Friday 15th November 2024

தலைப்புச் செய்தி :

ஆட்டி படைக்கும சர்ப்ப தோஷத்தை அடக்குவார் அனுமான்! அனுமன் ஜெயந்தி சிறப்பு கட்டுரை

Written by Niranjana

28.12.2016 அன்று அனுமன்ஜெயந்தி

ஆஞ்சனேயரை வணங்கினால் சனி பகவானால் உண்டாகும் கெடுதல் விலகும் என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால் இராகு – கேதுவால் உண்டாகும் சர்ப தோஷத்தையும் விரட்டி அடிக்கும் ஆற்றல் அனுமனுக்கு உண்டு என்பது உங்களுக்கு தெரியுமா?

கேசரி என்பவர் ஸுமேரு மலைக்கே ஆட்சி புரிந்து வந்தார். அவருடைய மகள் அஞ்சனா. வாயுபகவானுக்கும் அஞ்சனாவுக்கும் பிறந்தவர்தான் ஆஞ்சனேயர். ஒருநாள் வாயு புத்திரரான நம் அஞ்சனேயருக்கு மிகவும் பசி. ஏதாவது சாப்பிட வேண்டும் என்று நினைத்தார். அப்போது சூரியன் கீழ்திசை நோக்கி வந்து கொண்டு இருந்தான். இதை கண்ட ஆஞ்சனேயன், “அதோ… பெரிய மாம்பழம்தான் வானத்தில் இருக்கிறதே…“ என்று நினைத்து வானத்தை நோக்கி பறந்தார். சீறும் பாம்பையும் பயம் இல்லாமல் பிடிக்கும் வயதுதானே குழந்தை பருவம். அதனால் சூரியனின் அருகில் சென்றார். அது – இராகு பகவான் சூரியனை பிடிக்க வேண்டிய கிரகண நாள். அதற்காக சூரியனின் மிக அருகில் வந்து கொண்டிருந்தார் இராகு பகவான்.

“என்னடா இது…? நான் பசியார வந்தால், இவன் யார் குறுக்கே வருவது? எனக்கு முன்னதாக அந்த மாம்பழத்தை பிடித்து தின்றுவிடுவான் போல் இருக்கிறதே. விட மாட்டேன்…. அந்த மாம்பழம் எனக்குதான். வரும் கோபத்தில் அவனை…..“

Manamakkal Malaiபசியால் நமக்கு மயக்கம் வரும். குழந்தை அனுமானுக்கு பசியால் கோபம் வந்தது. குறுக்கே வந்த இராகு பகவானை ஒட ஒட விரட்டி அடித்தார் அஞ்சனேயர். இதை சிறிது கூட எதிர் பார்க்காத இராகு, கடும் சினம் கொண்டு, இந்திரனிடம் சென்று முறையிட்டார். உடனே இந்திர பகவான் அஞ்சனேயரை பிடிக்க வந்தார். அதற்குள் சூரியனை தன் கைகளால் பிடிக்கும் அளவுக்கு நெருங்கி விட்டார் அஞ்சனேயர். கண் இமைக்கும் நிமிடம்தான் இருக்கிறது. கொஞ்சம் விட்டால், விநாயகர் அனாலாசூரனை சாப்பிட்டு ஏப்பம் விட்டாரே… அதைபோல் வாயு புத்திரன் சூரியனை சாப்பிட்டு ஜீரணித்து இருப்பான். நல்ல நேரம்தான் சூரியனுக்கு.

இந்திரனால் சூரியன் தப்பித்தார். ஆம்… சூரியனை ஆஞ்சனேயன் தொடுவதற்கு முன்பாகவே இந்திரன் இந்த காட்சியை கண்டு அதிர்ச்சியடைந்து திடுக்கிட்டு தன் கையில் இருந்த வஜ்ராயுதத்தால் வாயு மகன் மேல் வீசினார். அந்த சக்திவாய்ந்த ஆயுதத்தை தாங்க முடியாத குழந்தை அநுமான், வானத்தில் இருந்து பல ஆயிரம் கிலோ மீட்ட வேகத்தில் கீழே இருந்த மலைமேல் விழுந்ததால் குழந்தையின் வாய் வீங்கியது. உடலில் எந்த அசைவும் இல்லாமல் கிடந்தான். இந்த கொடுர காட்சியை கண்ட வாயு பகவான், கடும் கோபம் கொண்டு, “என் மகன் சுவாசிக்க முடியாத காற்றை இனி யாரும் சுவாசிக்க கூடாது.“ என்று தன் சக்தியால் இயங்கும் காற்றை நிறுத்தினார்.

Bhakthi Planetதேவர்களும், அசுரர்களும் மற்ற உயிர் இனங்களும் சுவாசிக்க காற்று இல்லாமல் கஷ்டப்பட்டார்கள். இதனால் பிரம்ம தேவன் வாயு பகவானிடம், “நீ செய்வது நியாயமா?“ என்றார்.

“நியாயம் பேச என்னிடம் வந்தீர்களே… அறியாத பிள்ளை தெரியாமல் செய்ததற்காக இந்திரன் இப்படியா ஒரு குழந்தை என்று கூட பாராமல் உயிர் போகும் அளவு அடிப்பது? அவன் இந்திரனா அல்லது இதயம் இல்லாத அரக்கனா?“ என்று குமுறினார் வாயு பகவான்.

“செய்ய கூடாததை செய்வதுதான் இந்திரனின் வாடிக்கையாகி விட்டது. தவறுதான். ஏதோ நடந்தது நடந்துவிட்டது அதற்காக உன் சக்தியை இப்படி அடக்கி வைத்தால் எப்படியப்பா? காற்று இல்லாமல் எல்லோரும் சிரமப்படுகிறார்கள்“ என்றார் பிரம்ம தேவன்.

“என் மகனை பிழைக்க வைத்தால்தான் நான் இயங்க ஆரம்பிப்பேன். இதுவே எமது முடிவு“ என்றார் வாயு பகவான். மூச்சி பேச்சின்றி கிடந்த குழந்தையை தன் இரு கரத்தால் தூக்கி தடவி கொடுத்தார் பிரம்ம தேவன். அடுத்த நொடியே தூக்கத்தில் இருந்து விழிப்பவன் போல் குழந்தை ஆஞ்சனேயன் விழித்தான். மகிழ்ந்து போன வாயு பகவான் அதன் பிறகு தன் பணியை தொடங்கினார். கெட்டதிலும் நல்லது என்பது போல் இந்த சம்பவத்தற்கு பிறகுதான் அஞ்சனேயருக்கு பல அறிய சக்திகள் கிடைத்தது. எண்ணற்ற தேவர்களின் ஆசியும் கிடைத்தது. அநுவில் (கன்னத்தில்) அடிப்பட்டு பிழைத்தவன் என்பதால் இவன்  அனுமான் என்று அழைக்கப்படுவான். இனி வஜ்ராயுத்ததால் இவனுக்கு எந்த ஆபத்தும் வராது.“ என்றான் இந்திரன். “ அனுமன்னுக்கு சிறந்த வாக்கு வன்மை ஏற்படும்“ என்று வரம் தந்தார் மார்த்தாண்டர். “தண்ணீரால் எப்போதும் மரணம் நெருங்காது“ என்று ஆசி வழங்கினார் வருணபகவான். “என்றும் சிரஞ்ஜீவியாக நீடுழி வாழ ஆசி வழங்குகிறேன். என்னால் உருவாக்கபட்ட ஆயுதங்களால் உனக்கு மரணம் ஏற்படாது.“ என்றார் விஸ்வகர்மா. இப்படி பல தேவர்களின் ஆசி பெற்ற பிள்ளைதான்  அனுமான்.

பின் வந்த காலத்தில், ஸ்ரீராமருக்காக சீதையை தேடி கண்டுபிடித்து வந்தார். கவலையில்greensite இருந்த ஸ்ரீ ராமசந்திரமூர்த்தியிடம், நல்ல செய்தியை இப்படி சொன்னால் இவர் மகிழ்வார் என்று உணர்ந்து, இரத்தின சுருக்கமாக “கண்டேன் சீதையை“ என்று உரக்கச் சொன்னார் அநுமான். இந்த வார்த்தையை கேட்டு துன்பத்தில் துவண்டு இருந்த ஸ்ரீராமர் மகிழ்ந்து நின்றார். இதனாலேயே  அனுமான், “சொல்லின் செல்வன்“ என்ற பெயரை பெற்றார்.

அந்த காலத்தில் கடலில் முத்து எடுப்பவர்கள், உடல் முழுவதும் மஞ்சளை தடவி ஊற வைப்பார்கள். அந்த மஞ்சள் வாசனை உடல் முழுவதும் ஒட்டிய பிறகுதான், மறுநாள் அப்படியே கடலில் குதித்து முத்து எடுக்க செல்வார்கள். மஞ்சள் வாசனைக்கு முதலைகள் அவர்களின் அருகில் வராது. அது போல்,  அனுமானை வணங்கினால் எந்த ஆபத்தும் நெருங்காது. இராகுவையே விரட்டி அடித்தவர் ஆஞ்சனேயர் ஒருவர்தான். இவரே காலசர்ப்ப தோஷம், சனி பகவானால் உண்டாகும் இன்னல்கள் போன்றவற்றை விலகிட செய்வார். ஆஞ்சனேயரை வணங்கினால் சகல நன்மைகளையும் செல்வங்களையும் தடையின்றி பெறுவர் என்பது உண்மை.

யாராலும் சாதிக்க முடியாத செயல்களை 

சாதிக்கும் வல்லவனே,

ஸ்ரீராம தூதனே, கருனைகடலே,

என்னுடைய எல்லா செயல்களையும்

சாதித்து தருவீராக வீர ஜெய் ஆஞ்சனேயா !.

அனுமன் ஜெயந்தி சிறப்பு கட்டுரை பகுதி 1 

துயரங்களை தூக்கி எறியும் ஆஞ்சநேயர்! அனுமன் ஜெயந்தி சிறப்பு கட்டுரை பகுதி 2 

ஆட்டி படைக்கும சர்ப்ப தோஷத்தை அடக்குவார் அனுமான்! அனுமன் ஜெயந்தி சிறப்பு கட்டுரை பகுதி 3

அனுமனுக்கு உகந்தது என்ன? அதன் பலன் என்ன?

Guru Peyarchi Palangal & Pariharam 2016-2017 All Rasi palangal Click Here 

Tamil New Year Rasi Palangal & Pariharam 2016 – 2017 All Rasi palangal Click Here

RAHU KETU PEYARCHI 2016 – 2017 All Rasi Palangal

2016 New Year Rasi Palangal & Pariharam All Rasi Palan Click Here 

 சாமுத்ரிகா லட்சணம் கிளிக் செய்யவும் 

மச்ச பலன்கள் கிளிக் செய்யவும் 

SANI PEYARCHI 2014 TO 2017 RASI PALANCLICK HERE

ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்

வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும் 

ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும் 

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India 

For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com

http://www.youtube.com/bhakthiplanet

http://www.youtube.com/niranjanachannel

http://www.facebook.com/bhakthiplanet

For Astrology Consultation CLICK Here

© 2011-2016 bhakthiplanet.com  All Rights Reserved

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech