Friday 24th January 2025

தலைப்புச் செய்தி :

வள்ளலார் சுவாமிகள்

05.10.2015 அன்று வள்ளலார்  சுவாமிகளின் பிறந்த நாள்!

Written by Niranjana niranjana

நாம் தெய்வத்தை தொழுவது சிறப்புக்குரியதா அல்லது மகான்களை வணங்கவது சிறப்புக்குரியதா என பார்க்கும் போது, இறைவனை வணங்குவது எவ்வளவு சிறப்போ அதனினும் சிறப்பு இறைவனுடைய அடியார்களை போற்றுதலும் வணங்குதலும் என்பதை சைவ – வைணவ சாஸ்திரங்கள் சொல்லும் உண்மை.

Bhakthi Planetகடலில் பெரிய கல்லை போடுகிறோம் அது உடனே தண்ணீர்க்குள் போய்விடும். அதே கல்லை ஒரு கட்டையின் மேல் வைத்து கடலில் விட்டால் கட்டையோடு அந்த கல்லும் மிதந்துகொண்டு செல்லும் – முழ்காது. அதைபோல்தான் இறைவனை வணங்குபவர்களும் மகான்களையும் வணங்கினால் துன்ப கடலில் நாம் முழ்கிவிடாமல் இருக்க இறைவனின் ஆசி அவர்களின் வேண்டுதலின் மூலமாக சுலபமாக கிடைக்கிறது.

ஒருநாள் இறைவன் ஒரு பக்தன் முன்தோன்றி, “உனக்கு என்ன வரம் வேண்டும் கேள். நான் தருகிறேன்.“ என்றார். அந்த பக்தன் ஒரு இளைஞன். ஆனால் அவன் என்ன வரம் கேட்டான் தெரியுமா?, “நான் என் பேரனுடன் தங்கதட்டில் சாப்பிட வேண்டும்.“ என்றான். ஒரு வரத்திலேயே, திருமண வரம். குழந்தை பாக்கியம். பேரனை பார்க்கும் அளவு தீர்க்க ஆயுள். சாகும் வரை வசதியான வாழ்க்கை என வாழ்வதற்கு என்னனென்ன தேவையோ அத்தனையும் ஒரே வரத்தில் இறைவனிடம் கேட்டு பெற்றான்.

இறைவன் சில சமயம் மனித ரூபத்தில் திகழ்கிறார். அந்த மனிதர்களையே மகான்களாக நாம் போற்றுகிறோம். இராமலிங்க வள்ளலாரின் மகிமையை பற்றி திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள், தம் வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை கூறி இருக்கிறார்.

வாரியார் சுவாமிகளுக்கு வள்ளலார் தந்த ரூ.3500

1941முதல் 1950வரை வடலூர் சத்திய ஞான சபைத்திருப்பணிManamakkal Malai செய்து கொண்டு இருந்தார் வாரியார் சுவாமிகள். அப்போது அதில் வேலை செய்தவர்களுக்கு ரூ.3500 சம்பளம் கொடுக்க வேண்டும். பணம் இல்லாததால் நகையை அடமானம் வைத்து பணத்தை வேலையாட்களுக்கு தந்தார். இது என்ன சோதனை.? நகை அடமானம் வைக்கும் அளவுக்கா இறைவன் கொண்டு செல்வது? இருந்தாலும் பரவாயில்லை, யாருக்கா செய்கிறோம்? இராமலிங்க வள்ளலாருக்காகதானே இந்த திருப்பணி.“ என்று சமாதானம் கொண்டார். சுவாமிகள்.

ஒருநாள் ஒரு கணவனும் மனைவியும் வந்தார்கள். வள்ளலார் பற்றிய கதாகாலஷேபம் செய்ய வேண்டும் என்றார்கள் அந்த தம்பதியினர். வாரியார் சுவாமிகள் யாரிமும், நான் கேட்கும் தட்சணைதான் தர வேண்டும் என்று பிடிவாதமாக கேட்க மாட்டார். எவ்வளவு கிடைத்தாலும் அது முருகன் செயல் என கருதுவார். நிகழ்ச்சிக்கு ஒப்புக்கொண்டு சிதம்பரத்திற்கு பக்கத்தில் உள்ள தெம்மூருக்குக்ச் சென்று வள்ளலார் வரலாற்றை பற்றி கூற சென்றார். அந்த ஊரில் பலத்த மழை.

இதனால் சாலையெல்லாம் சேறும் சகதியுமாக இருந்தது. “இது என்ன கொடுமையாக இருக்கிறதே. இப்படி சதசதவென இருந்தால் எப்படி கதாகாலஷேபம் செய்வது?. அப்படியே இருந்தாலும், யார் சேற்றில் உட்காந்திருந்து கேட்பார்கள்? என்ற கவலை வாரியார் சுவாமிகளுக்கு. பக்தர்கள் உட்கார தென்னை ஒலைகீற்றுகளையும் வைக்கோலையும் பரப்பி மக்களை அமர வைத்தார்கள் நிகழ்ச்சி அமைப்பாளர். வள்ளலார் வரலாற்றை சிறப்பாகவும் அழகாகவும் வழங்கினார் வாரியார் சுவாமிகள். நிகழச்சி சிறப்பாக நடந்து முடிந்தது.

பிறகு நிகழ்ச்சியை நடத்திய தம்பதியினர், ஒரு தட்டில் பழம் – பூ வெற்றிலை – பாக்குடன் வாரியார் சுவாமிகளின் முன்னே வந்து நின்றார்கள். இதை பார்த்த சுவாமிகள், பொதுவாக பழதட்டுடன் வருபவர்கள் 25 ரூபாய்தான் தட்சனை வைப்பார்கள். இது அவர் அனுபவத்தில் கண்ட உண்மை.

greensiteஅதுபோல்தான் இந்த தம்பதியினரும் வைத்திருப்பார்கள் என்ற எண்ணத்துடன் தட்டை வாங்கி பார்த்தார் சுவாமிகள். பார்த்தவுடன் மனதில் மகி்ழ்ச்சி ஏற்பட்டது. அந்த தட்டில் 3500 ரூபாய் இருந்தது.  இதை கண்டு அவர் மனம் நெகிழ்ச்சி கொண்டது.

வடலூர் சத்திய ஞான சபைத்திருப்பணி வேலையாட்களுக்கு சம்பளம் கொடுக்க 3500 ரூபாய்க்கு நகையை அடமானம் வைத்தோம். “நான் யாருக்கும் கடன்காரன் இல்லை“ என்று சொல்லும் விதமாக, “எனக்காக அடமானம் வைத்த நகையை மீட்க இந்த பிடி உன் பணம் 3500 ரூபாயை.“ என்று அருட்பெருஞ்சோதி இராமலிங்க வள்ளலாரே தன் பக்தர்களாகிய இந்த தம்பதியினர் மூலமாக தந்தனுப்பினார். இல்லை என்றால் எப்படி சரியாக ரூ.3500 தருவார்கள்.? 2500 ரூபாய் தந்திருக்கலாம். 3000 ரூபாய் தந்திருக்கலாம். அப்படியெல்லாம் இல்லாமல் மிகச் சரியாக திருப்பணி செலவு ரூ.3500 தந்தார்கள் என்றால் இது வள்ளலாரின் மகிமையே என்பதை உணர்ந்து வள்ளலாரை போற்றினார் ஸ்ரீ வாரியார் சுவாமிகள்.

வள்ளலார் சுவாமிகளின் பசியை போக்கிய அம்மன்

இராமலிங்கம் என்ற சிறுவன். தினமும் வடிவுடைஅம்மன்niranjana channel கோயிலுக்கு சென்று பல மணி நேரம் அன்னையை பார்த்து கொண்டே இருப்பான். அவனுக்கு பக்தியில் இருந்த கவனம் படிப்பில் இல்லை

ஒருநாள் இரவு கோயிலிலேயே அதிக நேரம் பொழுதை களித்தான். நடு இரவில் வீடு வந்து சேர்ந்தான். வீட்டின் கதவு சாத்தப்பட்டிருந்தது. இராமலிங்கத்திற்கு நல்ல பசி. இந்த இரவில் கதவை தட்டினால் அண்ணி திட்டுவாரே, அவர்களுக்கு ஏன் சிரமம் தர வேண்டும் என்று தின்னையிலேயே பசியோடு படுத்தான். அப்போது,

“ராமலிங்கம் எழுந்திரு. சாப்பிடலாம்” என்று அவன் அண்ணி தட்டி எழுப்பி வாழை இலையில் உணவு பரிமாறினாள். பிறகு அந்த தின்னையிலேயே மீண்டும் தூங்கிவிட்டான் இராமலிங்கம். சில மணி நேரம் கழித்து யாரோ இராமலிங்கத்தை தட்டி எழுப்ப விழித்தான். அண்ணிதான் நின்றிருந்தாள்.

“இராமலிங்கம் வெறும் வயிற்றில் தூங்காதே வந்து சாப்பிடு.” என்றாள்.

“இப்போதுதானே சாப்பாடு போட்டீர்கள். அதோ பாருங்கள் நான் சாப்பிட்ட இலை” என்றான்.

“இல்லை நான் சாப்பாடு போடவில்லை. ஆச்சரியமாக இருக்கிறதே. யார் உனக்கு உணவு தந்தது.” என்றாள் அண்ணி. அண்ணியாக வந்தது திருவொற்றியூர் வடிவுடையம்மன் என்பதை உணர்ந்தான். அன்னை தந்த உணவு சிறுவனுக்கு பெரும் ஞானத்தையும் தமிழ் புலமையை தந்தது. இராமலிங்க வள்ளலார் எனும் புகழை தந்தது.

அறச் சொல் கூடாது.

பள்ளியில் ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டு இருந்தார். “வேண்டாம்” என்ற சொல் அடிகடி வருவது போன்ற ஒரு பாடலை மாணவர்களுக்கு சொல்லி தந்துக்கொண்டிருந்தார்.

அப்போது அந்த வகுப்பில் இருந்த ஒரு மாணவன் எழுந்து,

“ஐயா “வேண்டாம்” என்ற சொல் அறச் சொல் ஆகும். அதை நான் கூற மாட்டேன். அதற்கு பதிலாக “வேண்டும்” என்றுதான் கேட்பேன்.” என்ற மாணவன், ஒரு பாட்டை பாடி காட்டினான்.

‘ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கிற
உத்தமர் தம் உறவு வேண்டும்…

உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார்
உறவு கலவாமை வேண்டும்…’

என்று பாடினான் அந்த மாணவன். அந்த மாணவர் தான் நமது வள்ளலார் சுவாமிகள். எந்நேரமும் வேண்டாம் என்ற சொல்லை பயன்படுத்தாதீர்கள் என்கிறார் வள்ளலார் சுவாமிகள்.

வள்ளலார் சுவாமி உபதேசங்கள்

Bhakthi Planetசித்தவர்களுக்கு உணவு படைத்துப் பசியாற்றுங்கள் உங்களுடைய தீராத நோய்யெல்லாம் தீர்ந்து போகும்.

பிறப்பிலும், மரணத்திலும் உண்டாகும் வேதனைகள் பசி வேதனையைவிட அத்தனை கொடுமையானவையல்ல.

பசி நேரிட்டு உணவு தேடும் போது எல்லோருடைய அகந்தையும் இருந்த இடம் தெரியாமல் போய்விடுகிறது.

உயிர்கள் மீது நீங்கள் காட்டும் கருணையே உங்களுக்கு விமோசனமளிக்கும்.

வாழ வேண்டும் என்கிற ஆசை இருந்தால் மட்டும் போதாது. வாழ்வோம் என்கிற நம்பிக்கையும் வேண்டும்.

உங்கள் சக்தியை உணர்ந்து கொள்ளுங்கள். உலகையே மாற்றும் அற்புத சக்தியைப் பெறுவீர்கள்.

சாமுத்ரிகா லட்சணம் கிளிக் செய்யவும் 

மச்ச பலன்கள் கிளிக் செய்யவும் 

Guru Peyarchi 2015-2016 All Rasi Palan Click Here 

2015 New Year Rasi Palan All Rasi Palan Click Here 

SANI PEYARCHI 2014 TO 2017 RASI PALANCLICK HERE

இராகு – கேதுபெயர்ச்சிபலன்கள் 2014-2015 கிளிக்செய்யவும்

ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்

வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும் 

ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும் 

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India 

For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com

http://www.youtube.com/bhakthiplanet

http://www.youtube.com/niranjanachannel

http://www.facebook.com/bhakthiplanet

For Astrology Consultation CLICK Here

© 2015 bhakthiplanet.com  All Rights Reserved

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2025. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »