Saturday 4th May 2024

தலைப்புச் செய்தி :

ஆட்டி படைக்குமா சந்திராஷ்டமம்?

Astrologer, Sri Durga Devi upasakar, G.Krishnarao

ஜாதகத்தில் ராசிக்கு 8-இல் சந்திரன் அமர்ந்துவிட்டால் அன்றைய தினம் சந்திராஷ்டமம் ஆரம்பம். இராசிக்கு 9-ஆம் வீட்டுக்கு சந்திரன் மாறும்வரை சந்திராஷ்டமம்தான். பலருக்கு சந்திராஷ்டமம் பெரும் அவதிக்குள்ளாகிறது. உடம்பும் பிரட்டி எடுக்கிறது. திசாநாதனோ, புக்திநாதனோ பாதகமாக இருந்தால் சந்திராஷ்டமம் அவர்களை ஒருபாடு படுத்திவிடும்.

சிவனே என்று இருந்தாலும் வீண் வம்பு, உடலில் அடிபடுதல், பிரயாணத்தில் அலைச்சல் என்று ஏற்படுத்துகிறது. பொதுவாக சொல்ல வேண்டும் என்றால் நாய்படும் பாடுதான். மனசஞ்சலம், தேவையில்லா சண்டை, சச்சரவு வரும். ஆகவே சந்திராஷ்டம தினத்தில் எந்த நல்ல காரியத்தையும் செய்ய வேண்டாம். குறிப்பாக, உடல்நலனில் அறுவை சிகிச்சை செய்தாலும் பார்த்து செய்யுங்கள். மிகுந்த பிரச்னைகள் கொடுப்பது இந்த சந்திராஷ்டமம்.

இதை போலவே ராசிக்கு 3, 6 ,8, 12-இல் சந்திரன் கேதுவுடனோ, இராகு உடனோ, சனியுடனோ சேர்ந்தாலும் அன்றைய தினம் படாதபாடுதான். அன்றைய தினம் சாதாரணமாக இருக்காது. பல சமயங்களில் நம்மை கோபம் அடைய செய்யும் சூழ்நிலை உருவாகும். பயணத்தில் தடங்கல், குடும்பத்தில் பெரிய சச்சரவுகள் உண்டாக்கிவிடும். ஒன்றை ஒன்பதாக்கிவிடும். பேய்படும் பாடுதான். ஆகவே சந்திராஷ்டமம் மட்டுமல்ல, கேது உடனோ, ராகு உடனோ, சனியுடனோ சந்திரன் சேரும் நாளும், அதிலும்,  3, 6 ,8, 12-இல் சேரும்போதும் ஆட்டி படைக்கும்.

ஆகவே சந்திரன் 9-ஆம் இடத்திற்கு செல்லும் நாள்வரை கவனமாக இருப்பது நல்லது.




ஜோதிட ஆலோசனைக்கு இங்கே பார்க்கவும்…

ஒரு பக்க ஜாதகம் ரூ.59/-க்கு பெற இங்கே பார்க்கவும்.

எங்கள் EBOOKS பெற இங்கே பார்க்கவும்.

Send your feedback to: editor@bhakthiplanet.com

For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, G.Krishnarao Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India

நமது Twitter பக்கம்

https://www.youtube.com/bhakthiplanet

https://www.youtube.com/niranjanachannel

https://www.facebook.com/bhakthiplanet

For Astrology Consultation CLICK Here

© 2011-2022 bhakthiplanet.com  All Rights Reserved

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech