Friday 27th December 2024

தலைப்புச் செய்தி :

சனிப் பெயர்ச்சி பலன்கள் 2020 – 2023

Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  Phone Number: 98411 64648

அன்பார்ந்த பக்தி பிளானெட் வாசகர்களுக்கு வணக்கம். கடந்த பதிப்பில் சனிப் பெயர்ச்சியால் மிதுனம், துலாம், தனுசு, மகரம், கும்பம் இராசிகாரர்களுக்கு பெரிய பாதிப்பு தராது என்று கூறி இருந்தேன் அல்லவா?. இதன் முழு பலனை இப்போது சொல்கிறேன். பண்ணிரெண்டு இராசி அன்பர்களுக்கு சனிப் பெயர்ச்சி பலன்களை பார்க்கலாம்.

27.12.2020 ஞாயிற்றுகிழமை காலை 05.22 AM மணிக்கு உத்திராடம் சூரியன் காலில் (சாரத்தில்) சனி பகவான் வருகிறார். சனிக்கு சூரியன் பகை. ஆகவே பகைவன் காலில் போனால் நன்மைகள் செய்வானா? என்று பார்த்தால், இறைவன் அருளால் சனி, குரு பகவானின் பிடியில் மகரத்தில் இருக்கிறார்.

சரி –

உத்திராடம் காலில் போனால் சில தொல்லைகள், தொந்தரவுகள் கொடுப்பாரா? என்றால் கொடுக்கத்தான் செய்வார்.

பலன்களை குறைப்பார் என்றால் எப்படி குறைப்பார்?

சனி, தன் பார்வையால் பலன்களை குறைப்பார் – தடுப்பார்.

சரி. இந்த சனிப்பெயர்ச்சியால் 12 இராசிகாரர்களுக்கும் நடைப்பெறக்கூடிய லாப-நஷ்டங்களை பார்ப்போம்.

மேஷம்: மேஷ இராசி அன்பார்களே… சனி பகவான் உங்களுக்கு 10,11-க்குரியவன். நிலவிளைவு யோகத்தையும் கொடுக்கக் கூடியவன். உங்கள் இராசிக்கு 10-ம்  இடத்திற்கு சனி பெயர்ச்சி ஆவதால், நிச்சயம் லாபம் உண்டு. தடைப்பட்ட தொழில் மேன்மை அடையும். மூடிய கதவு திறக்கப்படும். சிலருக்கு மேற்படிப்பு வசதிகள் அமையும். வீட்டில் மங்களகரமான நிகழ்ச்சிகள் நடைபெறும். நஷ்டங்கள் எந்த வகையில் இருக்கும் என்றால், வீண் விரயங்கள் ஏற்படும். வாகன விஷயத்தில் கவனம் தேவை. கார் ஓட்டும்போது விமானம் ஓட்டுவதுபோல் வேகம் கூடாது. திட்டமிட்டு செலவு செய்ய வேண்டும். மற்றபடி பஞ்சமாதிபதி சாரத்தில் அமர்ந்த சனி யோகமே.

ரிஷபம்: ரிஷப இராசி அன்பர்களே…  சனி பகவான் உங்களுக்கு 9,10-க்குரியவன். தரும-கர்மாதிபதி. ஆகவே நன்மைகள் செய்ய தவற மாட்டார். சுகாதிபதி சாரத்தில் வருவதால் நன்மைகள் நடக்கும். எதிர்பாரா வெற்றி, போட்டியில் பெரிய வெற்றி உண்டு. எதிர்பாராமல் பணம் வரும். கடன் சுமை நீங்கும். வழக்கு இருந்தால் வெற்றி உண்டு. வெளிநாட்டு பயணம் அமையும். (அது இப்போதல்ல… கொரோனா முடிந்த காலத்திற்கு பிறகு). நஷ்டங்கள் எப்படி ஏற்படும் என்றால்? யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீர்கள். 3-ஆம் இடத்தை சனி பார்வை செய்வதால் நகை, ஆபரணங்களை பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள். ஏமாற்றம் வரும். ஆரோக்கியத்திலும் கவனம் தேவை. மற்றபடி சனி பெயர்ச்சி உங்களுக்கு சிறப்பு தரும்.

மிதுனம்: மிதுன இராசி அன்பர்களே… சனி பகவான் உங்களுக்கு 8,9-க்குரியவன். முதலில் லாபத்தை கொடுப்பான? என்று பார்த்தால், கீர்த்தி ஸ்தானாதிபதியான சூரியன் சாரமான உத்திராடத்தில் இருப்பதால் புகழ், கீர்த்தி கிடைக்கும். எதிர்பார்த்தது நடக்கும். தவறிய பொருள் கைக்கு கிட்டும். சொத்துக்கள் சட்ட சிக்கல், வழக்குகளில் இருந்தால் கைக்கு கிடைக்கும். வெளிநாட்டில் உள்ள நண்பர்களால் ஆதாயம் உண்டு. வாகனம், வீட்டை அழகுப்படுத்துவீர்கள். குடும்பத்திற்காக சுபநிகழ்ச்சிகள் நடத்தி செலவு செய்வீர்கள். சரி – நஷ்டம் என்றால் எவ்வகையில் இருக்கும்?. தேவையில்லா மனகுழப்பம், அவசரத்தால் வீண் விரயங்கள் ஏற்படும். தாயாரின் உடல்நலனிலும், மனைவியின் உடல்நலனிலும் கவனம் தேவை.

கடகம்: கடக இராசி அன்பர்களே… சனி பகவான் உங்களுக்கு 7,8-க்குரியவன். தனாதிபதி சாரத்தில் அமர்ந்ததால், மூச்சு முட்டும் அளவிற்கு பிரச்னைகளை சந்தித்து வந்த உங்களுக்கு இனி நன்மை நடக்கும். முடிந்தது என்று பயந்த உங்களுக்கு சப்தம சனி, பெரிய முன்னேற்றம் கொடுப்பார். உங்களுக்கு துரோகம் செய்தவர்கள் தலைகுனிவர். இனி பயமே இல்லை. புதிய தொழில் துவங்குவீர்கள். உத்தியோகத்தில் தலைமை பொறுப்பு வர வாய்ப்புண்டு. அரசாங்க ஆதரவு கிடைக்கும். வழக்கு ஏதேனும் இருந்தால் வெற்றி உண்டு. மனைவி, பிள்ளைகளுக்கு தேவையானதை வாங்கி கொடுப்பீர்கள். சரி -நஷ்டம் எப்படி இருக்கும்? என்றால், அகலகால் வைக்காதீர்கள். மெல்ல மெல்ல படி ஏற வேண்டும். அதிகமாக யாரையும் நம்பாதீர்கள்.

சிம்மம்: சிம்ம இராசி அன்பர்களே… சனி பகவான் உங்களுக்கு 6,7-க்குரியவன். 6-க்கு உரியவன் மகாயோகத்தை கொடுப்பான். காட்டில் இருக்கும் நீங்கள் எப்படியோ தட்டுத் தடுமாறி காட்டைவிட்டு வெளியே வந்துவிடுவீர்கள். சூரியன் சாரம் உங்களுக்கு ஜென்மாதிபதி சாரம். சாதாரணமாக இருக்குமா?. கடலில் விழுந்தாலும் கரைக்கு கொண்டு வருவான் ஜென்மாதிபதி. நல்ல பொருளாதார வசதிகள் கிடைக்கும். சொந்த வீடு, வாகனம் வாங்குவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சுயதொழில் செய்ய வசதிகள் ஏற்படும். கடன் சுமை தீரும். அயல்நாட்டு பயணம் செல்ல வாய்ப்பு உண்டு. செல்வந்தர்களின் ஆதரவு கிடைக்கும். சரி – நஷ்டங்கள் எந்த வகையில் இருக்கும்? என்றால், அவரசம் கூடாது. உடல்நலனில் மெத்தன போக்கு வேண்டாம்.

கன்னி: கன்னி இராசி அன்பர்களே… சனி பகவான் உங்களுக்கு 5, 6-க்கு உரியவன். 5-க்கு உரியவன் எதிர்பாரா செல்வத்தை, விபரீத யோகத்தை கொடுப்பான். நண்பர்களால் ஆதாயம், கூட்டு தொழிலில் லாபம் உண்டு. நோய்நொடிகள் தீரும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும். சகோதரவர்க்கத்தில் சற்று கருத்து வேறுபாடு ஏற்படும். வசூல் ஆக வேண்டிய கடன் சிறிது சிறிதாக வசூலாகும். வாகனம் வாங்குவீர்கள். தடைப்பட்ட கல்வி, தொழில் புத்துயிர் பெறும். தந்தையால் லாபம் உண்டு. மனைவி வர்க்கத்தில் செலவுகள் ஏற்படும். பொதுவாக லாபம் உண்டு. சரி – நஷ்டங்கள் எவ்வகையில் இருக்கும்? என்றால், சில நேரம் விபரீத செலவு ஏற்படும். நம்பிக்கை துரோகம் செய்வார்கள். இதன் காரணம், 12-ஆம் இட சூரிய சாரம் ஆகும். மிக, மிக கவனமாக இருங்கள்.

துலாம்: துலா இராசி அன்பர்களே… சனி பகவான் உங்களுக்கு 4,5-க்கு உரியவன். சுகாதிபதி உங்கள் சுகத்தை கெடுக்கும் அளவு வேலை வாங்கினாலும் லாபத்தை தருவான். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைக்கூடும். திட்டத்திற்கு மேல் செலவுகள் இழுக்கும். உறவினர் வருகை அதிகரிக்கும். கடன் சுமை ஏற்படும். குடும்பத்திற்கான செலவுகளும் அதிகரிக்கும். சொத்து வாங்குவீர்கள். நண்பர்களின் உதவி தேடி வரும். இடப்பெயர்ச்சி ஏற்படும். சரி – நஷ்டங்கள் எப்படி இருக்கும்? தாய்க்கு உடல்நலம் பாதிக்கும். கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேற்றுமை ஏற்படலாம். அனுசரித்து செல்ல வேண்டும். கடன் சுமை அதிகரிக்கும். கவனம் தேவை. உறவினர்களுடன் பகை ஏற்பட வாய்ப்புண்டு.

விருச்சிகம்: விருச்சிக இராசி அன்பர்களே… சனி பகவான் உங்களுக்கு 3,4-க்கு உரியவன். குடும்பத்தில் நிலவிய கருத்து வேறுபாடு மறையும். வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். பழைய வீட்டை புதுமைப்படுத்துவீர்கள். வாகன வசதி பெருகும். மேற்கல்விக்கு முயற்சி செய்தால் வெற்றி உண்டு. சிறிய வியபாரம் பெரிய அளவில் லாபம் தரும். அயல்நாட்டு நட்புகளால் நன்மைகள் கிடைக்கும். தாயாருக்கு மருத்துவ செலவு அதிகரிக்கும். விவசாயத்தில் ஈடுபட்டவர்களுக்கு நல்ல லாபம் உண்டு. சகோதர-சகோதரிகளால் பொருளாதார ரீதியான நன்மை உண்டு. வழக்கு ஏதேனும் இருந்தால் வெற்றி கிடைக்கும். நஷ்டம் எவ்வகையில் இருக்கும்? என்றால், உடல் ஆரோக்கியம் மிக,மிக முக்கியம். அடுத்தவர்களின் பேச்சை நிதானமாக கேட்க வேண்டும். எதிர்பேச்சு வேண்டாம். எல்லாம் எனக்கு தெரியும் என்று யோசிக்காமல் எதையும் செய்யாதீர்கள்.

தனுசு: தனுசு இராசி அன்பர்களே… சனி பகவான் உங்களுக்கு 2,3-க்குரியவன். கீர்த்தி ஸ்தான சனி பகவான் என்பதால் தொட்டது துலங்க வைப்பான். இனி ஒன்றும் இல்லை, வெறும் கையோடு என்ன செய்வேன்? என்ற கலகத்தில் இருந்த உங்களுக்கு உதவி கரம் கிடைக்கும். குடும்பத்தில் இருந்த கஷ்டங்கள் நீங்கும். அடமானத்தில் வைத்த பொருட்களில் சிலவற்றை மீட்பீர்கள். நண்பர்களின் உதவி தேடி வரும். மனைவி (அ) கணவன் வழியில் லாபம் உண்டு. பிள்ளைகளின் உதவி, பொருளாதார நன்மை கிடைக்கும். முக்கியமாக தீராத பகை தீரும். வழக்கு இருந்தால் முடிவுக்கு வரும். உறவினர்களிடம் கவனமாக இருங்கள். வெளிநாட்டு போக வாய்ப்பு உண்டு. உத்தியோகத்தில் இடமாற்றம் ஏற்படும். சரி – நஷ்டம் எந்தவகையில் இருக்கும்? என்றால், சொல்லவே வேண்டாம். உங்கள் நாக்கில் சனி. அதாவது வாக்கு ஸ்தானத்தில் சனி பகவான் இருக்கிறார். பேச கூடாததை பேசி, சொல்ல கூடாததை சொல்லி புதை குழியில் மாட்டுவீர்கள். ஆகவே பேச்சில் கவனம் தேவை. டாம்பிகமான ஆடம்பர செலவுகளை தவிர்க்கவும்.

மகரம்: மகர இராசி அன்பர்களே… சனி பகவான் உங்களுக்கு ஜென்மாதிபதி மற்றும் தனாதிபதியான 2-க்குரியவன். தனாதிபதி, கைக்கு பணத்தை தருவான். மனதில் இருந்த பயம் நீங்கும். திட்டங்கள் சில வெற்றி பெரும். பிள்ளைகளுக்கு சுபநிகழ்ச்சிகள் நடக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கூடி வரும். புதிய வாகனம் வாங்குவீர்கள். பொன்-பொருள் சேரும். ஷேர் மார்கெட்டில் சிலருக்கு லாபம் உண்டு. கட்டப்படாமல் இருந்த கட்டடம் கட்டி முடிக்கப்படும். பயணங்கள் அதிகரிக்கும். சின்ன செலவுகள் அதிகரிக்கும். மருத்துவ செலவு உண்டாகும். குலதெய்வ வழிபாடு செய்ய வழி வகுக்கும். முன்னோர்கள் சொத்தில் பங்கு வரும். சரி – நஷ்டம் எந்தவகையில் இருக்கும்? என்றால், அரசாங்க பிரச்னை வரும். கவனம் தேவை. வங்கி தொடர்பான விவகாரங்களில் உஷாராக இருங்கள்.

கும்பம்: கும்ப இராசி அன்பர்களே… சனி பகவான் உங்களுக்கு ஜென்மாதிபதி மற்றும் 12-க்குரியவன். சூரியன் சாரத்தில் அமர்ந்ததால் நன்மைகள் உண்டு. இதுநாள்வரை தேடிக்கொண்டிருந்த வேலை வீடு தேடி வரும். திருப்பி செலுத்த முடியாத கடனை அடைத்து விடுவீர்கள். அடமானத்தில் உள்ள நகைகளை மீட்க வழி பிறக்கும். பிள்ளைகளுக்கு கல்வி செலவு செய்ய வைக்கும். பெற்றோருடன் இருந்த மனகசப்பு தீரும். குடும்பத்தில் நிம்மதி நிலவும். நலிவடைந்த தொழில், வியபாரம் புத்துயிர் பெறும். பழைய சொத்து விற்று புதிய சொத்து வாங்குவீர்கள். மனைவிக்கு கணவனின் குடும்பத்தினர் வழியாகவும், கணவனுக்கு மனைவியின் குடும்பத்தினர் மூலமாகவும் ஆதாயங்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வெளியூர் அல்லது வேறு இடத்திற்கு மாற்றம் ஏற்படும். சரி – நஷ்டம் எந்தவகையில் இருக்கும்? என்றால், 10 ரூபாய் பொருளை பெருமைக்காக 100 ரூபாய்க்கு வாங்க வைக்கும். அதிகாரத்தால் பெரும் நஷ்டம் உண்டாக்கும். உஷாராக இருக்கவும்.

மீனம்: மீன இராசி அன்பர்களே… சனி பகவான் உங்களுக்கு 11,12-க்கு உரியவன். 6-க்கு உரிய சூரியனின் சாரத்தை பெறுவதால், படுத்த படுக்கையாக இருந்தவர்களும் எழுந்து நடமாடுவர். நோய்நொடி தீரும். கவலை மறையும். நம்மை நம்பி உள்ள குடும்பத்தினரை எப்படி காப்பாற்ற போகிறோம்? என்ற பயம் இனி இல்லை. நல்லது நடக்கும். கடன் தொல்லை மறையும். சிலருக்கு தனப்பிராப்தி அமையும். படிப்பில் அரியர்ஸ் இருந்தால் முடித்து விடுவீர்கள். செய்ய வேண்டியதை சரியாக செய்யும் அறிவு திறனும், தைரியத்தையும் பெறுவீ்ர்கள். பழைய வாகனத்தை விற்று புதிய வாகனம் வாங்குவீர்கள். உத்தியோகத்தில் மாற்றம் வரும். வாடகை வீட்டை காலி செய்துவிட்டு புது வீடு குடி போவீர்கள். சரி – நஷ்டம் எந்தவகையில் இருக்கும்? என்றால், சுலபமாக முடிக்க வேண்டிய விஷயத்தை நீங்கள் தேவையே இல்லாமல் இழுத்துக்கொண்டே செல்வதால் உங்கள் மீது கேவலமான அபிப்ராயத்தை உருவாக்கும். வழக்கு இருந்தால் தண்டனைக்கு வாய்ப்பு உள்ளது. சனி பகவான் உங்களுக்கு 12-ஆம் இடத்தின் அதிபதியாக இருப்பதால், பேராசையை விட்டுவிட்டால் நல்லது.

மேலும் ஜோதிட கட்டுரைகள் படிக்கவும்…

மேலும் இராசி பலன்கள் படிக்கவும்…

மேலும் வாஸ்து கட்டுரைகள் படிக்கவும்…

மேலும் ஆன்மிக கட்டுரைகள் படிக்கவும்…

ஜோதிட ஆலோசனைக்கு இங்கே பார்க்கவும்…

Send your feedback to: editor@bhakthiplanet.com

For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India

http://www.youtube.com/bhakthiplanet

https://www.youtube.com/niranjanachannel

http://www.facebook.com/bhakthiplanet

For Astrology Consultation CLICK Here

© 2011-2020 bhakthiplanet.com  All Rights Reserved

Posted by on Dec 26 2020. Filed under Astrology, Bhakthi planet, Headlines, இராசி பலன்கள், கட்டுரைகள், கதம்பம், செய்திகள், ஜோதிடம், முதன்மை பக்கம். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »