Monday 23rd December 2024

தலைப்புச் செய்தி :

ரசத்தை பிடி – விஷத்தை அடி

Astrologer, Sri Durga Devi upasakar, Krishnarau VG.

இன்று உலகை உலுக்கி கொண்டு இருக்கும் விஷ சம்மந்தபட்ட கொரோனாவை ஒழிக்க மருந்துகள் இருந்தாலும், வருவதற்கு முன் காக்க வேண்டும் என்றால், ரசம் சோறு சாப்பிடுவது மிக,மிக நல்லது. வேடிக்கை அல்ல, விநோதம் அல்ல. ரசம் என்பது மிளகு, இஞ்சி, கொத்தமல்லி, சீரகம் கலந்த கலவை. இதில் மிளகு சாதாரணமானது அல்ல.

நம் மூதாதையர்கள் சொல்வார்களாம், “பகைவன் வீட்டுக்கு போனாலும், பத்து மிளகோடு போஎன்று.

காரணம், ஒரு வீட்டில் ஏதாவது சாப்பிட்டுவிட்டால், ஏதாவது கலந்து கொடுத்து இருப்பார்களோ என்கிற சந்தேகம் இருந்தாலோ, மாய-மந்திரத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் சிலர், மருந்து வைத்து வசியம் செய்து விட்டனரோ என்று குழம்பினால், எடுத்து சென்ற மிளகில் மூன்றை வாயில் போட்டுக்கொண்டால் உணவில் சந்தேகத்திற்குரியது எது இருந்தாலும் அழியும் என்பார்கள்.

ஜுரத்தில் பாதிக்கப்பட்டவர், டாக்டரிடம் “என்ன சாப்பிடலாம்?” என்று கேட்டால், எனக்கு தெரிந்து “ரசம் சோறு சாப்பிடு என்றுதான் சொல்வார்கள். காரணம், வைரஸ் பிரச்னைகளை துரத்தியடிப்பது ரசம்தான். அதுமட்டுமல்ல, மிளகு உடலில் உள்ள கபம், ஜலதோஷம், சீதலத்தை நீக்கும் ஒரு கண்கண்ட நிவாரணி.

புளி கரைத்த நீரில்தான் ரசம் செய்கிறோம். புளி உஷ்ணத்தை உருவாக்கும். ஆகவே வைரஸ்க்கு சரியான எதிரி யார்? என்று பார்த்தால் ரசம் அருமையான மருந்தாகும் உணவாக இருக்கிறது.

ரசம் சோறு சாப்பிடவில்லை என்றாலும், ஒரு அரை டம்ளர் ரசமாவது குடித்துவிட வேண்டும். இன்று மருத்துவ ஆராய்ச்சி செய்பவர்களும் இதனை ஒப்புக்கொள்வார்கள். இஞ்சி, இன்று கொரோனாவுக்கு கொடுக்கப்படும் மருந்தில் ஒன்று. பாருங்கள். அதைவிட்டு விட்டு மேல்நாட்டு திண்பண்டங்களான பீட்சா, பர்கர் என்று பெருமைக்கு சாப்பிடுகிறார்கள். குறை சொல்லவில்லை. இன்று வைரஸ்சுக்கு மிளகும், இஞ்சியும் முக்கியமாக முன் நிற்கிறது. அமெரிக்கா, அமெரிக்கா என்றிருந்த நமக்கு அவர்கள்படும் அவஸ்தை பரிதாபமாக இருக்கிறது. ஆகவே, நம் முன்னோர்கள் கூறியதை கடைபிடித்தால் கரை சேரலாம். ரசத்தை பிடி – விஷத்தை அடி, வாழ்க வளமுடன்!.





மேலும் ஜோதிட கட்டுரைகள் படிக்கவும்…

மேலும் இராசி பலன்கள் படிக்கவும்…

மேலும் வாஸ்து கட்டுரைகள் படிக்கவும்…

மேலும் ஆன்மிக கட்டுரைகள் படிக்கவும்…

ஜோதிட ஆலோசனைக்கு இங்கே பார்க்கவும்…

Send your feedback to: editor@bhakthiplanet.com

For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, Krishnarau VG.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India

http://www.youtube.com/bhakthiplanet

https://www.youtube.com/niranjanachannel

http://www.facebook.com/bhakthiplanet

For Astrology Consultation CLICK Here

© 2011-2020 bhakthiplanet.com  All Rights Reserved

Posted by on May 1 2020. Filed under Bhakthi planet, Headlines, அறுசுவை சமையல், கதம்பம், செய்திகள், தமிழகம், முதன்மை பக்கம். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »