Saturday 27th April 2024

தலைப்புச் செய்தி :

2023 ஆங்கில புத்தாண்டு இராசி பலன்கள். நன்மை என்ன? தெரிந்துக்கொள்வோம்!

Astrologer, Sri Durga Devi upasakar, G.Krishnarao Phone Number: 98411 64648

அன்பார்ந்த பக்தி பிளானட் அன்பர்களுக்கு வணக்கம். ஸ்ரீதுர்காதேவி உபாசகரின் ஆசிகள். புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த புத்தாண்டில் நல்ல பலனை பலர் பெற இருக்கிறார்கள். இந்த புத்தாண்டில் 12 இராசிகாரர்களுக்கு மிக சுருக்கமாக பலன் சொல்ல இருக்கிறேன். நன்மை, தீமைகள் வாழ்க்கையில் வருவது சகஜம். இப்பொழுது 2023-இல் அவரவர் இராசிக்கு கிடைக்க இருக்கும் நன்மைகளை மட்டும் நான் சொல்கிறேன்.

மேஷ இராசி : பாக்கியஸ்தானத்தில் 5, 6-க்குரிய சூரியன், புதன் அமர்ந்து எதிர்பாரா தனயோகம் தர இருக்கிறார்கள். நிலம், வீடு வாங்கும் யோகம் உண்டு. 10-இல் சுக்கிரன், சனி. தொழில்துறை அருமையாக இருக்கும். உத்தியோகம் சிலருக்கு உயர்வு தரும். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். சுபகாரியம் கைகூடும்.

 

ரிஷப இராசி :  பாக்கியஸ்தானத்தில் இராசியாதிபதி சுக்கிரனும், பாக்கியாதிபதி சனியும் கூடி குடும்பத்தில் சுபநிகழ்ச்சி செய்ய வைக்கும். திருமணம் நடக்கும். வண்டி, வாகனம் யோகம் உண்டு. பெற்றோருக்கு மகிழ்ச்சி தரும் வருடம் இது. லாபத்தில் குரு இருப்பதால், அயல்நாடு செல்லும் யோகம் உண்டு. நண்பர்களால் உதவிகள் கிடைக்கும்.

 

மிதுன இராசி : சப்தமத்தில் சூரியன், புதன் அமர்ந்து இருப்பதால் வழக்கு இருந்தால் வெற்றி பெறும். வீட்டை புதுபிக்க வேண்டிய தருணம் இது. புத்திரபாக்கியம் உண்டாகும். தடைப்பட்ட கல்வி தொடரும். அரசாங்கத்தால் உதவிகள் வரும். பஞ்சமத்தில் கேது இருப்பதால், தெய்வ வழிபாடு அதிகரிக்கும். ரோக நிவர்த்தி ஆகும்.

 

கடக இராசி : பாக்கியத்தில் குரு ஆட்சி பெற்று அமர்ந்துள்ளதால் எடுத்த காரியம் வெற்றி பெறும். எண்ணங்கள் ஈடேறும். தூர இடங்களில் இருந்து சுப செய்திகள், பணவரவு வரும். இதுவரை வாடகை வீட்டில் வசித்தவர்கள் சொந்த விட்டில் குடியேற வாய்ப்பு வரும். சப்தமத்தில் சுக்கிரன், புதன் உள்ளதால், பல நாட்கள் வாட்டியெடுத்த நோய் விலகும்.

 

சிம்ம இராசி : பஞ்சமத்தில் சூரியன், புதன். அருமையான நேரம். புஷ்கல யோகம் இருப்பதால், எதிர்பார்த்தது கைக்கு வரும். சிந்தித்து செயல்பட வேண்டும். இதுவரை மனகுழப்பத்தில் இருந்தவர்கள் மகிழ்ச்சி செய்தி கேட்பார்கள். பிள்ளைகளால் நன்மைகள் வரும். 10-இல் செவ்வாய் உள்ளதால், அரசாங்க ஆதரவு வரும். வழக்கு இருந்தால் வெற்றி உண்டு.

 

கன்னி இராசி : சப்தமத்தில் குரு உள்ளார். துவண்டு இருந்தவர்கள் வெற்றி நடை போட வைக்கும். காசுக்கு பஞ்சம் இல்லை. அயல்நாடு வேலைக்கு போக வைக்கும். உறவினர் உதவிகள் வரும். வண்டி, வாகனம் வாங்கும் யோகம் உண்டு. சுகஸ்தானத்தில் சூரியன், புதன் இருப்பதால் தடைபட்ட கல்வி தொடரும். மேல் படிப்பு, பட்டபடிப்பில் கவனம் செலுத்துவீர்கள். வெற்றி உண்டு.




துலா இராசி : சுகஸ்தானத்தில் சுக்கிரன், சனி இருப்பதால், நீண்ட காலமாக இருந்த வழக்கு, குடும்ப பிரச்னை தீரும். உடல்நலம் பெறுவீர்கள். பயணங்கள் அதிகரிக்கும். உத்தியோக உயர்வு உண்டு. குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடைபெறும். பெற்றோர் உடல்நலனில் கவனம் தேவை. இடமாற்றம் சிலருக்கு வரும். கொடுக்கல்-வாங்கலில் மட்டும் கவனம் தேவை. பொருளாதரம் அதிகரிக்கும்.

 

விருச்சிக இராசி : தனஸ்தானத்தில் சூரியன், புதன் இணைந்து இருப்பதால், தனவரவு பெரும் யோகத்தை தரும். பஞ்சமத்தில் குரு பகவான், தெய்வ அனுகூலம் உண்டு. நீண்டகாலம் திருமண தடைபட்டவர்களுக்கு திருமணம் நடக்கும். உடல்நலனில் ரோக நிவர்த்தி ஆகும். நண்பர்களால் நன்மை உண்டு. வேலை வாய்ப்பு கிடைக்கும். பெற்றோருக்கு சற்று செலவுகள் வரும். மனகுழப்பம் நீங்கி மகிழ்ச்சியான வாழ்க்கை வரும்.

 

தனுசு இராசி : இராசியில் 9, 10-க்கு உரிய சூரியன், புதன் அருமையான காலம் இது. மண்ணும் பொன்னாகும். குடும்பத்தில் பெரும் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். பதவி உயர்வு உண்டு. பயணங்கள் அதிகரிக்கும். கடன்கள் கரைந்து போகும். உடன்பிறப்பால் நன்மைகள் உண்டு. தொழில்துறையில் முன்னேற்றம் கிடைக்கும். லாபம் அதிகரிக்கும். புதிய தொழில் துவங்கவும் வாய்ப்பு வரும்.

 

மகர இராசி : இராசியாதிபதி சனி, 5-க்குரிய சுக்கிரன் அருமையாக இணைந்துள்ளனர். திட்டங்கள் நிறைவேறும். வராத கடன் கைக்கு வரும். பூர்வீக சொத்தில் குழப்பம், வழக்கில் தீர்வு கிடைக்கும். புதிய வீடு அமையும். புத்திர பாக்கியம் உண்டு. வெளிநாட்டில் வேலைக்கான அழைப்பு வரும். குடும்பத்தில் நிம்மதி கிடைக்கும். வாகனம் புதுபிக்கும் காலம் இது.

 

கும்ப இராசி : தனஸ்தானத்தில் குரு பகவான் உள்ளார். இதற்கு மேல் என்ன வேண்டும்?. கைக்கு கை பணம் வரும். வாக்கு பலிதம் கொடுக்கும். சொல்லும் சொல்லுக்கு மதிப்பு உண்டு. இதுவரை வாடகை வீட்டில் இருந்தவர்கள் சொந்தமாக வீடுகட்டும் பாக்கியம் பெறுவர். பழைய வண்டி புதுப்பிக்கும் சந்தர்ப்பம் வரும். 10-இல் சனியும், புதனும் உள்ளதால் தொழில்துறையில் மாற்றம் தருவார்கள். நலிந்த தொழில் நன்றாக முன்னேறும்.

 

மீன இராசி : லாபத்தில் சுக்கிரன், சனி உள்ளனர். தொட்டது துலங்கும். அலைச்சல் குறையும். தடைபட்ட கல்வி தொடரும். வீட்டில் சுபநிகழ்ச்சி நடைபெறும். குடும்பத்தில் இருந்த பிளவு நீங்கும். பிரயாணங்கள் அதிகரிக்கும். உத்தியோக மாற்றம் வரும். கடன் பிரச்னை சற்று விலகும். உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கவனமாக இருங்கள்.

ஜோதிட ஆலோசனைக்கு இங்கே பார்க்கவும்…

ஒரு பக்க ஜாதகம் ரூ.59/-க்கு பெற இங்கே பார்க்கவும்.

எங்கள் EBOOKS பெற இங்கே பார்க்கவும்.

Send your feedback to: editor[at]bhakthiplanet[dot]com

For Astrology Consultation Mail to: bhakthiplanet[at]gmail[dot]com

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, G.Krishnarao Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India

நமது Twitter பக்கம்

https://www.youtube.com/bhakthiplanet

https://www.youtube.com/niranjanachannel

https://www.facebook.com/bhakthiplanet

For Astrology Consultation CLICK Here

© 2011-2022 bhakthiplanet.com  All Rights Reserved

Posted by on Dec 30 2022. Filed under Astrology, Headlines, Home Page special, இராசி பலன்கள், செய்திகள், ஜோதிடம், முதன்மை பக்கம். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech