சரஸ்வதியின் அருள்
Written by Niranjana
வால்மீகி ராமாயணத்தை தமிழில் எழுத வேண்டும என்று சோழ அரசர் ஒருவர் விரும்பி அந்த பொறுப்பை ஒட்டக்கூத்தரிடமும் கம்பரிடமும் ஒப்படைத்தார். சரஸ்வதி தேவியையும் அன்னை சக்திதேவியையும் வணங்கி ஒட்டக்கூத்தரும் கம்பரும் இணைந்து ராமாயண காவியத்தை எழுத ஆரம்பித்தார்கள்.
“பெரும் புலவரான நம்மை கம்பருடன் இணைந்து பணியாற்ற சொல்வதா?” என்று கடும் கோபம் அடைந்தார் ஒட்டக்கூத்தர். ஆனால் அதை வெளிக்காட்டாமல் இருந்தார். இதனால் கம்பருடன் இணைந்து பணியாற்றாமல் இருந்தார். ஆனாலும் கம்பர் எதையும் அறியாதவர் போல் அமைதியாக இருந்து அரசர் தந்த இலக்கிய பணியை சிறப்பாக செய்து கொண்டு இருந்தார். ஒட்டக்கூத்தரின் ஒத்துழைப்பு இல்லாததை பற்றி கம்பர் கவலைப்படவில்லை.
ஆனால் ஒட்டக்கூத்தரோ விரோத மனதுடன் இருந்ததால் அந்த நேரத்தில் அவருக்கு சரஸ்வதிதேவியின் அருளும் கருணை பார்வையும் முழுமையாக கிடைக்கவில்லை. வால்மீகி ராமாயணத்தை ஒட்டக்கூத்தர் தனியாக இயற்றினாலும் அதற்கான முழு அங்கீகாரம் கிடைக்கவில்லை. ஞானம் இருந்தால் மட்டும் போதாது. கர்வம் இருக்கக் கூடாது. கர்வம் உள்ள மனதில் எந்த யோகமும் தங்காது. அதுவும் சரஸ்வதி தேவி, வெள்ளை நிறத்தை விரும்கிறவள். அந்த வெள்ளை நிறத்தில் ஒரு சிறு கறை பட்டாலும் அது மிகவும் பளிச்சென்று தெரியும். அதுபோல் தன்னுடைய அருளால் கல்வியறிவு பெற்றவர்கள், கர்வத்தோடு இருந்தால் அது சரஸ்வதிதேவிக்கு பிடிக்காமல் அவர்களின் மேல் கோபப் பார்வை செலுத்துவார். இதனால் ஞானம் கிடைத்தாலும் அதன் மூலமாக பெருமை கிடைக்காது.
வால்மீகி இராமாயணத்தை இயற்றியவர்
சோழ அரசர் ஒருநாள், “இராமாயண காவியத்தை எதுவரை இயற்றினீர்கள்.?“ என கேட்டார் கம்பரிடமும் ஒட்டக்கூத்தரிடமும். கம்பர் மட்டும்தான் இராமாயண காவியத்தை அதிக அளவு எழுதினார். இதை அறிந்த அரசர் மிக மகிழ்ச்சியடைந்து, கம்பரை பாராட்டினார். இதை ஜீரணிக்க முடியாத ஒட்டக்கூத்தர், “அரசே…இனி கம்பரே இராமாயண காவியம் எழுதி முடிக்கட்டும்.” என்று கூறி சொல்லி விலகி கொண்டார்.
இராமாயணத்தை சிறப்பாக இயற்றிய பிறகு, அதை சபையில் காவிய பாடல்களாக பாடினார் கம்பர். சரஸ்வதியின் அருள் பெற்றவராக கம்பர் திகழ்ந்ததால், சபையில் இருந்த ஸ்ரீநரசிம்ம மூர்த்தி சிலை, கம்பரின் பாடல்களை கேட்டு மகிழ்ந்து தலையசைத்து கர்ஜனை எழுப்பியது. இதை கண்ட அரசரும், மற்றவர்களும் அதிர்ச்சியும் – ஆனந்தமும் அடைந்தார்கள்.
இப்படி சரஸ்வதி தேவியின் அருள் இருந்தால்தான் எந்த கலைகளும் எளிதாக வரும். அதில் புகழ் பெறுவார்கள். நன்மை தீமைகளை சிந்திக்கும் ஆற்றலும், தைரியசாலியாகவும் இருப்பார்கள். கற்ற கல்வியின் பயனால் செல்வந்தர்களாக இருப்பார்கள்.
சரஸ்வதியின் அருள் பெற அன்பான உண்மையான பக்தியுடன் வழிப்பட்டு அதன் பயனால் சிறந்த கல்வி அறிவு பெறலாம்.
சரஸ்வதி பூஜைமுறை
சரஸ்வதி பூஜையன்று வீடுகளிலும், அலுவலகங்களிலும் பூஜை செய்வார்கள். சரஸ்வதி படத்துக்கு சந்தனம் தெளித்து மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து, மல்லிகை பூ, வெண்தாமரை வைத்து அலங்கரிக்க வேண்டும்.
பூஜை ஆரம்பிக்கும் முன் மஞ்சளில் விநாயகரை பிடித்து விநாயகருக்கு குங்கும்,அறுகம்புல் மலர்கள் சமர்பிக்க வேண்டும். நாம் பயன்படுத்தும் கல்வி அல்லது கணக்கு புத்தகங்களில் பொட்டு வைத்து சரஸ்வதிதேவி படத்தின் முன் வைக்க வேண்டும்.
நெய்வேதியம்
சுண்டல் சக்கரைப் பொங்கள், வடை, பொறி, கடலை, அவல், நாட்டுசக்கரை, பழங்களையும் வைத்து பூஜிக்க வேண்டும்.
ஆயுத பூஜை
ஆயுத பூஜையில் அன்று வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தும் கத்தி, சமையல் பாத்திரங்களில் ஒரு சில பாத்திரங்கள் மற்றும் வீட்டின் உபயோக பொருட்களுக்கு விபூதி தெளித்து சந்தனம் பொட்டு வைத்து குங்குமம் வைக்க வேண்டும். நம் அலுவலகத்தில் உள்ள பொருட்களுக்கும் வாகனங்களுக்கும் பூஜை செய்ய வேண்டும். காரணம், அந்த பொருட்களை வாங்குவதற்கு பொருளாதர வசதி தந்த முப்பெரும் தேவிகளுக்கு மரியாதையும் நன்றியும் செய்வதாக ஐதீகம்.
பூஜை மந்திரம்
கணபதி மந்திரமும், சரஸ்வதிக்கு உகந்த காயத்திரி மந்திரங்களும் சொல்லலாம். இந்த மந்திரங்களை சொல்வதால் பூஜை செய்த பலன் இன்னும் சிறப்பாக கிடைக்கும்.
ஓம் கணபதி காயத்ரி
ஓம் ஏகதந்தாய வித்மகே!
வக்ர துண்டாய தீமகி!
தன்னோ தந்தி ப்ரசோ தயாத்!
சரஸ்வதி மந்திரம்
ஓம் வாக்தேவ்யை ச வித்மஹே
பிரஹ்மபத்ன்யை ச தீமஹி
தன்னோ வாணீஹ் ப்ரசோதயாத்
விஜயதசமி
மறுநாள் விஜயதசமி அன்று நல்ல நேரம் பார்த்து பூஜையில் வைத்த புத்தகத்தையும், பொருட்களையும் உபயோகப்படுத்த வேண்டும். புதிய தொழில் தொடங்கவும் விஜயதசமி சிறந்த தினமாகும். குழந்தைகளை பள்ளியில் சேர்க்க இந்த தினம் சிறப்பானது. இப்படி நல்ல செயல்களை விஜயதசமி அன்று செய்தால் அதற்குரிய பலன் வைரம் போல் ஜொலிக்கும்.
ஏற்றமான வாழ்க்கை அமைய கலைவாணியின் அருளை இப்போதே பெறுவோம். அனைவருக்கும் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி நல்வாழ்த்துக்கள்.
SANI PEYARCHI 2014 TO 2017 RASI PALANCLICK HERE
இராகு – கேதுபெயர்ச்சிபலன்கள் 2014-2015 கிளிக்செய்யவும்
Guru Peyarchi Palan 2014-2015 CLICK HERE
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
http://www.youtube.com/bhakthiplanet
http://www.youtube.com/niranjanachannel
http://www.facebook.com/bhakthiplanet
For Astrology Consultation CLICK Here
© 2014 bhakthiplanet.com All Rights Reserved