதை உணர்ந்தார் விஷ்ணுபகவான். இதனால் சுக்கிரபகவானின் மீது மதிப்பு வைத்திருந்தார்.

சுக்கிரபகவானின் தேஜஸ் குறைந்தது

ஒருநாள் சுக்கிரபகவானின் உடலில் ஒளி, குறைந்து கொண்டே வந்தது. ஏன் தன்னிடம் இருக்கும் சக்தி இப்படி குறைந்து போய்க் கொண்டே இருக்கிறது என்பதை அறிந்த கொள்ள, மானஸத் தாடகக் கரையில் தவம் செய்தார். அப்போது ஒரு அசரிரீ குரல் ஒலித்தது.

“பார்க்கவரே… நீ நல்லவைக்கு துணை இருந்தாலும், அசுரர்களுக்கு குருவாக இருப்பதால் உனது உடலில் இருக்கும் தேஜஸ் குறைந்து கொண்டே வருகிறது. இதனால் நீ பல திருதலங்களுக்கு சென்று வழிபடு. எந்த திருதலத்தில் உனது உடலின் தேஜஸ் திரும்ப கிடைக்கிறதோ, அந்த இடத்தில் உனது தோஷங்கள் நீங்கிவிட்டது என்பதை உணர்ந்துகொள்.” என்றது அசரிரீ.

இதை கேட்ட சுக்கிரசாரியார், பல திருதலங்களுக்கு சென்றார். ஆனால் எந்த தலத்திலும் அவருடைய நல்ல தேஜஸ் திரும்ப கிடைக்கவில்லை. “என்ன இது பெரிய சோதனையாக இருக்கிறதே” என்று மனம் வருத்தியபடி, திருவரங்கம் சென்றார். அங்கே அற்புதம் நிகழ்ந்தது. ஆம், அவருடைய நல்ல தேஜஸ் திரும்ப கிடைத்துவிட்டது. இதனால் மகிழ்ச்சியடைந்த  சுக்கிரசாரியர், திருவரங்கம் அரங்கநாத சுவாமியை வணங்கி பெருமாளின் ஆசியை பெற்றார்.

ஒருவருடைய ஜாதகத்தில் சுக்கிரதசை, இருபது வருடங்கள். இக்காலகட்டத்தில், ஸ்ரீரங்கநாதரை வணங்கினால் சுக்கிரனால் கிடைக்கும் நன்மைகள் தடையின்றி கிடைக்கும். ஒரு வேலை, சுக்கிரன் ஒருவருடைய ஜாதகத்தில் சரியில்லாமல் இருந்தால், ஸ்ரீரங்கநாதரையும் – மகாலட்சுமியையும் வணங்க வேண்டும்.

பொதுவாக ஜாதகத்தில் சுக்கிரன் சரியில்லாமல் இருந்தால், கலைதுறையில் மேன்மை தராது.  அதனால் சுக்கிர தோஷம் இருப்பவர்கள்,  வெள்ளை தாமரையை லட்சுமி படத்தின் முன்வைத்து வணங்கவேண்டும். வெள்ளி தோறும் நவகிரக சந்நிதியில் இருக்கும் சுக்கிரபகவானின் முன், தாமரை திரி தீபத்தை ஏற்றி சுக்கிரபகவானுக்கு ஆராதனை செய்துவழிபட்டால், கலைதுறையில் ஏறுமுகத்தை காணலாம்.

வெள்ளிகிழமையில் மொச்சையை வைத்து வணங்கலாம். ஒருபிடி வெள்ளை சாதத்தில் மொச்சையை கலந்து, காக்கைக்கு வைத்து வந்தால் சுக்கிரதோஷம் நீங்கும். முடிந்தால் வெள்ளிதோறும் மொச்சை பருப்பை பத்து பேருக்காவது தானம் கொடுத்தால் இன்னும் பல நன்மைகள் ஏற்படும்.

வெள்ளிதோறும் சுக்கிர பகவானுக்கு பிடித்த இனிப்பை வைத்து வணங்கினால் ஜாதகத்தில் இருக்கும் சுக்கிரதோஷம் நீங்கும். திருமண தடை விலகும்.

வெள்ளியின் நிறம் வெள்ளை. அது சுக்கிரனின் ஆதிக்கம். சுக்கிரனுக்குரிய வெள்ளியில் செய்த கொலுசை பெண்கள் காலில் அணிந்தால் முகம் பொலிவு பெறும். உடல் வலிமை பெறும். சுக்கிரனை வணங்கி சுபிக்ஷம் பெறுவோம்.




குரு பெயர்ச்சி பலன்கள் 2012-2013 | Guru Peyarchi Palan 2012-2013 VIDEO      

2012-2013 குரு பெயர்ச்சி பலன்கள்   

http://www.youtube.com/bhakthiplanet

ஜோதிட கட்டுரை படிக்கவும் 

வாஸ்து கட்டுரை படிக்கவும்

ஆன்மிக பரிகார கட்டுரை படிக்கவும்

Click here for 2012 New Year Rasi Palan / 2012 புத்தாண்டு இராசி பலன்கள் CLICK செய்யவும் 

சனி பெயர்ச்சி பலன்களுக்கு இங்கே CLICK செய்யவும்

சிவன் கோயி்ல், அம்மன் கோயில், முருகன் கோயில், பெருமாள் கோயில், பிற கோயில்கள்

CLICK FOR VIDEO PAGE

editor@bhakthiplanet.com

இலவச ஜோதிட கேள்வி-பதில் பகுதிக்கு கிளிக் செய்யவும் 

For Astrology consultation Click Here

© 2012 bhakthiplanet.com  All Rights Reserve

Posted by on Jun 8 2012. Filed under அம்மன் கோயில், ஆன்மிக பரிகாரங்கள், ஆன்மிகம், ஆன்மிகம், கோயில்கள், பெருமாள் கோயில். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »