Monday 23rd December 2024

தலைப்புச் செய்தி :

அபிஷேகப் பொருள்களும் அதன் பலன்களும்!

இறைவனுக்கு நாம் செய்யும் ஒவ்வொரு அபிஷேகத்திற்கும் பலன் உண்டு. நம்மில் பலருக்கு சில வேண்டுதல் இருக்கும். வேண்டதக்கது எதுவென நாம் சொல்லாமலே அறிந்து, அது நமக்கு நன்மை தரும் என்றால் மட்டுமே அதனை நமக்கு கிடைக்கச் செய்வான் இறைவன்.

ஒரு குழந்தை அடம் பிடித்து கேட்கும் அனைத்தையும் தாய் தந்துவிட மாட்டாள். அது அக்குழந்தையின் நலனுக்கு ஏற்றதுதானா என தெரிந்த பின்னே தருவாள்.

அதுபோலதான் இறைவனும்.

நமக்கு நல்லதை தருவான், தீயது எனில் அவற்றை நமக்கு கிடைக்காமல் செய்வான். இது நமக்கு ஆரம்பத்தில் புரியாது. ஆக, நமக்கு இறைவன் தருவதும், தவிர்ப்பதும் நம் நலனுக்காக மட்டுமே என்கிற தெளிவு பிறந்தாலே நம் மீதும் அவனுக்கு இன்னும் அன்பு அதிகமாகும்.

சரி, இப்பொது நாம் எந்தெந்த அபிஷேகப் பொருள்கள் என்ன பலன் தரும் என்பதை அறிந்து, அந்த பொருள்களில் நமக்கு வேண்டுதலுக்கு ஏற்ப அபிஷேகம் செய்து பலன் பெறுவோம்.

அபிஷேகப் பொருள்களும் அதன் பலன்களும் என்ன என்பதை பற்றி சில கோயில்களில் எழுதி வைத்திருப்பார்கள். அந்த வகையில் இங்கே நாம் குறிப்பிடும் அபிஷேகப் பொருள்களையும் அதன் பலன்களையும் சிறுவாபுரி முருகன் கோயில் பலகையில் தெரிவிக்கப்பட்டதாகும்.




தண்ணீர் அபிஷேகம்  மனசாந்தி
நல்லெண்ணை பக்தி
சந்தனாதித் தைலம் சுகம்
வாசனைத் திரவியம் ஆயுள் வலிமை
மஞ்சட்பொடி ராஜ வசியம்
நெய் மோட்சம்
பஞ்சாமிர்தம் தீர்க்காயுள் 
தேன் : சங்கீத (இசை) வளமை
வாழைபழம் பயிர் விருத்தி
மாம்பழம் சகல வசியம்
பலாபழம் உலக வசியம்
திராட்சைப்பழம் : பயம் நீங்குதல்
மாதுளம்பழம் பகை நீக்கம்
தம்பரத்தம்பழம்  :   பூமி லாபம்
நாரத்தம் பழம்  நல்ல புத்தி
தேங்காய்த் துருவல்  அரசுரிமை
சர்க்கரை பகையை அழித்தல்
பால் : ஆயுள் விருத்தி
தயிர் சந்தான (மக்கள் விருத்தி)
இளநீர் : நல்ல புத்திரப் பேறு
கருப்பஞ்சாறு. சாஸ்திரத் தேர்ச்சி
அரிசிமாப் பொடி  பிறவிப் பிணி நீங்குதல்
பஞ்ச கவ்யம் ஆத்ம சுத்தி, பாவ நிவர்த்தி
எலுமிச்சம்பழம் யம பயம் நீக்கும்
நெல்லி முள்ளிப் பொடி  நோய் நீக்கம்
அன்னம் ஆயுள், ஆரோக்யம், தேசம் அபிவிருத்தி
பச்சைக் கற்பூரம் பயம் நீங்குதல்
விபூதி ஞானம்
வஸ்திரம் ராஜயோகம்
புஷ்பம் மகிழ்ச்சி
சந்தனம் செல்வம், சுவர்க்கபோகம்
கஸ்தூரி : வெற்றி உண்டாகுதல்
கோரோசனை ஜபம் சித்திக்கும்
வலம்புரிச் சங்கு தீவினை நீங்கும்
சொர்ணம் (தங்கம்)  வைராக்யம்
சஹஸ்ரதாரை லாபம்
கும்பம் (ஸ்நபனம்)  அஸ்வமேகயாகப் பலன்





மேலும் ஜோதிட கட்டுரைகள் படிக்கவும்…

மேலும் இராசி பலன்கள் படிக்கவும்…

மேலும் வாஸ்து கட்டுரைகள் படிக்கவும்…

மேலும் ஆன்மிக கட்டுரைகள் படிக்கவும்…

ஜோதிட ஆலோசனைக்கு இங்கே பார்க்கவும்…

Send your feedback to: editor@bhakthiplanet.com

For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, Krishnarau VG.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India

http://www.youtube.com/bhakthiplanet

https://www.youtube.com/niranjanachannel

http://www.facebook.com/bhakthiplanet

For Astrology Consultation CLICK Here

© 2011-2019 bhakthiplanet.com  All Rights Reserved

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »