Monday 23rd December 2024

தலைப்புச் செய்தி :

குரு பெயர்ச்சி! ரிஷபம்-கடகம்-மகரம்… குரு பகவான் கொடுப்பாரா – கெடுப்பாரா?

Sri Durga Devi upasakar, Krishnarau VG.
Phone Number: 98411 64648

வாக்கிய பஞ்சாங்க முறைபடி 28 அக்டோபர் 2019 திங்கள்கிழமை அன்றும், திருக்கணித பஞ்சாங்க முறைபடி குரு பெயர்ச்சி 4-11-2019 திங்கள்கிழமை அன்று விருச்சிகத்தில் இருந்து தனுசு இராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்.

குரு பகவான் மூலம் நட்சத்திரத்தில் அதாவது கேது சாரத்தில் தனுசில் கேதுவுடன் அமர்கிறார். பலர் குரு 6-ல் வருகிறது, 8-ல் வருகிறது, 12-ல் வருகிறது என்று தேவையில்லா சஞ்சலம் அடைகிறார்கள். என்னிடமும் பலர் 6,8,12-ல் குரு வரலாமா? என்று கேட்டபடி இருக்கிறார்கள். இன்னும் சிலர், பட்டதுபோதாதா? இன்னும் பட வேண்டுமா? என்ற பயத்தில் இருக்கிறார்கள். என்னுடைய அனுபவப்படி, குரு பார்வை கோடி புண்ணியம் என்பார்களே அதுதான் உண்மை. குரு அமர்ந்த இடம் கோடி புண்ணியம் அல்ல, குரு பார்க்க கோடி புண்ணியம் இது சத்திய சொல்.

விஷயத்திற்கு வருவோம்.

ரிஷப இராசிக்கு குரு பகவான் 8-ல் வரப் போகிறார். இது நன்மையா? தீமையா?

கடக இராசிக்கு குரு பகவான் 6-ல் அமரப் போகிறார் இது நன்மையா? தீமையா?

மகர இராசிக்கு குரு பகவான் 12-ம் இடத்திற்கு வரப் போகிறார் இது நன்மையா? தீமையா? என ஆராய்ந்து பார்த்தால், எல்லாம் நன்மைகளே.

அது எப்படி?

இது முன் ரிஷபத்திற்கு 7-ல் இருந்தார்.

இதற்கு முன் கடகத்திற்கு 5-ல் இருந்தார்.

இதற்கு முன் மகரத்திற்கு 11-ல் இருந்தார்.

இவர்களுக்கு என்ன பெரியதாக நன்மைகளை செய்துவிட்டார்?. இந்த இராசிகாரர்களை கேட்டுப் பாருங்கள். படாதபாடு பட்டோம் என்றுதான் கூறி இருப்பார்கள். சிலர் நன்மை பெற்று இருக்கலாம். ஆனால் யோகமான இடங்கள் 7,5,11-ல் இருந்தும் அவர்கள் நாய்படாதபாடு பட்டு இருப்பார்கள்.




சரி, இப்பொழுது எப்படி அவர்கள் நன்மை பெறுவார்கள்? என்று பார்த்தால், ரிஷப இராசிக்கு குரு பகவான் இப்பொழுது 8-ல் அமர்ந்தாலும், 5-ம் பார்வையாக 12-ம் இடத்தையும், அதாவது விரயத்தையும், 7-ம் பார்வையாக, 2-ம் இடத்தையும் அதாவது தன-குடும்பத்தையும், 9-ம் பார்வையாக 4-ம் இடத்தையும், அதாவது சுகஸ்தானத்தையும், இந்த இடமே வீடு, வாகனம், கல்வி, தாய் போன்ற அத்தனை விஷயங்களை தரும் இடம். இந்த இடங்கள் பலம் பெறுவதால், ரிஷப இராசி அன்பர்களே… உங்களுக்கு குரு 8-ல் வந்தாலும் யோகத்தை கொடுப்பான். குடும்ப மகிழ்ச்சி, நல்ல பணவரவு, தேவையில்லா விரயங்களை குறைத்து, வண்டி, வாகனத்தோடு சுகமாக வாழ்வீர்கள். வீடு இல்லாதவர்களுக்கு வீடு, மனை அமையும்.

அகப்பட்டவனுக்கு அஷ்டம குரு என்பார்கள். இந்த வார்த்தையை யார் சொன்னாலும் காதில் வாங்கிக்கொள்ளாதீர்கள்.

கடக இராசிக்கு குரு பகவான் 6-ல் அமரப் போகிறார். சரி, இதற்கு முன் 5-ல் இருந்தாரே என்ன வாரி கொடுத்தார்?. வரி வரியாக சில பிரச்னைகளே கொடுத்தார். பலர் என்னிடம், ஐயா.. 5-ல் குரு இருந்தும் ஒன்றும் யோக பலன் அமையாமல், சோக பலனாகவே அமைகிறது என்று கேட்டுக் கொண்டு இருக்கிறார்கள். சரி, 6-ல் இருக்கும் குரு, 5-ம் பார்வையாக 10-ம் இடத்தை இனி பார்க்கிறார். அதாவது காரியஸ்தானம், ஜீவனஸ்தானம், 7-ம் பார்வையாக 12-ம் இடத்தை பார்க்க இருக்கிறார். இது விரயஸ்தானம். 9-ம் பார்வையாக 2-ம் இடத்தை பார்க்க இருக்கிறார். இது தன, குடும்ப, வாக்குஸ்தானம். வேறு என்ன வேண்டும். எடுத்த காரியம் கைகூடும். ஜீவனம் நன்கு அமையும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி, நல்ல பணவரவு, பேச்சு சாதுர்யத்தால் பல பிரச்னைகள் நிவர்த்தி ஆகும். கடன்கள் தீரும். எதிர்பார்த்ததை விட பல நன்மைகள் நாடி வரும். ஆகவே 6-ம் இட குரு அள்ளி தருவார்.

மகர இராசிக்கு குரு 12-ல் அமரப் போகிறார். 5-ம் பார்வையாக 4-ம் இடம் அதாவது சுகஸ்தானத்தை பார்வை செய்யப் போகிறார். 7-ம் பார்வையாக 6-ம் இடம் அதாவது கடன், ரோகத்தை குறைப்பார். தீரா வியாதி இருந்தாலும் தீர்த்து வைப்பார். 9-ம் பார்வையாக 8-ம் இடத்தை பார்ப்பதால், பெரிய சட்ட சிக்கல்கள் குரு அருளால் தவிர்க்கலாம். பெரிய விபத்து ஏற்பட்டாலும் தப்பிக்க வைக்கும். வீட்டில் இருந்த குழப்பங்கள் தீரும். தடைபட்ட கல்வி தொடரும். புதிய தொழில் அமையும்.

ஆக, குரு 12-ம் இடத்திற்கு வரப் போகிறாறே என கவலை வேண்டாம். மறைந்து இருக்கப் போகும் குரு, நிறைந்து கொடுப்பார்.

ரிஷப இராசி, கடக இராசி, மகர இராசி அன்பர்களே… இந்த குரு பெயர்ச்சி 6,8,12-ல் வந்துவிட்டதே என்ற பயமும், கவலையும் வேண்டாம். இந்த குரு பெயர்ச்சியால் நீங்கள் பல நன்மைகளை பெறப் போவதை பாருங்கள்.

ஐயா நான் ரிஷப இராசி… எனக்கு 8-ம் இடத்தில் குரு வருகிறாரே.. நான் கடக இராசி… எனக்கு 6-ம் இடத்தில் குரு வருகிறாரே… நான் மகர இராசி… எனக்கு குரு பகவான் 12-ல் வருகிறாரே என்று பலர் என்னிடம் கேட்டு வருவதால்தான் இந்த பதிவில் பதிலாக சொல்கிறேன்… ரிஷப, கடக, மகர இராசி அன்பர்களே… கவலை எதுவும் வேண்டாம். இந்த குரு பெயர்ச்சியில் குரு பகவான் உங்களுக்கு அருளும், பொருளும் அள்ளி தருவார்.

மற்ற ஒன்பது இராசி அன்பர்களுக்கும்… இந்த குரு பெயர்ச்சி எப்படி இருக்கும் என்பதையும் அடுத்த பதிவில் சொல்கிறேன்.

வாழ்க வளமுடன். நல்வாழ்த்துக்கள்.

மேலும் ஜோதிட கட்டுரைகள் படிக்கவும்…

மேலும் இராசி பலன்கள் படிக்கவும்…

மேலும் வாஸ்து கட்டுரைகள் படிக்கவும்…

மேலும் ஆன்மிக கட்டுரைகள் படிக்கவும்…

ஜோதிட ஆலோசனைக்கு இங்கே பார்க்கவும்…

Send your feedback to: editor@bhakthiplanet.com

For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, Krishnarau VG.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India

http://www.youtube.com/bhakthiplanet

https://www.youtube.com/niranjanachannel

http://www.facebook.com/bhakthiplanet

For Astrology Consultation CLICK Here

© 2011-2019 bhakthiplanet.com  All Rights Reserved

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »