Friday 27th December 2024

தலைப்புச் செய்தி :

சனிப்பெயர்ச்சி சாதிக்குமா? சோதிக்குமா?

Astrologer, Sri Durga Devi upasakar, Krishnarau VG.  Phone Number: 98411 64648,

திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் ஆலயத்தில் வருகின்ற டிசம்பர் மாதம் 27.12.2020 அதிகாலை 5.22 மணிக்கு சனி பெயர்ச்சி நிகழ உள்ளது.

பொதுவாக சனி என்றாலே, “சனி பகவான் என்ன செய்யப் போகிறாரோ? ஜோதிடர் சொன்னாரே.. உனக்கு அஷ்டம சனி என்று இப்படி பலர் பயப்படுவது வழக்கம். பொதுவாக அஷ்டம சனி, அர்தாஷ்டம சனி ஏழரைச் சனி என்ன செய்யும்? எதை செய்ய விடாது என்று பார்ப்போம்.

வரும் 27/12/2020 அன்று வாக்கிய பஞ்சாங்கமுறைபடி சனிபகவான், மிதுன இராசிக்கு அஷ்டம சனியாகவும், துலா இராசிக்கு அர்த்தாஷ்டம சனியாகவும் (4-ஆம் இடத்தில் சனி), தனுசுக்கு பாதசனியாகவும், மகரத்திற்கும் கும்பத்திற்கும் ஏழரை சனியாகவும் பெயர்ச்சி ஆகிறார். இப்படி துலாம், தனுசு மகரம், கும்ப இராசிகாரர்களை பிடிக்கப்போகும் சனி, கெடுப்பாரா? என்றால் ஒருக்காலும் கெடுக்க மாட்டார்.

மகரத்தில் சனி பகவான் குருவோடு அமரப் போகிறார். ஆகவே பாதிப்பு அதிகம் தராது. பலர் பலவிதமாக சொல்வார்கள். பயப்படவேண்டாம். சனி பகவான், மகரத்தில் அமர்வதால் அதாவது சொந்த வீட்டில் அமர்வதால் உருட்ட மாட்டார். வேறு இடத்தில் அமர்ந்தால் உருட்டிப் புரட்டி எடுப்பார்.

சரி –

மிதுனத்திற்கு அஷ்டம சனி என்ன செய்வார்?

துலா இராசிக்கு என்ன செய்வார்?

தனுசு, மகரம், கும்பம் இராசிக்காரர்களுக்கு என்ன செய்வார்?

ஏன் இதை மட்டும் முதலில் குறிப்பிடுகிறேன் என்றால், தினமும் எனக்கு வரும் தொலைபேசி அழைப்புகளில் அன்பர்கள் பலர், “ஐயா எனக்கு சனிப்பெயர்ச்சி சரியில்லை என்று கூறுகிறார்கள். பாதிப்பு வருமா?” என கேட்கிறார்கள்.

பாதிப்பு வராது. ஆனால் சிலரின் சனி பெயர்ச்சி பலன்களை படித்து பயத்திலேயே படுத்து விடுவீர்கள் போல.

ஆகவேதான் நான் முதலில் மேற்கண்ட இராசிக்காரர்களுக்கு பயப்படத் தேவையில்லை என்று கூறுகிறேன்.

மிதுன இராசிக்கு 8,9-க்குரியவன் சனி. அதாவது அஷ்டமாதிபதி, பாக்கியாதிபதி. பாக்கியாதிபதியாக வருவதால் கெடுதல் இல்லை. துலா இராசிக்கு 4,5-க்குரியவன். அதாவது சுகாதிபதி, பஞ்சமாதிபதியாக வருவதால் கெடுதல் இல்லை. தனுசுக்கு 2,3-க்குரியவன். தனாதிபதியாக வருவதால் பயம் இல்லை. மகர இராசிக்கும் தனாதிபதி. ஆகவே கெடுக்க மாட்டார். கும்பத்திற்கு ஜென்மாதிபதி கெடுதல் இல்லை.

இனி பன்னிரெண்டு இராசிக்காரர்களுக்கும் சனிப்பெயர்ச்சி என்ன கொடுப்பார்? எதையெல்லாம் கெடுப்பார்?. சனி பகவானின் பார்வைதான் பிரச்னை கொடுக்கும். எந்தெந்த ஸ்தானத்தை பார்க்கிறார்? அதனால் என்ன கெடுதல் என்று பார்ப்போம். இரண்டு நாட்களில் 12 இராசிகளுக்குரிய பலன்கள் வந்துவிடும். ஸ்ரீ துர்காதேவி அருளால் ஆனந்த வாழ்க்கை அமைய அம்பாளை பிரார்த்திக்கிறேன்.

நன்றி.

படிக்கவும் சனிப் பெயர்ச்சி முழு பலன்கள்

மேலும் ஜோதிட கட்டுரைகள் படிக்கவும்…

மேலும் இராசி பலன்கள் படிக்கவும்…

மேலும் வாஸ்து கட்டுரைகள் படிக்கவும்…

மேலும் ஆன்மிக கட்டுரைகள் படிக்கவும்…

ஜோதிட ஆலோசனைக்கு இங்கே பார்க்கவும்…

Send your feedback to: editor@bhakthiplanet.com

For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, Krishnarau VG.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India

http://www.youtube.com/bhakthiplanet

https://www.youtube.com/niranjanachannel

http://www.facebook.com/bhakthiplanet

For Astrology Consultation CLICK Here

© 2011-2020 bhakthiplanet.com  All Rights Reserved

Posted by on Dec 22 2020. Filed under Astrology, Bhakthi planet, Headlines, Photo Gallery, இராசி பலன்கள், கட்டுரைகள், கதம்பம், செய்திகள், ஜோதிடம், முதன்மை பக்கம். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »