Monday 23rd December 2024

தலைப்புச் செய்தி :

ராகு கேது தோஷ பரிகாரங்கள்: ராகு கேது பெயர்ச்சி சிறப்பு கட்டுரை!

Written by Niranjana  niranjana

வைர கல்லாக இருந்தாலும் அதை அணியும் போது மற்றவர்கள் பார்க்க வேண்டும் என்றால் வைரத்தை விட குறைந்த விலையான தங்கத்தில் பதிக்க வேண்டும். தங்க நகையில் பதிக்காமல் எப்படி வைரகல்லை அலங்கரிக்க முடியாதோ அது போல் யோகமான ஜாதகமாக அமைந்தாலும் நாகதோஷம் இருந்தால் அதற்கு பரிகாரம் செய்ய வேண்டும். நாகபஞ்சமி அன்று நாகாத்தம்மனை வணங்க வேண்டும்.

காலசர்ப்பதோஷ ஜாதகமாக இருந்தால் நுட்பது வயதிற்குள் எந்த லாபகரமான அதிர்ஷ்டத்தையும் பெற முடியாது. திருமணம் தடை கூட ஏற்படும் என்கிறது ஜோதிட சாஸ்திரம். காலசர்ப்ப தோஷத்தை காலசர்ப்ப யோகமாக மாற்ற வேண்டும் என்றால் இறைவனிடமே தஞ்சம் அடைய வேண்டும். நாள் என்ன செய்யும், கோள் என்ன செய்யும் வினைதான் என்ன செய்யும், இறைவன் என் அருகில் இருக்கும் வரை என்ற முழு நம்பிக்கையுடன் தெய்வத்தை வணங்குங்கள்.

Bhakthi Planetராகுவை போல் கொடுப்பார் இல்லை, கேதுவை போல் கெடுப்பார் இல்லை என்பார்கள். பொதுவாக ராகு – கேது ஒருவரின் ஜாதகத்தில் சரியில்லை என்றால் அவர்களுக்கு நாகதோஷம் ஏற்படும். அதை போக்க சிறந்த பரிகாரம் திருக்காளஹஸ்தி மற்றும் திருநாகேஸ்வரம். வாயு பகவானுக்கும், ஆதிசேடனுக்கும் சண்டை ஏற்பட்டது. அதிக சக்தியுடையவர்கள் யார்? என்று வாயு பகவானுக்கும் ஆதிசேடனுக்கும் பிரச்னை. அதனால் அதிக கணமுள்ள மலையை யார் அசைக்கிறார்களோ அவர்கள்தான் பலவான்கள் என்று அவர்களுக்குள்ளேயே போட்டி வைத்து கொண்டார்கள். மலையை அசைத்தார்கள். மலை அசைந்து அசைந்து வானத்தில் இருந்து பூமியில் விழுந்து அந்த மலை மூன்றாக பிளந்தது. அதில் இருந்து ஒரு பகுதிக்குதான் திருகாளஹஸ்தி என்ற நாமம் சூட்டப்பட்டது. திருக்காளஹஸ்தி திருக்கோயிலில் சிவனின் அருகே இருக்கும் தீப சுடர் ஒன்று மட்டும் எந்நேரமு்ம காற்றில் அசைந்து கொண்டெ இருக்கும். சிவபெருமானின் மூச்சி காற்றுபட்டு தீப சுடரொலி அசைகிறது. திருகாளஹஸ்தி திருத்தலம் பஞ்சபூதங்களில் ஒன்றான வாயுஸ்தலம் என்கிற காற்றுதலம். இந்த காளஹஸ்தியில் நக்கீரர் தன் பாபத்தையும் தோஷத்தையும் போக்கி கொண்டார். ஞானம் பெற வேண்டும் என்றால் திருகாளத்திக்கு வாருங்கள் என்று அழைக்கிறார் ஞானப் பூங்கோதை என்ற பார்வதி தேவி. ஆம் பக்தர்களுக்கு ஞானத்தை அள்ளி தர தயராக இருக்கிறாள் நம் அன்னை.

திருக்காளஹஸ்திக்கு சென்று பரிகாரம் செய்யும் முன்னோ பின்னோgreensite திருநாகேஸ்வரம் சென்று அங்கு தோஷ பரிகாரத்தையும் செய்ய வேண்டும். எப்படி திருப்பதியில் இருக்கும் பெருமாளை பார்ப்பதற்கு முன்போ அல்லது பின்போ  அலமேலுமங்கை தாயாரையும் பார்க்க வேண்டும் என்கிற விதி இருக்கிறதோ அதுபோல்தான் திருகாளஹஸ்திக்கு சென்று காலசர்ப்ப தோஷம் தீர பரிகாரம் செய்தாலும் திருநாகேஸ்வரம் சென்று அங்கும் பரிகாரம் செய்தால்தான் பலன் கிடைக்கும் என்கிறது பரிகார சாஸ்திரம்.

ராகு – கேது என்கிற இரு கிரகங்களால் ஏற்படும் தோஷமே காலசர்ப தோஷம் அல்லது சர்ப்ப தோஷம். கேது தோஷத்தை காளஹஸ்திக்கு சென்று பரிகாரம் காண வேண்டும. ராகு தோஷத்தை திருநாகேஸ்வரம் சென்று பரிகாரம் காண வேண்டும. கேது தோஷம் நீங்கினால் ஞானம் வாரி வழங்கும். புத்தி தெளிவு பெறும். பக்தி அறிவு ஜொலிக்கும். ஞானம் என்பது அறிவு.

Manamakkal Malaiசுப்பிரியன் என்ற வியபாரி சிறந்த சிவ பக்தர். அத்துடன் நாகத்தையே தெய்வமாகவும் வணங்குவார். அவர் திருநாகேஸ்வரரை தினமும் வணங்கி வந்தார். ஒருநாள் வியபாரம் முடித்து கொண்டு அதிக பணத்துடன் திருநாகேஸ்வரரை வணங்க கோயிலுக்கு சென்றார். அந்த நேரத்தில் கோயிலில் விசேஷ பூஜை காரணமாக சுப்பிரியன் தன் வீட்டுக்கு திரும்பி செல்ல நேரம் கடந்தது. இரவு பன்னிரெண்டு மணியானதால் இனி வீட்டுக்கு செல்ல முடியாது என்ற எண்ணத்தில் அந்த ஆலயத்திலேயே ஒரமாக படுத்து உறங்கி விட்டார்.

“கோயிலில் ஒருவன் தூங்கிக் கொண்டு இருக்கிறான்.. பார்க்க செல்வந்தன் போல் தெரிகிறது. அவனிடம் ஒரு பெரிய மூட்டையிருக்கிறது. அனேகமாக அந்த மூட்டையில் பணம் இருக்கும் என்று நினைக்கிறேன்.“ என்று ஒரு திருடன் தன் கூட்டாளிகளிடம் சொல்லி எல்லோரையும் அழைத்து வந்தான் கொள்ளையடிக்க.

சுப்பிரியனை கொன்று பணத்தை எடுக்க அவர் அருகில் பலபலக்கும்niranjana channel கத்தியுடன்  நெருங்கினான் ஒரு திருடன். இதை அரை தூக்கத்தில் கண்டவுடன் பதறியடித்து கொண்டு தன்னையறியாமலே ஒடி கோயில் கருவறைக்குள் சென்று திருநாகேஸ்வரரின் லிங்கத்தை கட்டி பிடித்து கொண்டார். மார்கண்டையர் எமனை பார்த்து பயந்து லிங்கத்தை அனைத்தது போல் அனைத்து கொண்டார்.

அப்போது ஒரு ஆச்சரியம் நிகழ்ந்து. நாகலிங்கத்தில் இருந்து பாம்பு தோன்றி திருடர்களை பார்த்து சீறியது. கள்வர்கள் பயந்தார்கள். உயிருக்கு அஞ்சி ஒடினார்கள். சுப்பிரியனின் பணத்தையும் உயிரையும் காப்பாற்றினார் திருநாகேஸ்வரர்.

தமிழ்நாட்டில் கும்பகோணத்தில் திருநாகேஸ்வரம் கோவில் உள்ளது. ஐந்து தலை கொண்ட ராகுக்கு சிறந்த தலம். இதை திருநாவுக்கரசர் எவ்வளவு அழகாக சொல்லியிருக்கிறார் பாருங்கள்.

“சந்திரர் சூரியர் சீர் வழிபாடுகள் செய்த பின் 

ஐந்தலை அரவின் பணி கொண்டு அருளும் நாகேச்சுரம்.”

என்று திருநாவுக்கரசர் எழுதிய தேவாரத்தில் உள்ளது. இதையே சம்பந்தரும் தம் அழகு தமிழில்…

“மாயனும் மலரானும் கை தொழ

ஆய அந்தணன் ஆடானை

தூய மாமலர் தூவின் கை தொழ

தீய வல்வினை தீருமே

 காளமேக நிறக் காலனோடும் அந்தகள் கருடனும்

நீளமாய் நின்று எய்த காமனும் பட்டன்நினைவுறின் நாளுநாதன் அமர்கின்ற நாகேச்சரம் நன்னுவார்

கோளு நாளும் தீயவேனும் நல்வவாம் குளிக்கொள்மினே”

 திருகாளஹஸ்தி, கேது தோஷத்தை போக்கும் – திருநாகேஸ்வரம் ராகு தோஷத்தை போக்கும். ராகு – கேது தோஷம் நீங்கினால்தான் வசதியான வாழ்க்கை நல்ல தெளிவான புத்தியும் அமையும்.

ஞானமும், செல்வமும் சேர வேண்டும். அப்படி சேர்ந்தால்தான் அவர்கள் முழுமையான மனிதப்பிறவி எடுத்ததற்கு பலன் அடைகிறார்கள். அதற்கு திருகாளஹஸ்தியும் திருநாகேஸ்வரமும் துணை செய்யும்.

Tamil New Year Rasi Palangal 2017 – 2018  All Rasi palangal Click Here 

2017 Numerology Predictions Click Here

SANI PEYARCHI 2017 – 2020 RASI PALAN Click Here

Guru Peyarchi Palangal & Pariharam 2016-2017 All Rasi palangal Click Here

RAHU KETU PEYARCHI Palangal 2017-2018 All Rasi Palan Click Here

மச்ச பலன்கள் கிளிக் செய்யவும் 

ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்

வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும் 

ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும் 

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India 

For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com

http://www.youtube.com/bhakthiplanet

http://www.youtube.com/niranjanachannel

http://www.facebook.com/bhakthiplanet

For Astrology Consultation CLICK Here

© 2011-2017 bhakthiplanet.com  All Rights Reserved

1 Comment for “ராகு கேது தோஷ பரிகாரங்கள்: ராகு கேது பெயர்ச்சி சிறப்பு கட்டுரை!”

  1. Ananthi arunpandian

    I do not even know how I ended up here, but I thought this post was great. I don’t know who you are but certainly you’re going to a famous writer if you aren’t already 😉 Cheers!

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »