சென்னை, செப். 26– பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்– அமைச்சர் ஜெயலலிதா இன்று ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:– தமிழ்நாட்டைச் சேர்ந்த 4 மீனவர்கள் கடந்த 22–ந்தேதி ஈரான் கடலோர காவல் படையால் பிடித்து சிறை வைக்கப்பட்டுள்ளது பற்றி உங்கள் கவனத்துக்கு கொண்டு வர விரும்புகிறேன். தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் சசிகுமார் (40), அந்தோணி (29), அந்தோணி (34), ஆரோக்கியம் (30) ஆகிய 4 பேரும் ஒப்பந்த அடிப்படையில் கத்தார் […]
பசங்க பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு-நயந்தாரா நடிக்கும் படம் ‘இது நம்ம ஆளு’. சிம்புவின் தம்பி இந்தப் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். எல்லாப் பிரச்னைகளையும் தாண்டி படப்பிடிப்பு முடியும் தருணத்தில் உள்ளது. படத்தின் பர்ஸ்ட் லுக் டீஸர் அடுத்த மாதம் வெளியிடப்பட உள்ளது. இந்நிலையில் இது நம்ம ஆளு படத்தின் பாடல்களில், க்ளைமேக்ஸ் காட்சியில் இடம்பெறும் ஒரு பாடல் தவிர்த்து மற்ற பாடல்கள் அனைத்தும் முழுமையாக முடிந்துவிட்டதாம். இந்த தகவலை சிம்புவே தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். அதோடு […]
2014-சர்வதேச குழந்தைகள் அமைதிக்கான சர்வதேச விருது இந்திய வம்சாவளியை சேர்ந்த நேகா குப்தா உள்பட 3 பேருக்கு வழங்கப்படுகிறது. ஆம்ஸ்டர்டாமை சேர்ந்த குழந்தைகள் நல அமைப்பு ஒன்று உலக அளவில் குழந்தைகள் உரிமைகளுக்காக போராடுபவர்களுக்கு ஆண்டு தோறும் சர்வதேச குழந்தைகள் அமைதி விருது வழங்கி வருகிறது. இந்த ஆண்டு இந்த விருதுக்காக அமெரிக்காவில்வாழ்து வரும் இந்தியா வம்சாவளியை சேர்ந்த நேகா குபதா தேர்வு செய்யபட்டு உள்ளார். 18 வயதாகும் நேகா சொந்தமாக ஒரு அறக்கட்டளை அமைத்து குழந்தைகள் […]
சென்னை, செப். 26– அம்பத்தூர் பால் பண்ணைக்கு விழுப்புரம் வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்படும் ஆவின் பால் லாரிகளில் பாலை திருடி விட்டு அதில் தண்ணீர் கலந்து அனுப்பிய சம்பவத்தை சி.பி.சி.ஐ.டி. போலீசார் சமீபத்தில் கண்டு பிடித்தனர். சென்னைக்கு வரும் ஒவ்வொரு ஆவின் பால் லாரிகளில் இருந்தும் குறிப்பிட்ட அளவு பாலை திருடிய பிறகு அதே அளவுக்கு தண்ணீர் நிரப்பிய சம்பவம் பல வருடங்களாக நடந்ததாகவும் விசாரணையில் தெரிய வந்தது. இந்த மோசடிக்கு […]
விஜய்-சமந்தா நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள ‘கத்தி’ படத்தில் விஜய் செல்பிபுள்ள என்ற பாடலை பாடியுள்ளார். அனிருத் இசையில் வெளிவந்துள்ள இப்பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இப்பாடலை மிகவும் சிறப்பாக படமாக்க வேண்டும் என்று விரும்பிய படக்குழு, முதலில் வெளிநாடுகளில் படமாக்க திட்டமிட்டனர். ஆனால், படத்தை தீபாவளிக்கு வெளியிட திட்டமிட்டுள்ளதால் வெளிநாடுகளில் அந்த பாடலை படமாக்கினால் அதிக நாட்கள் எடுத்துக் கொள்ளும் என நினைத்த படக்குழு மும்பையிலேயே பிரம்மாண்ட அரங்கு அமைத்து படமாக்க முடிவெடுத்தனர். அதன்படி, […]
அபுஜா, செப். 26– நைஜீரியாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிபக் கிராமத்தில் பள்ளி விடுதியில் புகுந்து அங்கிருந்த 270 மாணவிகளை போகோஹாரம் தீவிரவாதிகள் கடத்தி சென்றனர். அவர்களில் 50–க்கும் மேற்பட்டோர் தப்பி வந்து விட்டனர். மீதமுள்ள 200 பேரை தீவிரவாதிகள் சிறை வைத்துள்ளனர். இவர்களை விடுவிக்கும் படி சர்வதேச நாடுகள் வலியுறுத்தியும் தீவிரவாதிகள் கண்டு கொள்ளவில்லை. இந்த நிலையில் 20 வயது மாணவி ஒருவர் மட்டும் அபுஜாவுக்கு திரும்பி வந்தார். அவரை தீவிரவாதிகள் விடுதலை செய்து […]

சென்னை பள்ளிக்கரணையில் கணவரைக் கொலை செய்துவிட்டு நெஞ்சுவலியால் இறந்துவிட்டதாக நாடகமாடிய மனைவி, கொலைக்கு உதவிய கள்ளக் காதலர் கைது செய்யப்பட்டனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது: பள்ளிக்கரணை நன்மங்கலம் அருகே உள்ள ஜி.பி.சாமிநகரைச் சேர்ந்தவர் சத்யநாராயணன். இவர் கட்டடத் தொழிலாளி. இந்நிலையில் சத்யநாராயணன் கடந்த 22-ம் தேதி நெஞ்சு வலியால் இறந்துவிட்டதாக அவரது மனைவி அம்சரேகா தெரிவித்தார். ஆனால், சத்யநாராயணனின் சாவில் சந்தேகமடைந்த அவரது சகோதரி அஞ்சலை பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸார், வழக்குப் […]
தங்கம் உடல் சிவப்பு நிறம் பெற தங்கத்தை வசம்புடன் சேர்த்து அரைத்து உண்ணும் வழக்கம் இன்றும் காணப்படுகிறது. ஆயுர்வேகத்தில் “தங்கபஸ்பம்” என்னும் மருந்து தேனில் குழைத்து உண்ணத் தரப்படுகிறது. உடலை வனப்போடும் இளமையோடும் வைக்க தங்கச்சத்து பயன்படுகிறது. தங்கத் தட்டில் சூடான சாதமும் நெய்யும் இட்டு உண்பதால் உடலுக்கு எவ்வளவு தங்கம் வேண்டுமோ அவ்வளவு தங்கம் (மிகமிகச் சிறிய அளவு) உடலில் சேரும் என்று சித்த மருத்துவம் கூறுகிறது. வெள்ளி வெள்ளி உடலுக்குப் பொலிவு மற்றும் அழகைத் […]
மனிதனின் மனதிற்கும் உடலுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதை அக்கால மருத்துவர்கள் முதல் இக்கால மருத்துவர்கள் வரை கூறி வருகிறார்கள். ஒருவரது மனதில் கவலை தோன்றும் போது, அவரது உடல் தளர்ந்து போவதும், கோபத்தில் இருக்கும்போது இதயம் படபடப்பதும் மன உணர்ச்சியின் அடிப்டையில் உடலில் தோன்றும் விளைவுகளாகும். அதிக அச்சம் ஏற்படுவதால் இதயத்துடிப்பு அதிகரித்தல், கைகால்கள் இழுத்துக் கொள்ளுதல், சிலருக்கு அதிர்ச்சியில் இதயமே நின்றுபோவது கூட நிகழ்கிறது. மனதில் தோன்றும் உணர்ச்சிகளுக்கும், உண்ணும் உணவிற்கும் நேரடி தொடர்பு இருப்பதாக […]
வெஜிடபிள் நூடுல்ஸ் தேவையானவை நூடுல்ஸ் – 200 கிராம் கேரட் – 50 கிராம் பீன்ஸ் – 50 கிராம் குடைமிளகாய் – 50 கிராம் முட்டைகோஸ் – 50 கிராம் எண்ணெய் – 50 மி.லி சிறிது சோயா சாஸ் மிளகு 10 கிராம் செய்முறை சிறிது உப்பு மற்றும் எண்ணெய் சேர்த்து நூடுல்ஸை வேகவிடவும். வேகவையில் கொஞ்சம் நீர் மற்றும் எண்ணெய் சேர்க்கவும். எண்ணெய் காய்ந்ததும் அதில் நறுக்கப்பட்ட காயிகறிகளை போட்டு வதக்கவும். அவற்றுடன் […]