Monday 23rd December 2024

தலைப்புச் செய்தி :

சித்திரை மன்மத வருடம் தமிழ் புத்தாண்டு இராசி பலன்களும் – பரிகாரங்களும்.

manmatha varuda rasi palanSri Durga Devi upasakar, V.G.Krishnarau. Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. Phone Number: 98411 64648, Chennai

சித்திரையே வருக சிறப்பான வாழ்க்கை தருக. “இந்த மன்மத வருட சித்திரையில் அவலங்கள், அச்சங்கள் மறையட்டும் மக்கள் கையில் ஐஸ்வரியங்கள் புரளட்டும். இனி துன்பங்கள் தூசி போல் பறக்கட்டும். பால் பொங்குவது போல் மக்கள் மனதில் மகிழ்ச்சி பொங்கட்டும். அனைவரின் இல்லத்திலும் லஷ்மி தங்கட்டும்“ என்று இறைவனிடம் பிராத்தனை செய்து, வருட பலன்களை பார்ப்போம்.

மன்மத வருஷ சித்திரை மாதம், இவ்வாண்டு 14.04.2015 செவ்வாய்க்கிழமை பிற்பகல் 1.47 மணியளவில் (1.47 P.M.) மகர இராசி, கடக லக்கினத்தில் பிறக்கிறது.

இந்த சித்திரை மாதத்தில் லக்கினத்தில் உச்சம் பெற்ற குரு,Manamakkal Malai கடகத்திலிருந்து மகரத்தில் இருக்கும் சந்திரனை பார்வை செய்து, “கெஜகேசரி யோகம்” பெறுகிறது. எதிரிகளின் சூழ்ச்சி, சண்டை, சச்சரவு அனைத்தும் முறியடிக்கப்படும். முன்னேற்ற தடை நீங்கும். பொருளாதாரம் வசதிப்படும். தங்கம் விலை கிடுகிடுவென உயரும்.

ரியல் எஸ்டேட், கட்டட வியாபாரம் முன்னேறும். தெய்வ பக்தி அதிகரிக்கும். நோய்நொடிகள் தீரும். அதேசமயம் சனியை, செவ்வாய் பார்வை செய்Bhakthi Planetவதால் நெருப்பினாலும், நீரினாலும் விபத்தால் – சேதங்கள் நேரலாம். பொதுவாக சென்ற ஆண்டை விட இவ்வாண்டு வியபாரம் விருத்தி அடையும். மருந்து, உணவு பொருட்கள் விலை ஏறும். துணி, வாசனை திராவியம், அலங்கார பொருட்கள் அதிகம் லாபம் கொடுக்கும். கலைத்துறைக்கு சற்று சோதனை நேரமே. எதிர்பார்த்த லாபம் அதிகம் கொடுக்காது. ஆனாலும், தேவையில்லா பிரச்னைகள் ஏற்பட்டாலும், உச்சம் பெற்ற குரு பகவானால் சங்கடங்கள் தீரும்.

சித்திரை பிறப்பன்று, அதிகாலையில் கண் விழிக்கும்போது, வினை தீர்க்கும் நாயகனான விநாயகப் பெருமானை கண்டு வணங்கினால், தீவினைகள் நீங்கி, நல்லவை அனைத்தும் தேடி வரும். அதுபோல, இந்த சித்திரை மாதம் செவ்வாய்க்கிழமை பிறப்பதால், தமிழ் கடவுளான முருகப்பெருமானை வணங்கினால், செந்தில்வேலவன் நாம் செய்யும் நல்ல செயல்களுக்கு துணை நின்று வெற்றியை தருவார்.

அத்துடன்,

ஸ்ரீதுர்கை அம்மனையும் வணங்குங்கள். ஸ்ரீமகாலஷ்மிக்கு இனிப்புniranjana channel அல்லது சர்க்கரையுடன் நெய் கலந்து, உங்கள் இல்லத்தில் இருக்கும் ஸ்ரீமகாலஷ்மியின் படத்தின் முன் வைத்து வணங்கி, தீப ஆராதனை செய்து, அந்த இனிப்பு பிரசாதத்தை உங்கள் குடும்பத்தினருடன் பகிர்ந்து சாப்பிடுங்கள். தித்திக்கும் இனிப்பை போல, உங்கள் வாழ்க்கையில் என்றும் இனிமையான சுபநிகழ்ச்சிகள் தடை ஏதுமில்லாமல் நடைப்பெற அருள்புரிவாள் ஸ்ரீலஷ்மிதேவி.

அடுத்ததாக,

உங்கள் இஷ்டதெய்வத்தையும், குலதெய்வத்தையும் வணங்குங்கள். இதன் பலனாக, இந்த மன்மத வருட தமிழ் புத்தாண்டு தினத்திலிருந்து நல்ல மாற்றங்களும், குடும்பம் செழிப்பாகவும், உங்கள் விருப்பங்கள் அனைத்தும் இறைவனின் ஆசியால் இனிதாகவும் நிறைவேறும்.

இந்த மன்மத வருடம், நமக்கு வெற்றி தருகிற வருடமாக அமையட்டும்.

தமிழ் புத்தாண்டு அன்று நீங்கள் வாங்கும் முதல் பொருள்greensite சர்க்கரையாகவோ அல்லது மஞ்சள், குங்குமமாகவோ இருக்கட்டும். சுபபொருட்களை வாங்குவதால் சுபங்கள் அனைத்தும் நம் இல்லம் தேடி வரும்.

“சித்திரையே வருக சிறப்பான வாழ்க்கை தருக” என்று வரவேற்று, ஒவ்வோரு இராசிகாரர்களுக்கான மன்மத வருட பலன்களை அறிவோம்.

Mesha Rasi மேஷ இராசி அன்பர்களே… இந்த சித்திரை மன்மத ஆண்டு மாத பிறப்பு உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. பஞ்சமாதிபதி சூரியன், உங்கள் இராசியில் உச்சம் பெற்றதால் எதிர்பாரா யோகம் உங்கள் வீட்டுக் கதவை தட்டும். 2-ஆம் இடத்தில் சுக்கிரன், திருமண தடை நீக்கி மேளச்சத்தம் கொட்டச் செய்யும். 10-ஆம் இடத்தில் சந்திரன் உள்ளார். தொழில்த் துறை – வியாபார முன்னேறும். வேலை வாய்ப்பு அமையும். ஆட்சி பெற்ற அங்காரகன் சுகஸ்தானத்தை பார்வை செய்வதால் வீடு, வாகனம் அமையும். அந்தணனான குரு பகவான் 4-ஆம் இடத்தில் இருப்பதால், உறவினர் வருகை அதிகம் உண்டு. செலவுகளும் அதிகம் ஏற்படும். 6-ஆம் இடத்தில் இராகு இருப்பதால், உடல்நிலையில் கவனம் தேவை. 12-ஆம் இடத்தில் அமைந்துள்ள கேதுவினால், தூர பயணங்கள் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். பொதுவாக இந்த மன்மத ஆண்டு நல்லவை யாவும் தரும்.

உங்கள் இராசிக்கான பரிகாரம் – அம்மன் வழிபாடு மிகவும் அவசியம். உங்கள் நட்சத்திரம் வரும் நாட்களில் ஸ்ரீதுர்கையம்மனுக்கு குங்குமத்தால் அர்ச்சனை செய்யுங்கள். ஸ்ரீதுர்கைக்கு உகந்த காயத்திரி மந்திரத்தை தினமும் 9 தடவை உச்சரித்து வாருங்கள். இறைவனின் அருளால் உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியும், வளங்களும் பெருகட்டும்.

Reshaba Rasi ரிஷப இராசி அன்பர்களே… இந்த சித்திரை மன்மத ஆண்டு உங்களுக்கு யோகத்தை கொடுக்க கூடியது. பாக்கியத்தில் சந்திரன் உள்ளதால், எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் தேடி வரும். சொத்துக்கள் வாங்க சாதகமான ஆண்டு இது. சுகாதிபதி சூரியன் உச்சம் பெற்று, 12-ஆம் இடத்தில் மறைந்தாலும், தன் பார்வையால் 2-ஆம் இடத்தை பார்ப்பதால் கடன் தொல்லை தீரும். பஞ்சமத்தில் இராகு இருப்பதால், குலதெய்வ அருளால் பிணிகள், வழக்குகள் இருந்தாலும் தீர்ந்து விடும். வெளிநாட்டுக்கு போக வாய்ப்பு வரும். 7-ஆம் இடத்தில் சனி இருப்பதால், குடும்பத்தில் சிறு பிரச்னை வந்தாலும் அங்காரகன் பார்வையால் தீரும். லாபத்தில் கேது உள்ளார். உயர்வு வரும். தேவை இல்லா செலவுகளை குறைக்க வேண்டும். 12-ஆம் இடத்தில் தன, பஞ்சமாதிபதி இருக்கிறார். வீண் ஆடம்பரம் கூடாது. பொதுவாக இவ்வாண்டு, சாதகம் அதிகம் – பாதகம் குறைவு.

உங்கள் இராசிக்கான பரிகாரம் – செவ்வாய்க்கிழமையில் முருகப்பெருமானையும், செவ்வாய் பகவானையும் வணங்கி வாருங்கள். செவ்வாய் பகவானுக்கு சிகப்பு நிற மலர்களை அணிவியுங்கள். குலதெய்வத்தை தினம் மனதளவில் வணங்கி வாருங்கள். இறைவனின் அருளால் உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியும், வளங்களும் பெருகட்டும்.

midhnuமிதுன இராசி அன்பர்களே… இந்த சித்திரை மன்மத ஆண்டு பெருமை கொடுக்கும் ஆண்டாக இருக்கும். லாபத்தில் சூரியனும், ஜென்மாதிபதி – லாபாதிபதி கூட்டு சேர்ந்துள்ளதால் எப்படியோ நினைத்த காரியத்தை முடித்து வைப்பார்கள். “யாராலே கெட்டான் என்றால் வாயாலே கெட்டான்” என்பதுபோல அஷ்டமத்தில் சந்திரன் இருப்பதால், வாய் துடுக்கு வேண்டாம். 10-ஆம் இடத்தில் கேது இருப்பதால், நசிந்த தொழில் துளிர்விடும். கல்வி தடை நீங்கும். திருமணம் கூடி வரும். பிள்ளை பேறு உண்டாகும். பஞ்சமாதிபதி 12-ஆம் இடத்தில் உள்ளார். வழக்கு வர வாய்ப்புண்டு. ஆகவே உங்கள் பேச்சிலும், செயலிலும் கவனம் தேவை. பொதுவாக சில கிரகங்கள் ஆட்சி, உச்சம் பெற்று இருப்பதால், மகிழ்ச்சி கொடுத்தாலும் 4-ஆம் இடத்தில் உள்ள இராகு, உடல்நலனிலும் வாகனம் போன்ற விஷயத்திலும் சற்று துன்பங்கள் கொடுக்கச் செய்வார். ஆகவே அம்மன் வழிபாடு அவசியம் தேவை.

உங்கள் இராசிக்கான பரிகாரம் – அம்மனுக்கு உங்கள் ஜென்ம நட்சத்திரம் வரும் நாட்களிலோ அல்லது செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமையிலோ பால் அபிஷேகம் செய்யுங்கள். ஒருவருக்காவது அன்னதானம் செய்யுங்கள். இறைவனின் அருளால் உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியும், வளங்களும் பெருகட்டும்.

Virchika Rasi கடக இராசி அன்பர்களே… இந்த சித்திரை மன்மத ஆண்டு உங்களை உச்சத்தில் வைக்க போகிறது. 10-ஆம் இடத்தில் தனாதிபதி, பஞ்சமாதிபதி இணைந்து உள்ளதால், மண்ணை தொட்டாலும் பொன்னாக்குவார்கள். 10 ரூபாயை வைத்துக் கொண்டு ஆயிரம் ரூபாய் வேலையை முடித்து விடுவீர்கள். 7-ஆம் இடத்தில் சந்திரன் இருக்கிறார். குடும்பத்தில் சுபசெலவு வரும். உறவினர்கள் வருகையும் அவர்களால் உங்களுக்கு பெருமையும் சேரும். வேலை வாய்ப்பு, அதிகாரிகளின் உதவி, வியாபாரத்தில் பெரும் முன்னேற்றம், நல்ல லாபம் கொடுக்கக் கூடிய ஆண்டு இது. ஜென்மத்தில் குரு இருப்பதால், ஓய்வு இல்லாமல் உழைப்பு இருக்கும். அதனால், உடல்நலனில் கவனம் செலுத்துங்கள். 3-ஆம் இடத்தில் இராகு உள்ளார். எதிர்பாரா தனலாபம் உண்டு. 9-இல் கேது இருக்கிறார். ஜாக்கிரத்தையாக இருங்கள், உங்களை ஏணிபோல் பயன்படுத்தி மற்றவர்கள் ஏறி விடுவார்கள்.

உங்கள் இராசிக்கான பரிகாரம் – விநாயகப்பெருமானை வணங்குங்கள். விநாயகருக்கு அருகம்புல் அணிவியுங்கள். உங்கள் ஜென்ம நட்சத்திரத்தில் உங்கள் பெயருக்கு அர்ச்சனை செய்யுங்கள். இறைவனின் அருளால் உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியும், வளங்களும் பெருகட்டும்.

Simha/Leoசிம்ம இராசி அன்பர்களே… இந்த சித்திரை மன்மத ஆண்டு பிறப்பு உங்களை மகிழ்ச்சி பொங்க செய்யப்போகிறது. 9-ஆம் இடத்தில் சூரியன்-புதன், செவ்வாய் பாக்கிய ஸ்தானத்திலும் உள்ளார். இந்த கூட்டணி உங்கள் கனவுகளை நிறைவேற்றும். என்னாகுமோ, ஏதாகுமோ என்று கலங்கி இருந்த நீங்கள், இனி கவலை இல்லாத மனிதர்கள். சொத்து சுகங்கள் கைக்கு தேடி வரும். 10-இல் உள்ள சுக்கிரன், எடுக்கும் முயற்சியில் வெற்றியை தருவார். வியபாரமும், வேலை வாய்ப்பும் அருமையாக அமையும். 2-ஆம் இடத்தின் அதிபதி 9-ஆம் இடத்தில் இருப்பதால் எதிர்பாரா வகையில் குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும். திருமணம் பிரமாதமாக நடக்கும். வழக்கு, எதிரிகள் தொல்லை அறவே ஒழியும். சுக ஸ்தானத்தில் சனி பகவானும், 8-ஆம் இடத்தில் கேதுவும் இருப்பதால், உடல்நலனில் கவனம் தேவை. ஆவேசம், பரபரப்பு கூடாது. பொறுமையாக இருங்கள் 12-க்குரிய சந்திரன் 6-ஆம் இடத்தில் இருப்பதால் எதிரிகள் அடிபணிவார்கள்.

உங்கள் இராசிக்கான பரிகாரம் – வெள்ளிக்கிழமையில் அம்மன் கோயிலில் நெய் தீபம் ஏற்றி வணங்குங்கள். வாழ்க்கை ஒளிப் பெறும். குரு பகவானையும் வணங்கி வாருங்கள். இறைவனின் அருளால் உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியும், வளங்களும் பெருகட்டும்.

Kanni Rasi கன்னி இராசி அன்பர்களே… இந்த சித்திரை மன்மத ஆண்டு சிறப்பான ஆண்டாக இருக்கும். 12-க்குரியவர் 8-ஆம் இடத்தில் மறைந்ததால் எதிர்பாரா யோகத்தை கொடுப்பார். செவ்வாய் 8-ஆம் இடத்தில் இருந்தாலும் சிறுசிறு பிரச்னை உண்டாக்குவார். 9-ஆம் இடத்தில் சுக்கிரன் இருக்கிறார். தனலாபம் உண்டு. வெளிநாட்டில் வேலை வாய்ப்பும், வியபார தொடக்கமும் ஏற்படலாம். கடன் தொல்லை சற்று தீரும். குடும்பத்தில் கருத்து வேற்றுமை இருந்தாலும் தீரும். 5-ஆம் இடத்தில் சந்திரன் உள்ளார். சுப செலவுகள் தேடி வரும். சப்தம ஸ்தானத்தில் உள்ள கேதுவால் மனைவி மற்றும் கூட்டாளிகளிடம் பேசும்போது சற்று நிதானம் தேவை. தெய்வ யாத்திரை சிலருக்கு அமையும். வாகன பயணத்தில் கவனம் தேவை. ஜென்ம இராகு என்பதால் ஜாக்கிரத்தையாகவும் இருக்க வேண்டும். சாதகம் அதிகம், பாதகம் குறைவுதான்.

உங்கள் இராசிக்கான பரிகாரம் – அஷ்டமி திதியில் பைரவரை வணங்குங்கள். பைரவருக்கு மிளகு தீபம் ஏற்றி வாருங்கள். உங்களால் முடிந்த உதவிகளை மாற்றுத் திறனாளிகளுக்கு செய்யுங்கள். இறைவனின் அருளால் உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியும், வளங்களும் பெருகட்டும்.

Tula/Libraதுலா இராசி அன்பர்களே… இந்த சித்திரை மன்மத ஆண்டு மகிழ்ச்சி கொடுக்கும் ஆண்டாக இருக்கும். 7-ஆம் இடத்தில் சூரியன், செவ்வாய் இணைந்து உள்ளதால், திட்டங்களை நிறைவேற்றி வைப்பார்கள். 10-க்குரிய சந்திரன், 4-ஆம் இடத்தில் இருப்பதால் வீடு, வாகனம் அமையும். 8-இல் சுக்கிரன் இருக்கிறார். திருமண வரன்கள் வரும்போது நன்கு விசாரித்து கவனமாக செயல்படவும். அதேபோல் காதல் விவகாரங்களிலும் மிகமிக கவனம் தேவை. ஏமாற்றம் தரலாம். தொழில்துறை உத்தியோகம் அருமையாக அமையும். சிலருக்கு இடமாற்றம் உண்டு. உழைப்பு அதிகம் இருக்கும். ஆகவே உடல்நலனில் கவனம் செலுத்துங்கள். குடும்பத்தில் (ஸ்தானத்தில்) சனி இருப்பதால், விரயங்கள் அதிகம் உண்டு. பெற்றோர் உடல்நலனில் கவனம் தேவை. வெளிநாட்டு பயணம், வெளிநாட்டு வேலை வாய்ப்பு வரும். 6-ஆம் இடதில் கேது உள்ளார். விரோதங்கள் தேடி வரும். உஷாராக இருங்கள். இவ்வாண்டு சாதகமும், பாதகமும் கலந்து வரும்.

உங்கள் இராசிக்கான பரிகாரம் – சிவபெருமானுக்கு பிரதோஷ காலத்தில் வில்வ இலை சமர்பித்து வணங்குங்கள். சனிக்கிழமையில் எள் தீபம் ஏற்றி சனி பகவானை வணங்குங்கள். இறைவனின் அருளால் உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியும், வளங்களும் பெருகட்டும்.

Kataka/Cancerவிருச்சிக இராசி அன்பர்களே… இந்த சித்திரை மன்மத ஆண்டு உங்களுக்கு பெருமையை தரும். ஆனால் நீங்கள் பொறுமையாகவும் இருக்க வேண்டும். 10-க்குரிய சூரியன், 6-ஆம் இடத்தில் செவ்வாயோடு இணைந்து விட்டார். ஜென்மத்தில் சனி உள்ளார். இவைகளால் மனக்குழப்பம், தேவையில்லா சிந்தனை கொடுக்கும். 7-ஆம் இடத்தில் சுக்கிரன் இருப்பதால் பாதிப்பு அதிகம் வராது. திருமணம் கூடி வரும். கணவரின் உதவிகள் தேடி வரும். கூட்டு வியபாரம் செய்பவர்கள் லாபம் அடையலாம். வேலைக்கு செல்லும் பாக்கியம் அமையும். கடன் பிரச்னை தீரும். 5-ஆம் இடத்தில் கேது இருப்பதால், உடல்நலனில் குறிப்பாக தலைபாகத்தில் கவனம் தேவை. 11-ஆம் இடத்தில் இராகு பகவான் இருப்பதால், நல்ல லாபகரமான சித்திரை ஆண்டுதான் இது. ஆனாலும் ஜென்மத்தில் சனி (ஜென்ம சனி) இருப்பதால், “கோபத்தில் எழுபவன் நஷ்டத்தில் உட்காருவான்“ என்பதுபோல ஆவேச வார்த்தைகள் கூடாது, முன்னேற்ற தடை செய்யும். பொதுவாக லாபமான வருடமே.

உங்கள் இராசிக்கான பரிகாரம் – ஆஞ்சனேயரை வணங்குங்கள். தன்வந்தரி பகவானையும் வணங்குங்கள். சனிக்கிழமையில் கருப்பு வர்ணத்தில் ஆடை உடுத்துங்கள். இறைவனின் அருளால் உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியும், வளங்களும் பெருகட்டும்.

Dhanusu Rasi தனுசு இராசி அன்பர்களே… இந்த சித்திரை மன்மத ஆண்டு, சோதனைகளை தூக்கி எறியச்செய்யும் ஆண்டாக அமையும். பாக்கியாதிபதி சூரியன், பஞ்சமத்தில் செவ்வாயோடு இணைந்து, எள் என்றால் எண்ணையாக கொடுப்பதுபோல் நல்லவை கொடுக்க செய்வார். தன ஸ்தானத்தில் சந்திரன் உள்ளார். வாக்கு பலிதம் உண்டு. பணம் தேடி வரும். 10-ஆம் இடத்தில் இராகு இருக்கிறார். தொழிலும், படிப்பும், வேலையும் அமையும். வழக்கு இருந்தால் வெற்றி பெறும். சிலருக்கு தேவையற்ற கடன் பிரச்னை உண்டாக்கும். மேலதிகாரிகளின் உதவிகள் கிடைக்கும். அஷ்டமத்தில் குரு இருப்பதால், பிறரின் ஜாமீன் விவகாரத்தில் தலையிட வேண்டாம். 4-ஆம் இடத்தில் கேது இருக்கிறார். வாகன பயணத்தில் எச்சரிக்கை தேவை. குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும். திருமண தடை நீங்கும். ஒற்றுமை இல்லாத குடும்பமும் இணையும். பொன், பொருள் சேரும். ஆனால் 6-ஆம் இடத்தில் சுக்கிரன் இருப்பதால், வீண் டம்பம் கூடாது. வீண் செலவும் கூடாது. புத்திசாலிதனமாக நடந்தால் இதமான தென்றல் போல் மகிழ்ச்சியான மன்மத ஆண்டாக அமையும்.

உங்கள் இராசிக்கான பரிகாரம் – வியாழக்கிழமையில் குரு பகவானையும், ஸ்ரீதட்சிணாமூர்த்தியையும் வணங்குங்கள். உங்களுக்கு பிடித்தமான இறைவனின் கோயிலுக்கு நெய் தானம் செய்யுங்கள். இறைவனின் அருளால் உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியும், வளங்களும் பெருகட்டும்.

Magara Rasi --மகர இராசி அன்பர்களே… இந்த சித்திரை மன்மத ஆண்டு செல்வம் அள்ளி தரும். 4-ஆம் இடத்தில் ஆட்சி பெற்ற செவ்வாய், சூரியனோடு இணைந்து இருப்பதால் திட்டங்கள் அனைத்தையும் வெற்றி பெற செய்வார்கள். லாபத்தில் சனி பகவான் உள்ளார். தொழில்த் துறை முன்னேற்றம் அடையும். வேலை வாய்ப்பும், உத்தியோக உயர்வும் தேடி வரும். சப்தமத்தில் குரு இருக்கிறார். குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். சிலருக்கு மனைவியால் லாபம் உண்டு. கூட்டு தொழில் லாபம் தரும். 5-ஆம் இடத்தில் சுக்கிரன் உள்ளதால் எதிர்பாரா தனலாபம், பூர்வீக சொத்துக்களில் வழக்கு இருப்பினும் கைக்கு வரும். 9-ஆம் இடத்தில் இராகு இருப்பதால், மேலதிகாரி வசம் கவனத்துடன் இருக்கவும். பணிவு அவசியம். அத்துடன் நாவடக்கம் தேவை. தேவையில்லா கடன் வேண்டாம். முக்கியமாக சுகஸ்தானத்தில் புதன் இருப்பதால், உடல்நலனில் அக்கரை செலுத்துங்கள். பொதுவாக இவ்வாண்டு அருமையாக இருக்கும்.

உங்கள் இராசிக்கான பரிகாரம் – ஞாயிற்றுக்கிழமையில் சூரிய பகாவானை வணங்குங்கள். கோதுமையால் தயாரித்த உணவை தானம் செய்யுங்கள். சூரிய பகவானுக்கு உகந்த காயத்திரி மந்திரத்தை தினமும் உச்சரித்து வாருங்கள். இறைவனின் அருளால் உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியும், வளங்களும் பெருகட்டும்.

Kumba Rasi கும்ப இராசி அன்பர்களே… இந்த சித்திரை மன்மத ஆண்டு பிரமாதமாக இருக்கும். துவண்டு இருந்த நீங்கள் துள்ளி குதிப்பீர்கள். 3-ஆம் இடத்தில் சூரியன், செவ்வாய் உள்ளார்கள். தொட்டது துலங்கும். வழக்கு – குழப்பம் அத்தனையும் தீரும். எதிரிகள் அடிப் பணிவர். சொத்துக்கள் வந்தடையும். வீடு, மனை அமையும். 10-ஆம் இடத்தில் சனி பகவான் இருப்பதால், தொழில்த்துறை மேலோங்கும். சுக ஸ்தானத்தில் சுக்கிரன் இருக்கிறார். உறவினர்களின் உதவி தேடி வரும். வேலை வாய்ப்பு பற்றி கவலை வேண்டாம். வெளிநாட்டில் உத்தியோகம் சிலருக்கு தேடி வரும். நண்பர்களின் உதவியும் நாடி வரும். நீண்ட நாள் நோய்நொடிகள் அகலும். 8-ஆம் இடத்தில் இராகு இருப்பதால் பேச்சில் நிதானம் தேவை. வைராக்கியம் தவிர்க்கவும். 6-இல் உள்ள குரு பகவான், சொத்து பத்திர பதிவு செய்யும் போது மிகமிக கவனமாக இருக்கச் சொல்கிறார். மற்றவர்களின் பேச்சுக்கும் மதிப்பு கொடுங்கள்.

உங்கள் இராசிக்கான பரிகாரம் – துளசி மாலையை ஸ்ரீலஷ்மி நரசிம்மருக்கு அணிவித்து வணங்குங்கள். வியாழக்கிழமையில் மஞ்சலும், நீலமும் கலந்த ஆடையை உடுத்துங்கள். இறைவனின் அருளால் உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியும், வளங்களும் பெருகட்டும்.

Meena Rasi மீன இராசி அன்பர்களே… இந்த சித்திரை மன்மத ஆண்டு உங்களை மற்றவர்கள் மெச்சும் அளவுக்கு புகழ் தரப் போகிறது. உங்களை மகிழ்ச்சி பொங்க செய்யப்போகும் ஆண்டு இது. பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைக்கும். வேலை, வியபாரம் இல்லாமல் வெட்டியாக இருந்தவர்களுக்கு எதிர்பாரா யோகத்தை கொடுக்கும். புதிய தொழில் அமையப் போகிறது. கல்வியால் நல்ல பலன் வரும். சொத்துகள் வந்தடையும். திருமண தடை இருந்து வந்தவர்களுக்கு திருமண பாக்கியம் தரும். வீடு, மனை அமையும். நோய்நொடி தீரும். 2-ஆம் இடத்தில் உள்ள ஆட்சி பெற்ற செவ்வாய், உங்கள் நிலை உச்சம் பெற செய்யும் ஆண்டாக அமையச் செய்யும். பஞ்சம குரு கேட்கவே வேண்டாம். மண்ணும் உங்கள் கைக்கு வந்தால் பொன்னாகும். அத்தகைய ஒரு யோக வருடம் இது. ஜென்மத்தில் கேது இருப்பதால் நிதான சிந்தனை, நிதான பேச்சு அவசியம். பிறகென்ன… இந்த சித்திரை யோகமோ யோகம்தான்.

உங்கள் இராசிக்கான பரிகாரங்கள் – புற்று அம்மனை வணங்குங்கள். அம்மன் கோயிலில் நெய் தீபம் ஏற்றி வாருங்கள். ஸ்ரீதுர்கை அம்மனுக்கு உகந்த காயத்திரி மந்திரத்தை தினமும் 9 முறை உச்சரித்து வாருங்கள். இறைவனின் அருளால் உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியும், வளங்களும் பெருகட்டும்.

அனைவருக்கும் சித்திரை மற்றும் மன்மத வருட தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்! 

மேலும் ஜோதிட கட்டுரைகள் படிக்கவும்…

மேலும் இராசி பலன்கள் படிக்கவும்…

மேலும் வாஸ்து கட்டுரைகள் படிக்கவும்…

மேலும் ஆன்மிக கட்டுரைகள் படிக்கவும்…

ஜோதிட ஆலோசனைக்கு இங்கே பார்க்கவும்…

Send your feedback to: editor@bhakthiplanet.com

For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India

http://www.youtube.com/bhakthiplanet

http://www.facebook.com/bhakthiplanet

For Astrology Consultation CLICK Here

Donate© 2015 bhakthiplanet.com  All Rights Reserved

Posted by on Mar 20 2015. Filed under Headlines, Home Page special, இராசி பலன்கள், செய்திகள், ஜோதிடம், முதன்மை பக்கம். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »