Monday 29th April 2024

தலைப்புச் செய்தி :

அழிக்க நினைக்கும் சீனா அழியப் போகிறதா?

Astrologer, Sri Durga Devi upasakar, Krishnarau VG. 

இன்று உலகில் பரபரப்பான பேச்சு கொரோனா. இந்த கொரோனாவிற்கு சீனாதான் காரணம் என்று உலக நாடுகள் சந்தேகம் கொள்கிறது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சீனாவுக்கு எச்சரிக்கை விடுக்கிறார். இன்னும் மூன்று மாதத்திற்குள் இந்த கொரோனா வைரஸ் எங்கிருந்து? எப்படி வந்தது? என உடனே ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்று தன்னாட்டு ஆராய்ச்சியாளர்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

பலநாள் திருடன் ஒருநாள் அகப்படுவான் என்பதற்கு ஏற்ப, வரும் 04.06.2021 வெள்ளிக்கிழமை, செவ்வாய் மிதுனத்தில் இருந்து கடகத்திற்குள் நுழையப்போகிறது. கடகத்தில் செவ்வாய் நீச்சம் பெறுவதால், மேஷ இராசியான சீனாவுக்கு 4-ம் இடம் கடகம். அங்கு வரும் செவ்வாய், இனி சீனாவை ஆட்டு, ஆட்டு என ஆட்டி படைத்து ஒரு வழி ஆக்கும்.

காரணம் –

கெடுவான் – கேடு நினைப்பான் என்பதற்கு ஏற்ப, 8-க்கு உரிய செவ்வாய் 4-ஆம் இடத்திற்கு வருவதால், இதுவரையில் சீனா சந்திக்காத பிரச்னைகளை எல்லாம் அந்நாடு சந்திக்கப்போகிறது. சீனா மீது போர் தொடுக்கக் கூட வாய்ப்பு உள்ளது. இது மட்டுமின்றி பலத்த நிலநடுக்கம், நெருப்பினால் பெரிய விபத்து, இயற்கை சீற்றம் என சந்திக்கப்போகிறது சீனா.

இதை நான் உறுதியாக சொல்லக் காரணம் – மேஷ இராசிக்கு பாதகாதிபதி சனி. அதாவது 11-க்கு உரியவன் வேறு செவ்வாயை பார்வை செய்வதால், சனி பகவானை பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. சனி-செவ்வாய் பார்வை, சனி-செவ்வாய் சேர்க்கை இருந்தாலும் கதை கந்தல்தான்.

இது எல்லோருக்கும் பொருந்துமா? என்றால் இல்லை. கடன் வாங்கியவன்தான் கடனை திருப்பி தர வேண்டும். அதுபோல, பிறரை அழிக்க நினைப்பவனைதான் சனியும், செவ்வாயும் புரட்டி எடுப்பார்கள்.

ஆகவே –

இந்த கிரகநிலை பார்வை சீனாவுக்கு பொருந்தும். உலகில் லட்சக்கணக்கானவர்கள் பாதிப்பு, குழந்தைகள், வயதானவர்கள் என பலரின் இழப்பு. இந்த பாவத்தை செய்தவன் அனுப்பவிப்பது நிச்சயம்.

மொத்தத்தில் – வரும் 15.11.2021-க்குள் சீனாவுக்கு பெரும் சோதனையான கட்டம்.

Read in ENGLISH




மேலும் ஆன்மிக கட்டுரைகள் படிக்கவும்…

ஜோதிட ஆலோசனைக்கு இங்கே பார்க்கவும்…

Send your feedback to: editor@bhakthiplanet.com 

For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, Krishnarau VG.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India

http://www.youtube.com/bhakthiplanet

https://www.youtube.com/niranjanachannel 

http://www.facebook.com/bhakthiplanet

For Astrology Consultation CLICK Here

© 2011-2021 bhakthiplanet.com  All Rights Reserved

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech