Monday 23rd December 2024

தலைப்புச் செய்தி :

வம்ச வளர்ச்சிக்கு அமாவாசை வழிபாடு

Written by Niranjana

அமாவாசையில் நம் குடும்பத்தின் முன்னோர்களை நினைத்து வணங்கி பூஜை செய்ய வேண்டும். பெயர் சொல்ல பிள்ளை என்பார்கள். இதன் காரணம் என்னவென்றால் தாய், தகப்பனுக்கு பிறகும் அந்த வம்சத்தை வளர செய்வது மட்டுமே பிள்ளைகளின் வேலையல்ல. தமது குடும்பத்தின் பெரியோர்கள் இருக்கும் போதும் சரி, இல்லாத போதும் சரி, அந்த ரத்த பந்தங்களின் மனதை குளிர்விக்க வேண்டும்.  மறைந்த பெரியோர்களுக்கு தர்பணம் செய்யும்போது அந்த பெரியோர்களின் பெயர்களை சொல்லி அவர்களின் ஆத்மாக்களை சாந்தி செய்ய வேண்டும் என்பதால்தான், “பெயர் சொல்ல ஒரு பிள்ளை வேண்டும்“ என்றார்கள் நம் முன்னோர்கள்.

இதைதான் தசரத மகாராஜாவும் நினைத்து யாகங்களை செய்தார். பொதுவாக சிலர் சொல்வார்கள், “இப்போதெல்லாம் வீட்டில் அமாவாசை பூஜை செய்ய நேரமே இல்லை, வருடத்திற்கு ஒருமுறை திதி கொடுத்து விடுகிறோமே அது போதாதா?” என்று.

உடலை பரிசோதிக்க ஒரு மருத்துவமனைக்கு சென்றால் பாதி நாட்கள் அந்த மருத்துவமனையிலேயே தவம் கிடக்கிறோம். அப்பொதெல்லாம் கிடைக்கும் நேரம், ஒரு சில நிமிடங்கள் மட்டும் போதுமான அமாவாசை பூஜை செய்ய மட்டும் நேரம் இல்லை என்பதற்கு அக்கறையின்மை ஒரு காரணமாக இருந்தாலும் இன்னொரு காரணம், தமது குடும்பத்தின் முன்னேற்றத்திற்கு முன்னோர்களின் ஆசியை கிடைக்கவிடாமல் கொடிய விதி அவர்களை தடுக்கிறது. இந்த முன்ஜென்ம கர்மாவானது, முன்னோர்களை வணங்கி பூஜை செய்ய வேண்டும் என்ற எண்ணமே அவர்களின் மனதில் உருவாகாமல் செய்யும்.

எது நம்மை தடுத்தாலும் அந்த தடைகளை எல்லாம் தாண்டி பித்ருக்களுக்கு (முன்னோர்களுக்கு) அமாவாசை பூஜை செய்தே ஆக வேண்டும் என்று உறுதியுடன் நின்று வழிபாடுகள் செய்தால் கொடிய வினைகள் எதுவும் விலகிவிடும்.

அமாவாசை அன்று இறந்தவர்களுக்கு பிடித்த உணவை படைத்து பூஜை செய்து, படைத்த உணவை சிறிதளவு எடுத்து காக்கைக்கு வைத்தால், காக்கை உருவத்தில் இறந்தவர்கள் சாப்பிடுவதாக ஐதீகம்.

இறைவனுக்கு பூஜைகள் – வழிபாடுகள் போன்றவை எந்த அளவுக்கு முக்கியமோ அதை விட பித்ருக்களுக்கு அமாவாசை போன்ற புண்ணிய நாட்களில் செய்கிற பூஜைகளும் வழிபாடுகளும் மிக  முக்கியம்.

அத்துடன் அன்றைய நாளில் ஒருவருக்காவது அன்னதானமும், முடிந்தால் வஸ்திர தானமும் செய்யலாம்.

துஷ்டசக்திகளை விரட்டும் ஆற்றல் ஆத்மாவுக்கு உண்டு. துஷ்டசக்திகள், பித்ருபூஜையை தடையில்லாமல் செய்பவர்களை நெருங்காது. இதன் பிறகுதான் நாம் வணங்கும் குலதெய்வமும், இஷ்டதெய்வமும் நமக்கு  நல்வாழ்க்கை தருகிறது.

இறந்தவர்களை முறையாக வணங்கினால்தான் அந்த இல்லத்தில் ஸ்ரீ லஷ்மிதேவி வாசம் செய்வாள். பித்ருக்களை வணங்கவில்லை என்றால், புண்ணிய நாட்களில் அவரவர் குடும்பத்திற்கு திரும்பி வரும் ஆத்மாக்கள், தலைவாசலோடு நின்றுவிடும். தம் குடும்பத்தினர் வசிக்கும் வீட்டுக்குள் நுழைய தடை உண்டாகும். இதனால் நம் குடும்பத்தினரே நம்மை மதிக்கவில்லையே என்று அந்த ஆத்மாக்கள் வேதனை அடைந்து கண்ணீர் விடும்.

சங்கை காதில் வைத்தால் கடலோசை கேட்பது போல, பித்ருக்களின் அழுகை ஒலி ஸ்ரீமகாலஷ்மிக்கு கேட்கும். தன் கணவரால் அனுப்பப்பட்ட அவரவர் குடும்பத்தினரின் ஆத்மாகளை மதிக்காமல் இருக்கிறார்களே என்ற கோபத்தில் அந்த இல்லத்தை விட்டு ஸ்ரீமகாலஷ்மியும் விலகி விடுவாள். நல்ல சக்திகள் வெளியேறினால் தீய சக்திகளுக்கு உண்டாகும் கொண்டாட்டத்தை கேட்கவா வேண்டும். ஆத்மா இருக்கிறதா? என்ற கேள்வி எல்லோரின் மனதிலும் இருக்கிறது. ஆத்மா இருக்கிறது. ரேடியோ அலைகள் நம் கண்களுக்கு தெரியாது. ஆனால் அது ரேடியோ கருவிக்குள் நுழைவதைபோல, ஆத்மாக்கள் நம் கண்களுக்கு தெரியாவிட்டாலும், பைரவரின் வாகனம் எனப்படும் நாய்களின் கண்களுக்கு தைரியும்.

அமாவாசை போன்ற புண்ணிய நாட்களில் முன்னோர்களை வணங்கி,  அன்னதானம் – போன்ற தான-தர்மங்கள் செய்யும்போது, அந்த  ஆத்மாக்கள் வேறு எங்காவது பிறவி எடுத்து இருந்தாலும் எந்த வகையிலாவது வேறு விதத்தில் அவை சேரும். உதாரணத்திற்கு, நீங்கள் ஒரு ஊருக்கு செல்கிறீர்கள், வழியில் நல்ல பசி – தண்ணீர் தாகம். ஆனால் கண்ணுக்கு எட்டும் தூரம்வரை எதுவும் கிடைப்பதாக தெரியவில்லை. அந்த சமயத்தில் அதிர்ஷ்டவசமாக உங்களுக்கு தண்ணீரோ – உணவோ பெற வழி கிடைத்து, உங்கள் உயிர் காப்பாற்றபடலாம். இது தெய்வ செயல் என உங்கள் உள்ளுனர்வு சொன்னாலும், உண்மையில் உலகின் எங்கோ மூலையில் உங்கள் முன்ஜென்ம பிறவியின் குடும்பத்தினர் உங்களை நினைத்து, தான-தர்மங்கள் செய்து இருந்தாலும், அது உங்களுக்கு எந்த வகையிலாவது வந்து உதவும். அதனால்தான் எல்லா மதத்திலும் இறந்துபோன அவரவர் குடும்பத்தினரின் நினைவஞ்சலி கடைப்பிடிக்கப்படுகிறது.

மறைந்த தாய்-தந்தையின் படத்தை பூஜையறையில் வைத்து வணங்கலாமா? என்ற சந்தேகம் பலருக்கு உள்ளது. கண்கண்ட தெய்வம் அவர்கள்தான். அதனால் தாராளமாக பூஜையறையில் அவர்களின் படத்தை வைத்து வணங்கலாம். தெய்வத்தி்ன் படங்கள் மேலாகவும், அதன் கீழே இறந்தவர்களின் படங்களை வைக்கலாம்.

மறைந்தவர்களுக்கு பூஜை செய்து அவர்களை மகிழ்வித்தால் சுபநிகழ்ச்சிகள் தடையில்லாமல் நடக்கும். தோஷங்கள் அகலும். துஷ்டசக்திகளையும், துஷ்டர்களையும் அந்த வீட்டிற்குள் நுழைய விடாது. இறைவனை வணங்கினாலும், இறந்தவர்களையும் வணங்கினால்தான் சகல வளங்களையும் கொடுத்து செல்வந்தராக்கும் என்கிறது கருடபுராணம். ஸ்ரீமந் நாராயணனே கருடபுராணத்தில், “முன்னோர்களுக்கு பூஜை செய்தால்தான் தெய்வத்தின் ஆசியும், நன்மையும் கிடைக்கும்“ என்றார்.

Tamil New Year Rasi Palangal 2017 – 2018  All Rasi palangal Click Here 

2017 Numerology Predictions Click Here

SANI PEYARCHI 2017 – 2020 RASI PALAN Click Here

Guru Peyarchi Palangal & Pariharam 2016-2017 All Rasi palangal Click Here

RAHU KETU PEYARCHI 2016 – 2017 All Rasi Palangal

மச்ச பலன்கள் கிளிக் செய்யவும் 

ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்

வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும் 

ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும் 

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India 

For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com

http://www.youtube.com/bhakthiplanet

http://www.youtube.com/niranjanachannel

http://www.facebook.com/bhakthiplanet

For Astrology Consultation CLICK Here

© 2011-2017 bhakthiplanet.com  All Rights Reserved

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »