Thursday 23rd January 2025

தலைப்புச் செய்தி :

குரு பெயர்ச்சி பலன்கள் 11.08.2016 முதல் 12.09.2017வரை!


Sri Durga Devi upasakar,Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. Phone Number: 98411 64648, Chennai

V.G.Krishnarau.

குரு பெயர்ச்சி பொது பலன்கள்!

அன்பார்ந்த பக்திபிளானெட்.காம் வாசகர்களுக்கு வணக்கம். திருக்கணித பஞ்சாங்க முறைபடி வரும் 11.08.2016 வியாழன் அன்று இரவு 9.35 மணிக்கு சிம்ம இராசியில் இருக்கும் குரு பகவான், கன்னி இராசிக்கு செல்கிறார். குரு பெயர்ச்சி நடைப்பெறுகிற அன்றைய தினம் விருச்சிக இராசி, அனுஷம் நட்சத்திரம். கோட்சாரப்படி பூர்வ புண்ணியத்தை குரு பார்வை செய்வதால், நாட்டு மக்களுக்கு நன்மைகள் நடக்கும்.

அரசியல் சச்சரவு – அடைமழை!

ஜீவனஸ்தானத்தில் புதன், சுக்கிரன், இராகு இருப்பதால், அரசியலில் சச்சரவுகள், குழப்பங்கள் ஏற்பட வாய்கிருக்கிறது. சிம்ம சுக்கிரனாக இருப்பதால், அன்றைய தினத்தில் இருந்து அடைமழை இருக்கும். வெள்ளப்பெருக்கும் சில இடங்களில் ஏற்படும். எதிரிகளின் சூழ்ச்சி முறியடிக்கப்படும். 10-ம் இடத்தை சனி பார்வை செய்கின்ற காரணத்தால், அரசியலில் புகழ் பெற்று இருப்பவர்களுக்கு உடல்நலக் குறைவு ஏற்படும். சனி, செவ்வாய் சேர்ந்து இருப்பதால் வாகன விபத்துக்கள் அதிகம் இருக்கும்.

தங்கம்மளிகை பொருட்களின் விலை உயரும்!

குரு பகவானின் அருளால் பொருளாதார முன்னேற்றம் உண்டு. தங்கத்தின் விலை விஷம் போல் ஏறும். வேலை வாய்ப்புகள் அதிகரிக்கப்படும். சூரியன், தானியகாரகனான குருவை பார்வை செய்வதால் மளிகை பொருட்களின் விலை உயரும்.

கன்னி குரு நன்மையே செய்வார். குரு பகவான் சூரியன் சாரத்தில் அமைவதால், சுகமாகவே வைப்பார்.

சரணம் சரணம் குருவே சரணம்!

Meshamமேஷ இராசி பலன்கள்அன்பார்ந்த மேஷ இராசி அன்பர்களே… உங்கள் இராசிக்கு 6-ம் இடத்திற்கு குரு பகவான் பெயர்ச்சி ஆகிறார். பொதுவாக 6-ம் இடம் ரொணம், ரோகம், கடன் ஸ்தானம் என்று கூறுவார்கள் குரு பகவான் 6.ம் இடத்திற்கு போவது நன்மை இல்லை என்றும் சிலர் கூறுவார்கள். என்னுடைய கருத்து, ‘குரு பார்க்க கோடி புண்ணியம்’ என்பதே. அதாவது, குரு இருக்கும் இடத்தை விட பார்க்கும் இடம் பலம் பெறும். ஆகவே 6-இல் அமரும் குரு, உங்கள் இராசிக்கு 2-ம் இடம், 10-ம் இடம், 12-ம் இடத்தை பார்வை செய்யப் இருப்பதால், பணவரவும், குடும்பத்தில் சுபகாரியங்களும் நடைபெறும். புதிய தொழில் துவங்குவீர்கள். தடைபட்ட தொழில் புத்துணர்வு பெறும். வேலை வாய்ப்பு தேடி வரும். விரயங்கள் தவிர்க்கப்படும். இதுநாள்வரை பிடித்திருந்த ரோகம் விலகி விடும். குடும்பத்தில் இருந்த சச்சரவு மனகஷ்டங்கள் நீங்கும். உத்திரம் நட்சத்திரமான சூரியன் காலில் (சாரத்தில்) அமைந்த குரு, வாழ்க்கையை ஒளிமயமாக்குவான். ஆகவே அன்பார்ந்த வாசகர்களே, 6-ம் இடத்திற்கு வந்திருக்கும் குரு பகவான் நன்மையே செய்வார். மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும்.

உங்கள் இராசிக்கான பரிகாரம் – குருபெயர்ச்சி அன்று குருபகவானுக்கு கொண்டக்கடலை மாலை அணிவித்து வணங்குங்கள். உங்கள் ஜென்மநட்சத்திரம் வரும் நாட்களில் மஞ்சள் நிற ஆடையை அணியுங்கள். குருபகவானின் அருளால் நன்மைகள் தேடி வரும்.

reshabamரிஷப இராசி பலன்கள்அன்பார்ந்த ரிஷப இராசி அன்பர்களே… உங்கள் இராசிக்கு குரு 5-ம் இடத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். 5-ம் இடம் பூர்வ புண்ணிய இடம். 5-ஆம் இடத்திற்கு வந்துள்ள குரு பகவான், உங்கள் இராசிக்கு 9-ஆம் இடமான பாக்கியம் ஸ்தானம், ஜென்ம இராசி, லாபஸ்தானம் என்கிற 11-ம் இடங்களை பார்வை செய்வதால், மற்றவர்கள் புகழும்படி உங்கள் வாழ்க்கை அமையும். புதிய சொத்துக்கள், அல்லது வீடு, மனை வாங்குவீர்கள். வாங்குவீர்கள் என்ன வாங்க வைப்பார் குருபகவான். லாபஸ்தானம் எனப்படும் 11-ம் வீட்டை பார்வை செய்வதால், கடல் கடந்து செல்லும் பாக்கியம் அமையும். தடைபட்ட கல்வி தொடரும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்கும். குழந்தை பேறு இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். கூட்டு தொழில் அமையும். வழக்கு இருந்தால் வெற்றி தரும். குரு பகவான், உத்திர நட்சத்திரமான சூரியன் காலில் அமைவதால், எதிர்பாரா யோகம் அடிக்கும். இதுநாள்வரை இருந்த பிரச்னை பறந்து விடும். வளமாக வாழ குரு பகவான் அருள் புரிவார்.

உங்கள் இராசிக்கான பரிகாரம்– குருபெயர்ச்சி அன்று குருபகவானுக்கு கொண்டக்கடலை மாலை அணிவித்து வணங்குங்கள். வெள்ளிக்கிழமையில் உங்கள் இல்லத்தில் இருக்கும் ஸ்ரீமகாலஷ்மி படத்தின் முன்பாக நெய்யில் தயாரித்த இனிப்பை படைத்து வணங்குங்கள். உங்கள் வாழ்க்கைக்கு ஸ்ரீமகாலஷ்மிதேவியின் அருளால் வெளிச்சம் கிடைக்கும். ஏற்றமான வாழ்க்கை அமையும்.

Methunamமிதுன இராசி பலன்கள் –  அன்பார்ந்த மிதுன இராசி அன்பர்களே… உங்கள் இராசிக்கு குரு பகவான், சுகஸ்தானம் என்னும் 4-ம் இடத்திற்கு பெயர்ச்சி ஆகிறார்.  4-ம் இடத்திற்கு குரு பெயர்ச்சி ஆவது நன்மை செய்யாது என்று கூறுவார்கள். அதைப்பற்றி கவலை வேண்டாம். 4-ம் இடமான கன்னி இராசியில் அமைகிற குரு பகவான், உங்கள் இராசிக்கு 8-ம் இடம், 10-ம் இடம், 12-ம் இடம் அதாவது அஷ்டம ஸ்தானம், ஜீவனஸ்தானம் விரயஸ்தானங்களை குரு பார்வை செய்ய இருப்பதால், கடந்த வருடம் போராடியும் வெற்றி பெறாத காரியங்கள் இவ்வாண்டு கைகூடும். வேலை வாய்ப்பு தேடி வரும். வேலையில் உயர் பதவி கிடைக்கும். விரயங்கள் தவிர்க்கப்படும். தெய்வபக்தியும், புண்ணிய ஸ்தல பயணங்களும் அதிகரிக்கும். கணவன்- மனைவிக்குள் இருந்த பிரச்னை தீரும். குழந்தை பாக்கியம் அமையும். உத்திர நட்சத்திரமான சூரியன் சாரத்தில் குரு பெயர்ச்சி ஆவதால், நன்மைகள் நாடி வரும். பள்ளத்தில் இருந்த உங்களை பல்லாக்கில் உட்கார வைப்பார் குரு பகவான். ஆனந்தமான வாழ்க்கை அமையும்.

உங்கள் இராசிக்கான பரிகாரம்– சிவபெருமானை வணங்குங்கள். ஏழை முதியவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள். அம்மனுக்கு உங்கள் ஜென்ம நட்ச்ததிரத்ம் வரும் நாளில் குங்கும அர்ச்சனை செய்யுங்கள். மங்களமான வாழ்க்கையை சிவ- சக்தி அருளுவார்கள்.

Katakamகடக இராசி பலன்கள்அன்பார்ந்த கடக இராசி அன்பர்களே… உங்கள் இராசிக்கு குரு பகவான் 3-ம் இடமான கன்னி இராசியில் பெயர்ச்சி ஆகிறார். 3-ம் இடத்தில் அமையும் குரு நன்மை செய்யாது என்று சிலர் கூறியிருப்பார்கள். அதனால், மூன்றாம் இடத்தில் குரு பெயர்ச்சியா? அய்யோ என்று அலற வேண்டாம்.  என்னுடைய கணிப்பு படி குரு அமர்ந்த இடத்தை விட பார்க்கும் இடம் வலு பெறும். 3-ம் இடத்தில் அமையும் குரு பகவான், உங்கள் இராசிக்கு 7-ம் இடம், 9-ம் இடம், 11-ம் இடங்களான சப்தம ஸ்தானம், பாக்கிய ஸ்தானம், லாபஸ்தானங்களை பார்வை செய்வதால், பெற்றோர் உதவி கிடைக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்கும். கூட்டு தொழில் அருமையாக நடக்கும். கட்டி முடிக்காத கட்டடம் கட்டப்படும். வெளிநாட்டில் இருப்பவர் உதவிகள் கிடைக்கும். எதிர்பாரா பண வரவு உண்டு. இதுநாள்வரை போராடிய காரியங்கள் கச்சிதமாக முடியும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடைப்பெறும். கடன் சுமை குறையும். பிராயணங்கள் அதிகரிக்கும். உத்திர நட்சத்திரமான சூரியன் காலில் அமையும் குரு பெயர்ச்சி பிரகாசமான வாழ்க்கையை தரும்.

உங்கள் இராசிக்கான பரிகாரம் – வியாழக்கிழமையில் ஷீரடி சாய்பாபாவை வணங்குங்கள். உங்கள் ஜென்ம நட்சத்திர நாளில் உங்கள் வசதிக்கேற்ப அன்னதானம் செய்யுங்கள். ஷீரடிசாய்பாபா உங்களுக்கு சீரான வாழ்க்கையை தந்தருள்வார்.

Simamசிம்ம இராசி பலன்கள்அன்பார்ந்த சிம்ம இராசி அன்பர்களே… உங்கள் இராசிக்கு தனஸ்தானம் என்னும் 2-ம் இடமான கன்னி இராசியில் குரு பகவான் பெயர்ச்சி ஆகிறார். 2-ம் இடத்தில் இருக்கும் குரு, 6-ம் இடம், 8-ம் இடம், 10-ம் இடங்களை பார்வை செய்கிறார். அவை ரோகஸ்தானம், அஷ்டமஸ்தானம், ஜீவனஸ்தானம் என்று அழைக்கப் பெறுகிறது. இவ்விடங்களை குரு பார்வை செய்வதால் கடன் பிரச்னை, எதிரிகளின் சூழ்ச்சி அத்தனையும் விலகிவிடும். எதையும் சாதிக்கும் துணிவு வந்துவிடும். திருமணம் ஆகாதவர்களுக்கு 2-ம் இடகுரு பகவான் திருமணம் செய்து வைப்பார். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகளை நடத்தும். உத்தியோகத்தில் நல்ல மாற்றம் தரும். பலநாட்களாக இழுவையாக இருந்த வழக்கு வெற்றி தரும். சொத்துக்கள் வந்தடையும். பூர்வீக சொத்து சிலருக்கு கிடைக்கலாம்.

ஜீவனத்தில் புதிய மாற்றமும், பெரிய லாபமும் வரும். தொழில் துவங்க கூட்டாளிகள் தேடி வருவார்கள். கல்வியின் பயனால் எதிர்பார்த்த வேலை வாய்ப்பு கிடைக்கும். வீடு, மனை வாங்கும் யோகம் உண்டு. பொதுவாக தன குரு, சூரியன் காலில் இருப்பதால், பொற்காலம் ஆண்டு என்று கூறலாம். வாக்கு வன்மையும், பேச்சால் புகழ்-கீர்த்தி வந்தடையும்.

உங்கள் இராசிக்கான பரிகாரம்– குருபெயர்ச்சி அன்று குருபகவானுக்கு கொண்டக்கடலை மாலை அணிவித்து வணங்குங்கள். முருகப்பெருமானையும், ஸ்ரீதுர்கை அம்மனையும் வணங்குங்கள். செவ்வாய் கிழமையில் நெய்தீபம் ஏற்றி வாருங்கள். உங்கள் வாழ்க்கையில் நல்ல மாற்றமும், ஏற்றமும் இறைவன் அருளால் உண்டாகும்.

Kanniகன்னி இராசி பலன்கள்அன்பார்ந்த கன்னி இராசி அன்பர்களே… குரு பகவான் உங்கள் ஜென்ம இராசியில் அமர்ந்துவிட்டார். வனவாசம் போன இராமருக்கு ஜென்ம குரு என்று சிலர் கூறுவார்கள். அதையெல்லாம் கேட்டு பயந்துவிடாதீர்கள். குரு அமர்ந்த இடத்தை விட பார்க்கும் இடத்திற்கு பலன் அதிகம். இதுதான் எனது கூற்று. ஆகவே உங்கள் இராசிக்கு 5-ம் இடம், 7-ம் இடம், 9-ம் இடங்களை குரு பார்வை செய்வதால், திருமணமான தம்பதியினருக்கு புத்திர சந்தானம் உண்டாகும். எதிர்பாரா யோகம் அடிக்கும். கல்யாண வரன் தேடி வந்தவர்களுக்கு திருமணம் கைகூடும். வெளிநாட்டு வியபாரம் அமோகமாக நடைபெறும். கூட்டு தொழில் அமைய வாய்ப்பு வரும். வண்டி, வீடு, மனை அமையும். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் தீரும். திக்கு தெரியாமல் நடுகாட்டில் இருந்த நீங்கள், எதிர்பாரா வழி போக்கனால் சேர வேண்டிய இடம் சேர்ந்ததுபோல், கைகூடாத சில காரியங்கள் மற்றவர்கள் உதவியால் கைகூடி வரும். உறவினர் வருகை அதிகரிக்கும். தடைபட்ட கல்வி தொடரும். சூரியனின் காலில் (சாரத்தில்) இருக்கும் குரு பகவான், நினைத்ததை நடத்தி வைப்பார்.

உங்கள் இராசிக்கான பரிகாரம் – குருபகவானுக்கு கொண்டக்கடலை மாலை அணிவித்து வணங்குங்கள்.  அஷ்டமி திதியில் பைரவரை வணங்குங்கள். பைரவருக்கு தீபம் ஏற்றுங்கள். ஏழை பிள்ளைகளுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள். எதிர்பாரா உதவிகள் தேடி வர பைரவர் அருள்புரிவார்.

Thulaதுலா இராசி பலனகள்–  அன்பார்ந்த துலா இராசி அன்பர்களே… உங்கள் இராசிக்கு குரு பகவான், 12-ம் இடத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். அய்யோ 12-ம் இடமா? அது விரயம் தரும் இடம் என்பார்களே என்று அஞ்ச வேண்டாம். குரு இருக்கும் இடத்தை விட பார்க்கும் இடம் பலம் பெறும் என்று அடித்து கூறுவேன். ஆகவே உங்கள் இராசிக்கு 4-ம் இடம், 6-ம் இடம், 8-ம் இடங்களான சுகஸ்தானம், ரோகஸ்தானம், அஷ்டம ஸ்தானம் ஆகிய ஸ்தானங்களை குரு பார்வை செய்வதால், கல்வியால் வேலை வாய்ப்பு, மேல் படிப்புக்கு தகுதி பெறுதல் ஆகியவை அமையும். உறவினர் உதவிகள் கிடைக்கும். உடலில் இருந்த பிணி நீங்கும். கடன்கள் குறையும். வழக்கு இருப்பின் சாதனமாக முடியும். சிலர் அயல்நாட்டில் வேலையில் அமர வாய்ப்பு வரும். எதிர்பாரா நபரால் உதவிகளை பெறுவீர்கள். சுபநிகழ்ச்சிகள் நடக்கும். உடல்நலம் இல்லாத சிலரது பெற்றோர் நலம் பெறுவார்கள். பொதுவாக உத்திர நட்சத்திரமான சூரியன் காலில் (சாரத்தில்) இருக்கும் குரு பகவான் அருமையான எதிர்காலத்தை காட்டுவார்.

உங்கள் இராசிக்கான பரிகாரம்– குருபெயர்ச்சி அன்று குருபகவானுக்கு கொண்டக்கடலை மாலை அணிவித்து வணங்குங்கள். செவ்வாய்கிழமையில் முருகப்பெருமானுக்கு வாசனை மலர்களை அணிவித்து வணங்குங்கள். செவ்வாய்கிழமையில் கந்தகுரு கவசத்தை உச்சரித்து வணங்கினால் ஆறுமுகன் உங்கள் வாழக்கையை ஏறமுகமாக மாற்றுவான்.

Viruchikamவிருச்சிக இராசி பலன்கள்அன்பார்ந்த விருச்சிக இராசி அன்பர்களே… உங்கள் இராசிக்கு குரு பகவான் 11-ம் இடமான கன்னி இராசியில் பெயர்ச்சி ஆகிறார். 11-ம் இடம் லாபஸ்தானமாக இருப்பதால் நன்மைகள் தேடி வரும். உங்கள் இராசிக்கு 3-ம் இடம், 5-ம் இடம், 7-ம் இடங்களை பார்வை செய்வதால் எடுத்த காரியம் வெற்றி பெறும். உடலில் ஒரு புத்துணர்ச்சி கிடைக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்கும். புத்திர பாக்கியம் இல்லாதவர்களுக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும். நண்பர்களின் உதவிகள் தேடி வரும். சொந்த தொழில் ஆரம்பிக்கலாம். தடைபட்ட தொழில் மீண்டும் துவங்க ஆரம்பிக்கும். சகோதர பலம் பெறும். சகோதர பலத்தால் நன்மைகள் வரும். வெளிநாட்டிற்கு செல்லும் பாக்கியம் கிடைக்கும். தெய்வ வழிபாடு அதிகரிக்கும். குடும்பத்தில் நன்மைகள் நடக்கும். குடும்பத்திற்கு தேவையான பொருட்கள் வந்தடையும். உத்திர நட்சத்திரமான சூரியன் காலில் (சாரத்தில்) இருக்கும் குரு பகவான் அருமையான வாழ்க்கையை அமைத்து தருவார்.

உங்கள் இராசிக்கான பரிகாரம் – குருபெயர்ச்சி அன்று குருபகவானுக்கு கொண்டக்கடலை மாலை அணிவித்து வணங்குங்கள். உங்கள் இஷ்டதெய்வத்தை வணங்கி வாருங்கள். ஏழை பிள்ளைகளுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள். உங்கள் இஷ்ட தெய்வம் உங்கள் இஷ்டங்களை நிறைவேற்றுவார்.

Dhanusuதனுசு இராசி பலன்கள் –  அன்பார்ந்த தனுசு இராசி அன்பர்களே… குரு பகவான் உங்கள் இராசிக்கு 10-ம் இடத்திற்கு அதாவது ஜீவனஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். உங்கள் இராசிக்கு 2-ம் இடம், 4-ம் இடம், 6-ம் இடங்களை பார்வை செய்வதால், 2-ம் இடம் அதாவது குடும்பஸ்தானம், 4-ம் இடம் சுகஸ்தானம், 6-ம் இடம் ரோகஸ்தானம் ஆகியவை நன்மை பெறும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும். உங்கள் பேச்சுக்கு மரியாதை கிடைக்கும். உங்கள் பேச்சை மீற மற்றவர்கள் அஞ்சுவார்கள். கொடுக்கல்- வாங்கலில் இருந்த பிரச்னைகள் நீங்கி நன்மைகள் நடக்கும். குறிப்பாக பைனான்ஸ் (Finance) தொழில் சிறப்பாக இருக்கும். கல்வி மேன்மை பெறும். சிலருக்கு அரசாங்க உத்தியோகம் கிடைக்கலாம். சிலருக்கு பணிமாற்றம் ஏற்படலாம். கடன் பிரச்னைகள் தீரும். பொன், பொருள் வாங்கும் யோகம் உண்டு. ஸ்தல யாத்திரை செல்வீர்கள். பிள்ளைகளுக்கு திருமணம் அமையும். குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் தீர்ந்து சுமுகமான நிலை காணப்படும். விரோதம் மறையும். உத்திர நட்சத்திரமான சூரியன் காலில் (சாரத்தில்) இருக்கும் குரு பகவான் வளமான வாழ்க்கை தருவார்.

உங்கள் இராசிக்கான பரிகாரம்– குருபெயர்ச்சி அன்று குருபகவானுக்கு கொண்டக்கடலை மாலை அணிவித்து வணங்குங்கள். வியாழக்கிழமையில் விநாயகப்பெருமானுக்கு அறுகம்புல் அணிவித்து வணங்குங்கள். தும்பிக்கைநாதன், மனதில் நம்பிக்கை தந்து வாழ்வை உயர்த்துவார்.

Makaramமகர இராசி பலன்கள்அன்பார்ந்த மகர இராசி அன்பர்களே… உங்கள் இராசிக்கு குரு பகவான் பாக்கியஸ்தானம் என்னும் 9-ம் இடமான கன்னி இராசியில் பெயர்ச்சி ஆகிறார். உங்கள் இராசியையும், 3-ம் இடத்தையும், 5-ம் இடத்தையும் பார்வை செய்வதால், மற்றவர்கள் முடிக்க முடியாததை முடித்துகாட்டி பாராட்டு பெறுவீர்கள். சகோதர பலத்தால் நன்மைகள் நாடி வரும். இதுநாள்வரை இருந்த மனக்குழப்பம், நோய் நொடிகள் யாவும் காற்றில் பறக்கும் பஞ்சுபோல் பறந்து விடும். உங்கள் காரியங்கள் அத்தனையும் வெற்றி பெறும். தடைபட்ட கல்வி, தொழில் ஆகியவற்றில் தடை நீங்கும். எதிர்பாரா யோகம் உண்டு. தெய்வபக்தி அதிகரிக்கும். பூர்வீக சொத்து கைக்கு வந்து சேரும். தாய், தந்தை உடல்நலம் இல்லாமல் இருந்தால் நலம் பெறுவார்கள். பொதுவாக, இனி எப்படியோ என்ற குழப்பத்தில் தவித்துக்கொண்டு இருந்த நீங்கள், துணிந்து எதையும் செய்து சாதிப்பீர்கள். வெளிநாட்டு வியபாரம் செய்துக் கொண்டு இருந்தவர்களுக்கு இது பொற்காலம். அரசாங்கத்தின் உதவிகள் கிடைக்கும். பொதுவாக உத்திர நட்சத்திரமான சூரியன் காலில் (சாரத்தில்) இருக்கும் குரு பகவான் பிரமாதமான வாழ்க்கை கொடுப்பார்.

உங்கள் இராசிக்கான பரிகாரம்– குருபெயர்ச்சி அன்று குருபகவானுக்கு கொண்டக்கடலை மாலை அணிவித்து வணங்குங்கள். உங்கள் குலதெய்வத்தை வணங்குங்கள். புதன்கிழமையில் தயிர் சாதத்தை, ஒன்பது பேருக்கு தானமாக வழங்குங்கள். உங்கள் வம்சத்தையே குலதெய்வம் மகிழ்ச்சியில் குளிர வைக்கும். உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் சுபிட்சமாக அமையும்.

Kumbamகும்ப இராசி பலன்கள்அன்பார்ந்த கும்ப இராசி அன்பர்களே… உங்கள் இராசிக்கு அஷ்டமம் என்று சொல்லப்படும் 8-ம் இடத்திற்கு அதாவது கன்னி இராசியில் குரு பகவான் பெயர்ச்சி ஆகிறார். 8-ம் இடத்திற்கு குரு பெயர்ச்சியா? என்று பயப்படாதீர்கள். குரு இருக்கும் இடத்தை விட பார்க்கும் இடமே பலம் பெறுகிறது என அடித்து கூறுவேன். ஆகவே 8-ம் இடம் என்று பயம் வேண்டாம். அகப்பட்டவனுக்கு அஷ்டம குரு என்று சிலர் கூறுவார்கள். இதை எல்லாம் கேட்டு குழப்பம் அடைய வேண்டாம். இனி குரு பகவான் உங்கள் இராசிக்கு 2-ம் இடம், 4-ம் இடம், 12-ம் இடங்களான தனஸ்தானம், சுகஸ்தானம், விரயஸ்தானங்களை பார்வை செய்வதால், அந்த இடங்கள் பலம் பெறுகிறது. குரு பார்க்க கோடி புண்ணியம். குடும்பத்தில் இருந்த உள்நாட்டு பிரச்னை தீரும். பணப்பற்றாக்குறை அகலும். கணவன்-மனைவிக்குள் இருந்த கருத்து வேற்றுமை மறையும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். வீடு, மனை அமையும். உயர்கல்வி தொடரும். உறவினர் வருகை அதிகரிக்கும். சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். பொதுவாக விரயங்கள் குறையும். சிலருக்கு வேலை விஷயமாக மாற்றம் இருக்கலாம். வழக்குகள் வெற்றி பெறும். உத்திர நட்சத்திரமான சூரியன் காலில் (சாரத்தில்) இருக்கும் குரு பகவான் எதிர்பாரா யோகத்தை ஒளி வீச செய்வார்.

உங்கள் இராசிக்கான பரிகாரம் – குருபெயர்ச்சி அன்று குருபகவானுக்கு கொண்டக்கடலை மாலை அணிவித்து வணங்குங்கள்.  சனிக்கிழமையில் பெருமாள் ஆலயத்திற்கு சென்று வாசனை மலர்களை சமர்ப்பித்து கல்கண்டை பிரசாதமாக படைத்து வணங்குங்கள். உங்கள் வாழ்க்கையில் இருந்த கசப்பான நிகழ்வுகள் நீங்கி பெருமாளின் அருளால் இனிதான வாழ்க்கை அமையும்.

Meenamமீன இராசி பலன்கள்அன்பார்ந்த மீன இராசி அன்பர்களே… உங்கள் இராசிக்கு குரு பகவான் 7-ம் இடமான கன்னி இராசியில் பெயர்ச்சி ஆகிறார். அங்கிருந்து உங்கள் இராசியையும், 3-ம் இடத்தையும், 11-ம் இடத்தையும் பார்வை செய்வதால், இனி உங்கள் வாழ்க்கை தரம் உயரும். திட்டங்கள் நிறைவேறும். மற்றவர்கள் ஆச்சரியப்படும்படி வாழ்க்கை அமையும். எப்படியாவது எடுத்த காரியத்தை முடிக்க வேண்டும் என்ற துணிவு வரும். சப்தம குரு தகரத்தையும் தங்கமாக்கும். அதாவது தைரியத்தில் பேச்சில் காரியத்தை சாதித்துவிடுவீர்கள். இதுநாள் வரை இருந்த பிணி பனிபோல் நீங்கிவிடும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைகூடும். சிலர் தம் பிள்ளைகளுக்கு திருமணம் செய்து முடிப்பர். கடல் கடந்து போகும் பாக்கியம் உண்டு. வெளிநாட்டில் வேலை, தொழில் என அமர்க்களமான வாழ்க்கை அமையும். நண்பர்களின் உதவி தேடி வரும். ஜென்ம இராசியை குரு பார்வை செய்வதால் மற்றவர்கள் புகழும்படி வாழ்க்கை அமையும். உத்திர நட்சத்திரமான சூரியன் காலில் (சாரத்தில்) இருக்கும் குரு பகவான், இகழ்ந்து பேசிய மற்றவர்களை உங்கள் முன் கைகட்டி நிற்க வைப்பார். ஒளிமயமான வாழ்க்கையை வாரி வழங்குவார் குருபகவான்.

உங்கள் இராசிக்கான பரிகாரம்– குருபெயர்ச்சி அன்று குருபகவானுக்கு கொண்டக்கடலைமாலை அணிவித்து வணங்குங்கள். உங்கள் ஜென்ம நட்ச்ததிரத்தில் அம்மன் கோயிலுக்கு சென்று, அம்மனுக்கு குங்கும அர்ச்சனை செய்யுங்கள். உங்கள் வாழ்க்கை அம்மனின் அருளால் மங்களகரமாக அமையும்.

*******

ENGLISH Version Click here

குருவே சரணம்- குருபெயர்ச்சி சிறப்பு கட்டுரை

மேலும் ஜோதிட கட்டுரைகள் படிக்கவும்…

மேலும் இராசி பலன்கள் படிக்கவும்…

மேலும் வாஸ்து கட்டுரைகள் படிக்கவும்…

மேலும் ஆன்மிக கட்டுரைகள் படிக்கவும்…

ஜோதிட ஆலோசனைக்கு இங்கே பார்க்கவும்

Send your feedback to: editor@bhakthiplanet.com

For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India

http://www.youtube.com/bhakthiplanet

http://www.youtube.com/niranjanachannel

http://www.facebook.com/bhakthiplanet

For Astrology Consultation CLICK Here

© Copyright :

bhakthiplanet.com ©Copyright 2011-2016  All rights reserved. Republication or redistribution of Bhakthiplanet content, like Rasi palan, religious/spiritual articles, astrological notes, vasthu suggestions, etc., including by framing or similar means, is expressly prohibited without the prior written consent of the management of www.bhakthiplanet.com.

© பதிப்புரிமை அறிவிப்பு :

 

BHAKTHIPLANET.COM இணையதளத்தில் வெளிவரும் இராசி பலன்கள், ஆன்மிக கட்டுரைகள் – ஜோதிட கட்டுரைகள் – வாஸ்து கட்டுரைகள் மற்றும் அனைத்து கட்டுரைகளையும் வேறு இணையதளங்களில் வெளியிடுவதற்கும் – பத்திரிக்கைகளில் பிரசுரம் செய்வதற்கும், புத்தகங்களாக வெளியிடுவதற்கும் அல்லது வேறு எந்த வகையில் வெளியிடுவதற்கும் BHAKTHIPLANET.COM நிர்வாகத்திடம் எழுத்து பூர்வமாக முன் அனுமதி பெற்ற பிறகே வெளியிட வேண்டும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

Donate© 2011-2016 bhakthiplanet.com  All Rights Reserved

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2025. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »