Friday 15th November 2024

தலைப்புச் செய்தி :

கணவரின் ஆயுள் அதிகரிக்கும் காரடையான் நோன்பு

Written by Niranjana niranjana

மத்திரத் தேசத்தின் அஸ்வபதி என்ற அரசனுக்கு மாளவி என்ற குணவதியான மனைவி இருந்தாள். “அரசன் என்ற பதவியை கொடுத்த இறைவனால், தந்தை என்ற பதவியை கொடுக்க முடியவில்லையே…“ என்ற கவலை அஸ்வபதி தம்பதினருக்கு வாட்டியது. தன் கவலையை நாரதர் முனிவரிடம் சொல்லி வருத்தபட்டார் அரசர். “கவலை வேண்டாம். இறைவன் உங்களுக்கு பெரும் செல்வமான குழந்தை செல்வத்தை தருவார். நீங்கள் சாவித்திரி தேவியை மனதால் நினைத்து விரதம் இருந்து யாகம் செய்யுங்கள்“ என்றார் நாரத முனிவர்.

நாரதரின் வாக்கு வன்மையோ அல்லது யாகத்தின் மகிமையோ… ஆச்சரியப்படும் விதமாக, பல வருடங்களாக குழந்தை இல்லாத கவலை தீர்ந்தது. ஆம்… மாளவி கருதரித்தாள். ஓரு வருடத்தில் அழகான பெண் குழந்தையை பெற்றேடுத்தாள். சாவித்திரி தேவியின் அருளால் பிறந்ததால், அந்த குழந்தைக்கு “சாவித்திரி“ என்று பெயர் வைத்தார்கள்.

குழந்தை பருவத்தை கடந்து பருவ மங்கையானாள் சாவித்திரி. தன் கையால் பூ  பறித்து இறைவனுக்கு மாலை சூடுவதை வாடிக்கையாக வைத்திருந்தாள் சாவித்திரி. ஒருநாள், தன் தோழிகளுடனும் பணிப் பெண்களுடனும் காட்டில் பூ பறிக்க சொன்றாள். அப்போது –

அதே காட்டில் குடும்பத்தோடு வாழ்ந்து வரும் சத்தியவானை கண்டாள். பார்த்தவுடனே “இவர்தான் தமக்கு கணவராக வர வேண்டும்.“ என்று தீர்மானித்தாள் சாவித்திரி. தன் விருப்பத்தை தந்தையிடமும் சொன்னாள் சாவித்திரி.

Bhakthi Planetபொதுவாக பிள்ளைகளின் காதலை உடனடியாக எந்த பெற்றோரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஆனால் சாவித்திரியின் தந்தையோ தன் மகளின் காதலுக்கு எதிர்ப்பு சொல்லவில்லை. காதலுக்கு காது கேட்காது என்று அவருக்கும் தெரியும். தந்தையின் நண்பரான நாரத முனிவரோ இதற்கு சம்மதிக்கவில்லை.

“சத்தியவானுக்கு ஆயுள் குறைவு. அவனை திருமணம் செய்தால் காலம் முழுவதும் நீ கண்ணீர் சிந்த வேண்டும்“ என்று எவ்வளவோ எடுத்துரைத்தார். ஆனால் சாவித்திரியோ நாரதரின் பேச்சை சிறிது கூட காதில் போட்டு கொள்ளவில்லை. சாவித்திரியின் தந்தையோ, “என் மகளின் விருப்பமே என் விருப்பம்“ என்று கூறி தந்தை அஸ்வபதி, சாவித்திரியை சத்தியவானுக்கு திருமணம் செய்து வைத்தார்.

நாட்கள் பறந்தது. மாதங்கள் ஓடியது. ஒரு வருடம் முடியும் தருவாயில் நாரத முனிவர் கூறியது போல் ஒருநாள், சாவித்திரியிடம் பேசி கொண்டு இருக்கும் போது மரணத்தை அடைந்தான் சத்தியவான்.

யமதர்மரை ஒருபிடி பிடித்தாள் சாவித்திரி.

 கணவரின் மரணம் எதிர்பார்த்ததுதான். இருந்தாலும் ஒரு வருடம் கூடniranjana channel முடியாத நிலையில் தன் வாழ்க்கை முடிந்துவிட்டதே என்று கண்ணீர் வடித்தாள் சாவித்திரி. விரோதிகளாக இருந்தாலும் அவர்கள் பெரியோர் என்றால் அவர்களிடத்தில் விரோதத்தை காட்டாமல் வணங்கும் பண்பு உள்ளவள் சாவித்திரி.

தன் கணவரின் உயிரை பறித்த யமன், சாவித்திரி முன் நின்றான். ஆனால் அவள் எந்த கோபத்தையும் காட்டாமல் யம தேவனின் காலில் விழுந்து ஆசி பெற்றாள்.

பொதுவாக சுமங்கலி பெண்கள் பெரியோர்களின் காலில் விழுந்தால், “தீர்க்க சுமங்கலி பவ“ என்று பெரியோர்கள் வாழ்த்துவார்கள். யம தர்மராஜனும் அதுபோல் சாவித்திரியை வாழ்த்தினார். பெரிய மரத்தை சிறு கோடாறி வீழ்த்தி விடும் என்பதுபோல், யமதர்மராஜன் தந்த வாழ்த்துகளை கெட்டியாக பிடித்து கொண்டாள் சாவித்திரி. யமனிடமே வாதாடினாள். “தீர்க சுமங்கலியாக இரு என்று வாழ்த்திய தாங்களே என் வாழ்க்கையை அழிக்கலாமோ…“ என்ற சாவித்திரியின் கேள்விகளுக்கு பொறுமையாக பManamakkal Malaiதில் அளித்தார் யமதேவன்.

சில கேள்விகளுக்கு பதில் தெரியாமல் “ஆமாம் ஆமாம்“ என்று கூறி கொண்டே வந்தார்.

“ஒரு பெண்ணுக்கு எதற்காக திருமணம் செய்து வைக்கிறார்கள்? தலைமுறையை உருவாக்க வேண்டும் என்பதற்காகதானே. ஆனால் என் தலைமுறை என்னோடு முடிந்து விட கூடாது இல்லையா“? என்றாள் சாவித்திரி.

இவளிடம் இருந்து தப்பித்தால் போதும் என்ற அவசர எண்ணத்தில் சாவித்திரி எதை பற்றி பேசுகிறாள் என்று கூட சரியாக கேட்காமல், “ஆமாம் ஆமாம்” என்றார் யம தேவன்.

“அப்படியானால் நீங்கள் எனக்கு இரண்டு வரம் தந்திருக்கிறீர். அதில் முதல் வரம், தீர்க்க சுமங்கலியாக இருப்பாய் என்று சொன்னீர்கள். இரண்டாவது தாய்மை அடைவாய் என்றீர்கள். உங்கள் இந்த இரண்டு வாக்கும், என் கணவர் சத்தியவான் உயிருடன் இருந்தால்தான் சாத்தியம். உங்கள் ஆசி பலிக்க வேண்டும். தாங்கள் “தர்மராஜன்“. நியாயத்தை மட்டுமே பார்ப்பவர். கட்டிய கணவருடன் வாழ்வதுதான் பெருமை. அவர் இல்லாது போனால் ஏது பெருமை.? எனக்கு எப்படி உங்கள் வாக்கு பலிக்கும்? என் கணவர் உயிரை எடுத்துக்கொண்டீரே. தர்மராஜன் என்கிற புகழுக்குரிய உங்கள் ஆசி பலிக்கவில்லை என்று வரலாறு பேசுமே. அதுவா உங்களுக்கு பெருமை?“ என்று யமதர்மரை ஒருபிடி பிடித்தாள் சாவித்திரி.

“இது என்னடா வம்பாக இருக்கிறதே. இதற்குதான் தெய்வம் நேரில் வரக்கூடாதோ…? வந்து தொலைத்தால் இப்படிதான் வம்பாகிவிடும்.“ என்று தன்னை விட்டால் போதும் என்ற எண்ணத்தில் சத்தியவானின் உயிரை திரும்ப கொடுத்துவிட்டு சென்றார் யமதர்மராஜன்.

பூஜை முறைகள்

மாசியும்,பங்குனியும் இணையும் சமயத்தில் காரடையான் நோன்பு நோற்பது வழக்கம்.

மாங்கல்ய பாக்கியத்திற்காக பெண்கள் அனுஷ்டிக்கும் விரதம் greensite காரடையான் நோன்பாகும். மாசி மாதம் முடிந்து, பங்குனி மாதம் துவங்கும் வேளையில் காரடையான் நோன்பு அனுஷ்டிக்கப்படும்.

கார் காலத்தின் முதல் பருவத்தில் விளைந்த நெல்லை குத்தி கிடைத்த அரிசிமாவில் இனிப்பு, காராமணி கலந்து அடை தயாரிப்பதே காரடை ஆகும். இதை நைவேத்தியமாக இறைவனுக்கு படைத்து அனுஷ்டிக்கும் விரதமே காரடையான் நோன்பு ஆகும்.

காரடையான் நோன்பு விரதம் இருக்கும் நாளில் பெண்கள் அதிகாலையில் நீராடி, பூஜையறையை சுத்தம் செய்து அரிசிமாவில்  கோலம்    போடவேண்டும்.  வாழை இலையில் ஒரு கலசம் வைத்து கலசத்தின் மேல் தேங்காய், மாவிலை வைக்க வேண்டும். கலசத்திற்கு சந்தனம், குங்குமம் ,மஞ்சள் பூசி, அதன் மேல் மஞ்சள் கயிறை கட்ட வேண்டும். அருகில் காமாட்சி அம்மன் படம் வைத்து வழிபட வேண்டும்.  அத்துடன் இரண்டு வெல்ல அடைகளும் வெண்ணெயும் பூஜையில் வைக்க வேண்டும்.

“உருக்காத வெண்ணெயும் ஓரடையும் நான் தருவேன், ஒருக்காலும் என்னைவிட்டு என்கணவர் பிரியாதிருக்க வேண்டும்“என்று சொல்லி வழிபடவேண்டும்.

நல்ல நேரம் பார்த்து, பெண்கள் மாங்கல்ய கயிறு கட்டிக்கொள்ள வேண்டும். கன்னிபெண்கள் விரைவில் திருமணம் நடக்க மஞ்சள் சரடு அணிந்தால் விரைவில் திருமணம் நடக்கும்.

மறுநாள் இரண்டு அடையை பசுமாட்டிற்க்குக்கொடுக்க வேண்டும்.

 அரிசி மாவில், இனிப்பு சேர்த்து அடை தயாரிக்க வேண்டும். இதுவே, காரடை ஆகும்.

ராமாயணத்தை  படித்தால், அது படிக்கப்படும் இடத்திற்கு ஆஞ்சனேயர் வந்து விடுவார் என்பதுபோல், சாவித்திரியின் சரித்திரத்தை கேட்டாலோ – படித்தாலோ அந்த இடத்தில் சாவித்திரிதேவியே முன் வந்து ஆசி வழங்குவாள். தீர்க்க சுமங்கலி பவ என்று யமனே ஆசி வழங்குவார்.

14.03.2017 அன்று காரடையான் நோன்பை அனுசரிப்போம்.  நீடூழி வாழ்வோம்.

2017 Numerology Predictions Click Here

SANI PEYARCHI 2017 – 2020 RASI PALAN Click Here

Guru Peyarchi Palangal & Pariharam 2016-2017 All Rasi palangal Click Here 

Tamil New Year Rasi Palangal & Pariharam 2016 – 2017 All Rasi palangal Click Here

RAHU KETU PEYARCHI 2016 – 2017 All Rasi Palangal

மச்ச பலன்கள் கிளிக் செய்யவும் 

ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்

வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும் 

ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும் 

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India 

For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com

http://www.youtube.com/bhakthiplanet

http://www.youtube.com/niranjanachannel

http://www.facebook.com/bhakthiplanet

For Astrology Consultation CLICK Here

© 2011-2017 bhakthiplanet.com  All Rights Reserved

Posted by on Mar 7 2017. Filed under Headlines, அம்மன் கோயில், ஆன்மிக பரிகாரங்கள், ஆன்மிகம், ஆன்மிகம், கோயில்கள், முதன்மை பக்கம். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech