Friday 27th December 2024

தலைப்புச் செய்தி :

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு இராசி பலன்கள் !


Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. 

விளம்பி வருடம் எப்படி இருக்கும்?

அன்பார்ந்த பக்திபிளானட் அன்பர்களே… பிறந்துள்ள விளம்பி வருடம் அருமையான வருடம். 14.04.2018 சனிக்கிழமை பிறக்கிறது தமிழ் புத்தாண்டு. சனி பெருகும் என்பார்கள். நன்மைகள் பல பெருகப் போவது உறுதி. ரிஷப லக்கினத்தில், உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறக்கிறது விளம்பி ஆண்டு. சனி காலில் லக்கினம் பிறக்கிறது. ரிஷப லக்கினத்திற்கு சனி, தர்ம-கர்மாதிபதி ஆகையால் பெரும் யோகம் செய்யும்.

சூரிய பகவான் முதல் இராசியான மேஷத்தில் சஞ்சரிக்கப் போகிறார். அஸ்வினி காலில் சஞ்சரிக்கப் இருக்கிறார். அஸ்வினி கேதுவின் வலிமை பெற்ற நட்சத்திரம் ஆகும். தெய்வ பக்தியும், ஒற்றுமையும் அதிகரிக்கும். அன்னியரின் வீண் சண்டை தவிடுபொடியாகும். தங்கம் விலை சரியும். எண்ணெய், இரும்பு விலை அதிகரிக்கும். சூரியன், சுக்கிரன் இணைவு பெற்றதால், அரசியல்வாதிகளுக்கும், கலைதுறையினருக்கும் கருத்து வேறுபாடு அதிகளவில் போகும். அரசியலில் பிரபலமான பெண் ஒருவருக்கு உடல்நலக் குறை அல்லது கண்டம் ஏற்படலாம். இது சுக்கிரன் சஞ்சாரம். மழைக்கு பஞ்சம் இல்லை. செவ்வாய், சனி சேர்க்கையால் காவல்துறைக்கும், நீதித்துறைக்கும் மோதல் ஏற்பட்டு அதனால் பிரச்னை பெரிதாக வாய்ப்புண்டு. உணவு தான்யம் உற்பத்தி பெரும். ஏற்கனவே குறிப்பிட்டதை போல மழைக்கு பஞ்சம் இருக்காது. வெளிநாட்டு வர்த்தகம் அதிகரிக்கும். பொதுவாக, சூரியன் உச்சத்தில் இருக்கும் இந்த சித்திரை மாத கிரக நிலைகளின்படி நன்மைகள் அதிகம் நடக்கும். ஸ்ரீதுர்காதேவி அருளால் அனைவரும் வளமான வாழ்க்கை பெற்றிட பிராத்தனை செய்கிறேன். நல்வாழ்த்துக்கள்.

இப்போது பன்னிரெண்டு இராசி அன்பர்களுக்கான விளம்பி வருட சித்திரை பலன்களை பார்க்கலாம்.

மேஷ இராசி அன்பர்களே… உங்கள் இராசியிலேயே பஞ்சமாதிபதி சூரியன் அமர்ந்து, பாக்கியாதிபதி குருவினால் பார்க்கப்படுவதால் இதற்கு மேல் என்ன வேண்டும்?. மண்ணை தொட்டாலும் பொன்னாகும். அதிர்ஷ்ட காற்று உங்கள் பக்கம் வீசுகிறது. குடும்பத்தில் சுபசெலவு ஏற்படும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைகூடி வரும். சிலருக்கு மனைவியின் யோகத்தால் சொத்துக்கள் வந்தடையும். நசிந்த தொழில் புது பொலிவுடன் திகழும். 12-ம் இடத்தில் சந்திரன் சஞ்சரிப்பதால் வெளிநாட்டில் வேலை வாய்ப்பு கிடைக்கும். 10-ல் கேது உள்ளதால், பிறருக்கு ஜாமீன் தரும் விவகாரம் வேண்டாம். ஆடம்பர செலவும் வேண்டாம். 4-ம் இடத்தில் உள்ள இராகு உடல்நலனிலும், வாகனம் ஓட்டுவதிலும் கவனமாக இருக்க சொல்கிறார். 12-ம் இடத்தில் புதனும் இருப்பதால், 6-க்குரிய புதன் கடன் தொல்லை அகற்றி விடுவார். மொத்தத்தில் உங்களுக்கு இது அருமையான தமிழ் புத்தாண்டு.

ரிஷப இராசி அன்பர்களே… உங்கள் இராசிக்கு 12-ம் இடத்தில் சூரியன் மறைந்தாலும் தனஸ்தானத்தை, 6-ம் இடத்தை, 9-ம் இடத்தை பார்வை செய்வதால், தனவரவுக்கு பஞ்சம் இருக்காது. ரோக நிவர்த்தி உண்டு. தீராத வியாதியும் தீர்ந்து விடும். கடன் சுமை படிப்படியாக குறைந்து விடும். 5-ம் இடத்தை, 5-ம் இடத்தோனே பார்வை செய்வதால், புத்திர பாக்கியம் உண்டாகும். வழக்கு ஏதேனும் இருந்தால் தீரும். அஷ்டம சனி இருக்கிறதே என்று பயப்பட வேண்டாம். ரிஷப இராசிக்கு தர்ம-கர்மாதிபதியான சனி கெடுக்க மாட்டார். லாபத்தில் புதன், சந்திரன் கூட்டாக இருப்பதால், மேல்படிப்பு அமையும். தடைப்பட்ட கல்வி தொடரும். உத்தியோக உயர்வு, இடமாற்றம் ஏற்படும். 9-ம் இடத்தில் உள்ள கேது, தெய்வ தரிசனம் தரும். பஞ்சமாதிபதி புதன் 11-ல் இருப்பது அன்னிய நாட்டவர்களால் ஆதாயம் தந்திடும். பொதுவாக இந்த தமிழ் புத்தாண்டு மகிழ்ச்சியை அள்ளி கொடுக்கும்.

மிதுன இராசி அன்பர்களே… உங்கள் இராசிக்கு 11-ம் இடத்தில் சூரியன், அதோடு பஞ்சாமதிபதி சுக்கிரனும் இணைந்துள்ளனர். அருமையான வருடம். நினைத்தது நிறைவேறும். 5-ல் உள்ள குரு, எதிர்பாரா யோகம் தரும். பூர்வீக சொத்து கைக்கு வரலாம். 7-ல் செவ்வாய், சனி என்கிற இந்த கூட்டணி, உங்கள் கூட்டாளிகளிடம் கவனமாக இருக்க அறிவுறுத்துகிறது. பேச்சில் அமைதி தேவை. பணிந்து போவது நல்லது. குறிப்பாக குடும்பத்தினருடன் கோபம் வேண்டாம். கூட்டு தொழில் செய்பவர்களாக இருந்தால் வரவு-செலவை சரியாக பாருங்கள். கடன் தீர்வுக்கு வழி பிறக்கும். 10-ல் புதன், சந்திரன் அமைந்ததால் தொழில்துறையினருக்கு பிரமாதமாக இருக்கும். சகோதர வர்க்கத்தால் நன்மை ஏற்படும். இதுவரை வேலையில்லாதவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். குடும்பஸ்தானத்திற்கு குரு பார்வை இருப்பதால், குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடக்கும். இந்த தமிழ் புத்தாண்டு உங்களுக்கு யோக புத்தாண்டு.

கடக இராசி அன்பர்களே… உங்கள் இராசிக்கு 10-ம் இடத்தில் சூரியன், காரியஸ்தானத்தில் சுக்கிரனோடு இருப்பதால், இனி, சென்று வந்தோமா வென்று வந்தோமா என இருப்பீர்கள். பிரமாதமான தமிழ் ஆண்டு துவக்கம். பாக்கியத்தில் புதன், சந்திரன் இணைந்திருப்பதால் வெளிநாட்டவரால் ஆதாயம், வெளிநாட்டு வியபாரம் ஆகியவை பெரும் முன்னேற்றம் தரும். இடமாற்றம், புதிய கட்டடம் கட்டுதல் அமையும். சனி, செவ்வாய் 6-ம் இடத்தில் இருப்பதால், தேவையில்லா பிரச்னைகள் தேடி வரும். பிறகு அதுவே உங்கள் முன் மண்டியிட்டு ஓடி விடும். கடன் தீரும். ஆனால் என்ன ஒரு பிரச்னை என்றால்… ஓய்வு எடுங்கள். உழைப்பு அதிகம் வேண்டாம். உடல்நலனில் அக்கரை தேவை. 7-ம் இடத்தில் கேது உள்ளதால், கூட்டு தொழிலில் நிதானமாக இருக்க வேண்டும். மனைவியின் உடல்நலனில் கவனம் தேவை. 12-ம் இடத்தை, 5-ம் இடத்தோன் பார்வை செய்வது சுபசெலவுகளை அதிகரிக்கும். உங்களுக்கு இது அருமையான தமிழ் புத்தாண்டு.

சிம்ம இராசி அன்பர்களே… உங்கள் இராசி அதிபன் சூரியன் 9-ம் இடத்தில் அமர்ந்து, சுக்கிரனோடு இருக்கிறார். பல நாட்கள் போராடிய பல பிரச்னைகள், தெய்வ அனுகிரகத்தால் வெற்றி அடையும். எதிரிகள் மண்டியிடுவர். 8-க்குரிய குரு பகவான் 3-ம் இடத்தில் அமர்ந்து காரிய சித்தி தருவார். 9-க்குரிய செவ்வாய், 6-க்குரிய சனி 5-ம் இடத்தில் உள்ளதால், “இரு மாரகன் கொல்லான்” என்பதற்கேற்ப நோய்நொடிகள் அத்தனையும் தீரும். வழக்கு இருந்தால் சாதகம்தான். குடும்பத்திற்கு தேவையான பொருட்கள் கைக்கு வந்து சேரும். 12-ல் இராகு உள்ளதால், தெய்வ தரிசனம் கிட்டும். வெளிநாட்டில் வேலை வாய்ப்பு அமையும். கூட்டு தொழில் செய்வீர்கள். பெற்றோரின் உதவிகள் கிடைக்கும். 9-க்குரிய செவ்வாய், 5-ல் இருப்பதால் சொத்துக்கள் சேரும். குழந்தை பேறு உண்டாகும். மட்டற்ற மகிழ்ச்சி ஏற்படும். ஆதாயம் தரும் ஆண்டு. மிக அருமையான தமிழ் புத்தாண்டு.

கன்னி இராசி அன்பர்களே… உங்கள் இராசிக்கு 12-க்குரிய சூரியன், 8-ம் இடத்தில் அமர்ந்துவிட்தால், கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் இராஜயோகம் என்பதற்கேற்ப இராஜயோகம் பெறுவீர்கள். எனக்கு இப்படி ஒரு வாய்ப்பா? இப்படி ஒரு அருமையான வாழ்க்கையா? என்று நீங்களே பிரமித்து போவீர்கள். ஆம், சூரியன் உங்களுக்கு வாரி கொடுப்பார். குரு பகவான் 2-ம் இடத்தில் தனித்து உள்ளார். வீண் செலவு அதிகரிக்கும் என்பதால் கவனமாக இருக்கவும். 4-ல் உள்ள செவ்வாய், சனி உடல்நலனில் சிறு,சிறு தொந்தரவு தரும். பாதகம் செய்யாது. ஜென்ம-லாபாதிபதி 7-ல் அமைந்து திருமண தடையை நீக்குகிறார். திருமணமான இளம் தம்பதியினருக்கு குழந்தை பேறு உண்டாகலாம். சொத்து விஷயங்களில் வழக்கு இருந்தால் சாதகமான பலன் வந்தடையும். சிலருக்கு மனைவியின் யோகத்தால் நன்மை கிடைக்கும். வெளிநாட்டு வணிகம் லாபம் தரும். அரசாங்க ஆதரவு தேடி வரும். அருமையான தமிழ் புத்தாண்டு.

துலாம் இராசி அன்பர்களே… உங்கள் இராசிக்கு 7-ம் இடத்தில் சூரியன், சுக்கிரன் உள்ளதால், ஆரம்பமே அமர்களம்தான். 11-க்குரியன், ஜென்மாதிபதி ஆகியோர் இணைந்ததால் கை நிறைய காசு. இத்தனைநாள் ஏதோ ஒரு விஷயத்தில் அது என்னாகுமோ என்று குழம்பிய மனம், இனி ஒரு தெளிவான நிலைக்கு மாறும். கீர்த்திஸ்தானத்தில் செவ்வாய், சனி இருப்பதால், எதிர்பார்த்தது கைக்கு கிடைக்கும் நேரம் இது. கல்வி தடை நீங்கும். மேல்படிப்பு உண்டு. உத்தியோக உயர்வும் உண்டு. சன்னியாசி வாழ்க்கை இனி சம்சார வாழ்க்கையாகும். குடும்ப பகை விலகும். உழைப்பு அதிகமாகும். உடலில் அலர்ஜி வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். வாகனம் ஓட்டுவதிலும் கவனம் தேவை. சில உறவினர்கள் வருகையால் தேவையற்ற பிரச்னை வரலாம். வீடு கட்டுவதில் தடை ஏற்பட்டு இருந்தால் இனி கட்டட வேலை அதிவேகமாக நடக்கும். பொன்-பொருள் சேரும். இது உங்களுக்கு மகிழ்ச்சியான தமிழ் புத்தாண்டு.

விருச்சிக இராசி அன்பர்களே… உங்கள் இராசிக்கு 10-க்குரிய சூரியன் 6-ல் மறைந்து வந்தாலும், தனாதிபதி குரு பார்வை பெறுகிறார். ஆகவே, இந்த வருடம் சுபவிஷயங்கள் அதிகம் நடக்கும். 2-ம் இடத்தில் சனி, செவ்வாய் உள்ளனர். காரியங்கள் கை கூட வேண்டும் என்று பர,பரப்பு அதிகம் அடைவீர்கள். அதனால் தேவையில்லா டென்ஷன் அதிகரிக்கும். பஞ்சமத்தில் புதன், சந்திரன் அமைந்ததால், செய்யும் தொழிலில் திட்டம் சரியானதுதானா? என்று மற்றவர்களை கலந்து ஆலோசித்து செய்வது நல்லது. திருமணமானவர்கள் என்றால் கணவன் (அ) மனைவியின் ஆலோசனை பெறுவது நல்லது. காரணம், 2-ம் இடத்தில், 6-க்குரியவன் இருப்பதால் எடுத்தோம், கவிழ்த்தோம் என்று போய்விடும். பாதசனி இருப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். சுக்கிரன் 6-ம் இடத்தில் உள்ளதால் பொன்-பொருள் சேரும். பிரயாணங்கள் அதிகரிக்கும். கைநிறைய பணம் நினைத்ததை விட அதிகம் கிடைக்கும். அருமையான தமிழ் புத்தாண்டு.

தனுசு இராசி அன்பர்களே… உங்கள் இராசிக்கு பஞ்சமத்தில் சூரியன் அமைவது அருமையான விஷயம். அதிர்ஷ்டம் கதவை தட்டும். எண்ணங்கள் ஈடேறும். வாகனம் வாங்குவீர்கள். சொத்துக்கள் சேரும். பொற்றோரின் உதவிகள் கிடைக்கும். உத்தியோக பிரச்னை தீரும். உயரதிகாரியின் உதவியும், பாராட்டுகளையும் பெறுவீர்கள். திருமணம் நடக்கும். பலநாட்களாக இருந்த கடன், குறைய ஆரம்பிக்கும். 4-ம் இடத்தில் உள்ள புதன், சந்திரன் சில உறவினர்களால் கொடுக்கல்-வாங்கலில் மனகசப்பு உண்டாக்குவர். கவனம் தேவை. 8-ம் இடத்தில் இராகு இருப்பதால், வழக்கை நம்புவதை விட எதிராளியிடம் உட்கார்ந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டால் தீர்வு வரும். 11-ம் இடத்தில் உள்ள குரு பகவான், பணத்தை சேமித்து வைக்க வேண்டும் என எச்சரிக்கிறார். தேவையே இல்லாத செலவு வரும். சிக்கனமாக இருங்கள். பொதுவாக உங்களுக்கு இது மேன்மை தரும் தமிழ் புத்தாண்டு.

மகர இராசி அன்பர்களே… உங்கள் இராசிக்கு சுகஸ்தானத்தில் சூரியன் அமர்ந்துள்ளார். சிலர், “8-குரியன் 4-ம் இடத்தில் வருவது நன்மை இல்லை” என்று சொல்வார்கள். ஆனால் சூரியனோடு பஞ்சமாதிபதி சேர்ந்துவிட்டால் பாதகம் தருவதை தவிர்த்து சாதகமே அதிகம் செய்வார். பொன்-பொருள் சேமிப்பு அதிகரிக்கும். பதவி உயர்வு வரும். சிலருக்கு சம்பளம் கூடும். தொழில் செய்பவர்களுக்கு புதிய ஆர்டர்கள் அதிகரிக்கும். வாடகை வீட்டில் தவித்தவர்களுக்கு சொந்த வீடு அமையும். சிலருக்கு பிள்ளைகளால் புகழ் உண்டாகும். கணவன்-மனைவிக்குள் இருந்த பிரச்னை தீரும். சுபநிகழ்ச்சிகள் வீட்டில் அதிகரிக்கும். ஆனால், ஜாமீன் கையெழுத்து போடுவதை தவிர்க்கவும். வீண் சண்டை தேடி வரும். ஆகவே நிதானம் தேவை. சொத்து விஷயத்தில் வில்லங்கம் இல்லாமல் பார்த்து வாங்கவும். முக்கியமாக 12-ம் இடத்தில் செவ்வாய், சனி இருப்பதால் எவரிடமும் வாக்குவாதம் வேண்டாம். பொதுவாக, முன்னேற்றம் கொடுக்கும் இந்த தமிழ் புத்தாண்டு.

கும்ப இராசி அன்பர்களே… உங்கள் இராசிக்கு கீர்த்திஸ்தானத்தில் சூரியன் அமர்ந்துவிட்டார். இனி புகழ், கீர்த்தியுடன் வாழ்வீர்கள். உங்களை கண்டால் விலகி சென்றவர்கள் உறவாட வந்து விடுவார்கள். பாக்கியத்தில் குரு பகவான் உள்ளதால், உட்கார இடமில்லை என்று ஏங்கியவர்கள் சொந்த வீடு, மனையுடன் வாழ்வது நிச்சயம். 6-ம் இடத்தில் உள்ள இராகு, வட்டிக்கு வட்டி கொடுத்து வாடிய குடும்பத்தை இனி கடனில்லாமல் வாழ வைப்பார். குடும்பஸ்தானத்தில் புதன், சந்திரன் உள்ளதால், கல்வியால் பெரும் பயன் வந்தடையும். 11-ல் உள்ள சனி, செவ்வாய் வெளிநாட்டு பயணம் திடீர் என்று கைகூடும். வெளிநாட்டவரால் பணவரவும் அதிகரிக்கும். தொழில் படிப்படியாக முன்னேறும். சகோதர, சகோதரி ஒற்றுமை நன்மை தரும். 12-ல் கேது உள்ளதால், அனாவசியமான செலவுகள் கண்டிப்பாக கூடாது. முக்கியமாக, உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பொதுவாக, இந்த தமிழ் புத்தாண்டு பிரமாதமான புத்தாண்டு.

மீன இராசி அன்பர்களே… உங்கள் இராசிக்கு 2-ம் இடத்தில் சூரியன் அமர்ந்துவிட்டார். சூரியனோடு சுக்கிரன் இணைந்துள்ளார். திட்டங்கள் நிறைவேறும். பிரிந்த குடும்பம் ஒன்று சேரும். திருமண வரனுக்காக காத்திருப்பவர்களுக்கு திருமண வரன் கதவை தட்டும். சிலருக்கு பிள்ளைகளால் நன்மை நடக்கும். உறவினர்கள் தேடி வந்து சுபநிகழ்ச்சிகளை நடத்தி வைப்பார்கள். இப்படி ஒரு நல்ல திருப்பம் வந்ததில்லை என்று மனபூரிப்பு அடைவீர்கள். 10-ம் இடத்தில் உள்ள செவ்வாய், சனி காரிய சித்தியாக்கும். வண்டி, வீடு, வாசல் என தெய்வ அனுகிரகத்தால் உங்களை வந்தடையும். பயணங்கள் அதிகரிக்கும். தெய்வ தரிசனம் கிடைக்கும். ரோகம் நிவர்த்தி பெறும். தேவையில்லா குழப்பம் பறந்து விடும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும். துன்பங்கள் மறைந்து இனிய புத்தாண்டாகும். நினைத்ததை விட நன்மைகள் வந்துவிட்டது என்று மகிழ்வீர்கள். மொத்தத்தில் இந்த புத்தாண்டு பூரிக்கச் செய்யும் அருமையான தமிழ் புத்தாண்டு.

அனைவருக்கும் சித்திரை விளம்பி தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !

மேலும் ஜோதிட கட்டுரைகள் படிக்கவும்…

மேலும் இராசி பலன்கள் படிக்கவும்…

மேலும் வாஸ்து கட்டுரைகள் படிக்கவும்…

மேலும் ஆன்மிக கட்டுரைகள் படிக்கவும்…

ஜோதிட ஆலோசனைக்கு இங்கே பார்க்கவும்…

For ASTROLOGY CONSULTATION click here..

Send your feedback to: editor@bhakthiplanet.com

For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India

http://www.youtube.com/bhakthiplanet

http://www.facebook.com/bhakthiplanet

http://www.youtube.com/niranjanachannel

For Astrology Consultation CLICK Here

© 2011-2018 bhakthiplanet.com  All Rights Reserved

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »