Saturday 27th April 2024

தலைப்புச் செய்தி :

நித்தி நீ சொன்னது நடக்கிறது?

 

Astrologer, Sri Durga Devi upasakar, G Krishnarao.

நித்தியானந்தா என்னும் ராஜசேகர், திருவண்ணாமலையில் ஒரு ஏழை விவசாயி குடும்பத்தில் பிறந்தவர். பிற்காலத்தில் நித்தியானந்தா என்று தனக்கு தானே பெயர் சூட்டிக்கொண்டார். இவர் 01.01.1978 அன்று திருவண்ணாமலையில் பிறந்தார். ஜாதகப்படி மீன லக்கினம், கன்னி ராசி, உத்திர நட்சத்திரம். முக்கியமாக ஒருவரின் ஜாதகத்தில் லக்கினம், 5-ஆம் இடம், 9-ஆம் இடம் அருமையாக இருக்க வேண்டும். இவருடைய ஜாதகத்தில் லக்கினத்தில் கேது உள்ளதால், புகழ் – கீர்த்தி கெடும். 5-ஆம் இடத்தில் செவ்வாய் நீச்சம். காமத்தால் வாழ்க்கை சீரழியும். அந்த செவ்வாய் 9-க்குரியவர் இருக்கும் பாக்கியம் சொத்து, சுகம் எல்லாம் அடுத்தவன் அடித்துக் கொண்டு போவான். கடகத்தில் செவ்வாய் நீச்சம் இதை செய்யும்.

மிதுனத்தில் குரு அதாவது லக்கினாதிபதி குரு 4-ஆம் இடத்தில் தனித்து இருக்கிறார். அவசொல்லுக்கு ஆளாவார். சொத்து சுகம், தாய், கல்வி அத்தனையும் பாழ். 12-க்குரியவன் 6-இல் சனி, தீராத நோய் கொடுக்கும். கன்னியில் சந்திரன், ராகுவுடன் சேர்ந்தார். போதைக்கு அடிமையாக்குவான் ராகு.

ராகு ஓஹோ என்று கொடுத்து, அதள பாதாளத்தில் தள்ளி விடுவான். நோய் நொடிக்கு சம்மந்தப்பட்ட 6-க்குரிய சூரியன், தனுசில் 8-க்குரிய சுக்கிரனோடு சேர்ந்ததால், என்ன நோய் என்று மருத்துவர்கள் குழப்பம் அடைய வைக்கும். சுக்கிரன், மாயை கிரகம். மர்ம நோய் என்ன அது? ஈசனுக்கே வெளிச்சம்.

சரி, இவ்வளவு கிரகங்கள் சரியில்லாத நித்தி எப்படி உலக அறிமுகம் ஆனார் என்றால், இவர் ஜாதகத்தில், கீர்த்தி ஸ்தானாதிபதி 3-க்குரிய சுக்கிரன், 6-க்குரிய சூரியனோடு சேர்ந்ததால் விபரீத ராஜயோகம் கொடுக்கிறது. அதே சுக்கிரன், 8-க்குரியவனாக இருப்பதால் கோர்ட், கேஸ், இனம்புரியா நோய் கொடுக்கிறது.

பொதுவாக, தன் தலையில் தானே மண்ணை அள்ளி போட்டுக் கொண்டார். நான் சூடு, சொரணை இல்லாதவன் என்று கூறிய நித்தியின் அந்த அவச் சொல் பலித்து, இன்று அவரின் உடலில் சூடு குறைந்து, சொரணை குறைந்து கோமாவில் இருப்பதாக சொல்கிறார்கள். இது உண்மையா என்பது, ஈசா… அது உனக்கே வெளிச்சம்.

ஜாதக ரீதியாக இவருக்கு குரு திசையில், புதன் புக்தி 19.06.2023வரை இருக்கிறது. மீன லக்கினத்திற்கு குரு நன்மை செய்யாது. அதே சமயம், புதன் 7-க்குரிய மாரக ஸ்தான புக்தி நன்மையாக அமையவில்லை. எல்லாம் எனக்கு தெரியும் என்றாலும், ஈசனுக்குள் நாம்.




ஜோதிட ஆலோசனைக்கு இங்கே பார்க்கவும்…

ஒரு பக்க ஜாதகம் ரூ.59/-க்கு பெற இங்கே பார்க்கவும்.

எங்கள் EBOOKS பெற இங்கே பார்க்கவும்.

Send your feedback to: editor@bhakthiplanet.com

For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, G Krishnarao.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India

நமது Twitter பக்கம்

https://www.youtube.com/bhakthiplanet

https://www.youtube.com/niranjanachannel

https://www.facebook.com/bhakthiplanet

For Astrology Consultation CLICK Here




© 2011-2022 bhakthiplanet.com  All Rights Reserved

Posted by on Jun 9 2022. Filed under Astrology, Bhakthi planet, Headlines, கதம்பம், செய்திகள், ஜோதிட சிறப்பு கட்டுரைகள், ஜோதிடம், முதன்மை பக்கம். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech