வளமை தரும் வடமேற்கு
விஜய் ஜி கிருஷ்ணாராவ்
Vijay G Krishnarau
Siva’s Vaasthu Planners
Contact: 9841164648
கட்டடம் என்பது வெறும் மணல் செங்கலால் கட்டப்படும் உயிரற்ற ஜடப் பொருள் என்று நினைக்கக் கூடாது. அதுவும்கூட நமது வாழ்க்கையில் ஏற்படும் சுகங்களுக்கும் துக்கங்களுக்கும் ஏற்ப தனது சூழலை மாற்றிக்கொள்ளும் தன்மை கொண்டது.
நாம் சந்தோஷமாக இருக்கும் போது நாம் வசிக்கும் வீடு மிகவும் ரம்மியமாக தோற்றமளிக்கும், அதுவே நாம் ஏதேனும் கவலையில் இருக்கும்போது அதே வீடு சோகமாக இருப்பதைப் போன்ற ஒரு தோற்றத்தை அளிக்கும். இது ஏதோ நமது மனதில் தோன்றும் எண்ணங்களின் வெளிப்பாடு என்று சொல்லிவிட முடியாது. கதவுக்கும் கண்ணுண்டு சுவற்றுக்கும் காதுண்டு என்று நம் முன்னோர்கள் சொல்லி வைத்தார்கள். அந்த பழமொழியின் உள்ளர்த்தம் எதுவாக இருந்தாலும் கூட, ஒரு வீடு அல்லது எந்த ஒரு கட்டடமாக இருந்தாலும் அதில் நாம் வசிக்கும்போது நமது ஜாதகப்படி ஏற்படும் சுமாரான காலகட்டங்களில் நம்மை பெரிய பிரச்னைகளில் இருந்து காப்பாற்றும் முக்கிய பங்களிப்பை நாம் வசிக்கும் வீடு தருகிறது.
இப்போது நாம் வடமேற்கு பகுதியை பற்றி சில விஷயங்களை பார்க்கலாம். வடமேற்கு என்பதை கட்டட சாஸ்திர மொழியில் வாயு மூலை என்று அழைக்கிறோம். வாஸ்து சாஸ்திரத்தை பொறுத்தவரையில் ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு திசையும் அதன் ஒவ்வொரு மூலையும் தனித்துவம் கொண்டதாக இருக்கிறது. அந்தவகையில் வடமேற்கு என்கின்ற வாயு மூலை நமது வெற்றிக்கும், தோல்விக்கும் மிக முக்கிய பங்காற்றுகிறது.
பழைய மனையடி சாஸ்திரம் நூல்களில், கிணற்றை வடமேற்கு பகுதியில்தான் அமைக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருப்பார்கள். ஆனால் பள்ளமான பகுதியாக வடமேற்கு இருக்கக்கூடாது என்று குறிப்பிட்டு இருப்பார்கள். இதில் எதற்கு இந்த முரண்பாடு?. தண்ணீருக்கு வடமேற்கு நல்லது ஆனால் பள்ளத்திற்கு நல்லதல்ல. பள்ளம் இல்லாமல் தண்ணீர் தேங்குமா? அதனால்தான் பின்னாளில் வடமேற்கில் கிணறு போன்ற பள்ளம் ஏற்படுத்தும் பகுதியாக அமைக்க வேண்டாம் என்று வலியுறுத்தினார்கள். சில கோயில்களில் கூட நாம் பார்த்திருக்கலாம், மேற்கில் குளம் இருந்தாலும் கிழக்கில் அல்லது வடக்கிலும் சிறிய குளம் இருக்கும் அல்லது பெரிய குளம் இருக்கும். அப்படி அமைக்க காரணம், மேற்கில் குளத்தால் ஏற்பட்ட வாஸ்து குறைபாடுக்கு நிவர்த்தியாக கிழக்கில் அல்லது வடக்கிலும் குளம் அமைத்தார்கள்.
வடமேற்கில் பள்ளம் இருந்தால் அது பலவகையில் அந்த கட்டடத்தில் வசிப்பவர்களுக்கு பல இன்னல்களை தருவதாக அமையும். அதனால்தான் நாம் இப்போதெல்லாம் வடமேற்கில் கிணறு அமைப்பதை தவிர்க்குமாறு அறிவுறுத்துகிறோம்.
வடமேற்கு என்பது மிக முக்கியமான பகுதியாக வாஸ்து சாஸ்திரத்தில் இருக்கிறது. பொதுவாகவே வடக்கு திசை நமது பொருளாதார வளர்ச்சிக்கு அல்லது பண வளர்ச்சியை எடுத்துக்காட்டும் திசையாக அமைந்திருக்கிறது. அந்த வகையில் வடக்கு திசையில் உள்ள எந்த ஒரு பகுதியும் நமது பொருளாதார நிலையை உயர்த்தவும், தாழ்த்தவும் செய்வதாக இருக்கிறது.
வடமேற்கு, வடக்கு, வடகிழக்கு இந்த மூன்றும் மிகமிக முக்கியமாக பொருளாதார வளர்ச்சியை எடுத்துக்காட்டுகிறது. இந்த மூன்று பகுதிகளும் எந்த ஒரு கட்டட சாஸ்திர குறைபாடுகளும் இல்லாதவையாக அமைந்திருக்கவேண்டும்.
கட்டட சாஸ்திரத்தில் அல்லது தமிழர்கள் கடைபிடிக்கும் மனையடி சாஸ்திரத்தில் கிழக்கும், மேற்கும் ஆண்களுக்குரிய திசையாக இருக்கிறது. வடக்கும், தெற்கும் பெண்களுக்குரிய திசையாக இருக்கிறது. அந்த வகையில் வடக்கு திசையில் வாஸ்து குறைபாடு ஏற்பட்டால், அது பெண்களின் நலனுக்கு நல்லதாக இருக்காது. ஒரு வீட்டில் பெண்கள் நிம்மதியாக சந்தோஷமாக இல்லாவிட்டால் அந்த இல்லத்தில் பொருளாதார வளர்ச்சி குறைவாகவே இருக்கும்.
காரணம், வடக்கு திசையை ஆள்பவள் ஸ்ரீமகாலட்சுமி. அதனால்தான் ஸ்ரீமகாலட்சுமிக்கு உரிய இந்த வடக்கு திசை எக்காரணம் கொண்டும் குறையோடு இருக்கக்கூடாது.
வடமேற்கு பற்றி வாஸ்து சாஸ்திரப்படி எப்படி அமைய வேண்டும்? என்று கேட்டால் அதற்கு நிறைய பக்கங்கள் எழுத வேண்டும். அதனால் இங்கே சுருக்கமாக சிலவற்றை பார்க்கலாம். வடமேற்கு, வடக்கு, வடகிழக்கு இந்த மூன்று பகுதிகளிலும் தண்ணீருக்கு உரிய இடங்களாக அமைத்தால் மிக நல்லது. குறிப்பாக, வடமேற்கில் கழிவறையுடன் கூடிய குளியலறை, வடக்கு மத்தியில் கழிவறையுடன் கூடிய குளியலறை அல்லது குளியலறை மட்டும் அமைப்பது நல்லது, வடகிழக்கில் குளியல் அறை மட்டுமே அமைக்கவேண்டும், கழிவறை அமைக்க கூடாது. இது வடக்கில் அமைக்க வேண்டிய அடிப்படையான கட்டட சாஸ்திர விதிமுறை.
வடமேற்கு, வடக்கு, வடகிழக்கில் குறிப்பாக வடமேற்கில் ஒரளவு மேடு இருக்கலாம், பள்ளம் இருக்கக்கூடாது. ஒரு வீட்டுக்குள் வடமேற்கில் பணம் வைக்கும் பெட்டி, பீரோ இருந்தால் மிக நல்லது. வடமேற்கில் சமையலறையும் அமைக்கலாம், பூஜை அறையும் அமைக்கலாம். வடமேற்கில் மிக பாரமான எந்த பொருளையும் வைப்பதை முடிந்த அளவு தவிர்க்கவும்.
வடமேற்கில் படிகள் அமைக்கலாம் என்றாலும் அது அந்த மனையின் அமைப்புக்கேற்ப அல்லது அந்த வீட்டின் அமைப்புக்கு ஏற்ப பார்த்து அமைக்க வேண்டும். வடமேற்கு ஓரளவு குளிர்ச்சியாக இருக்க வேண்டும். வடமேற்கில் கழிவறை மட்டும் அமைப்பதை தவிர்த்து, குளியலறையுடன் கூடிய கழிவறை அமைத்தால் நல்லது.
எந்த ஒரு கோவிலில் நீங்கள் பார்த்தாலும, வடமேற்கில் ஸ்ரீ மகாலட்சுமியின் சன்னதி அமைந்திருப்பதை நீங்கள் கவனித்திருக்கலாம். காரணம், வடமேற்கு பொருளாதார வளர்ச்சிக்கு பயன் தருவதாக இருப்பதால்தான், ஸ்ரீமகாலட்சுமியை அங்கு அமைத்து இருக்கிறார்கள். அதுவும் ஸ்ரீமகாலட்சுமி விரும்பி அமர்கின்ற இடம் வடமேற்கு.
மொத்தத்தில், வடமேற்கு எந்த அளவில் சிறப்பாக அமைந்திருக்கின்றதோ அந்த அளவுக்கு அந்த வீட்டில் பொருளாதார நிலையில் எந்த பாதிப்பும் ஏற்படாது என்பதே உண்மை.
அதனால் உங்கள் வீட்டுக்குள் வடமேற்கு பகுதியில் ஓரளவாவது பணம் அல்லது சில்லறைகள் வைப்பதற்கு ஏதேனும் ஒரு ஏற்பாடு செய்துவிட்டால், உங்களுக்கு வடமேற்கு பகுதி வளமான வாழ்க்கையை நிச்சயம் உருவாக்கித் தரும்.
நன்றி
மேலும் ஜோதிட கட்டுரைகள் படிக்கவும்…
மேலும் இராசி பலன்கள் படிக்கவும்…
மேலும் வாஸ்து கட்டுரைகள் படிக்கவும்…
மேலும் ஆன்மிக கட்டுரைகள் படிக்கவும்…
ஜோதிட ஆலோசனைக்கு இங்கே பார்க்கவும்…
Send your feedback to: editor@bhakthiplanet.com
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, Krishnarau VG. Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India
http://www.youtube.com/bhakthiplanet
https://www.youtube.com/niranjanachannel
http://www.facebook.com/bhakthiplanet
For Astrology Consultation CLICK Here
© 2011-2019 bhakthiplanet.com All Rights Reserved