சொத்து குவிப்பு வழக்கு ஜெயலலிதா சார்பில் ஜாமீன் மனு தாக்கல்; பிரபல வக்கீல் ராம்ஜெத்மலானி ஆஜராகி வாதாடுவார்
பெங்களூர்
பெங்களூர் ஜெயிலில் இருக்கும் ஜெயலலிதாவை ஜாமீனில் எடுக்கும் நடவடிக்கைகளில் அ.தி.மு.க.வின் சட்டப் பிரிவு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. நேற்று அ.தி.மு.க. வக்கீல்கள் பெங்களூரில் கூடி நீண்ட நேரம் இது தொடர்பாக ஆலோசனை நடத்தினார்கள். ஜெயலலிதா சார்பில் தாக்கல் செய்யப்படும் அப்பீல் மனுவில் எத்தகைய அம்சங்கள் இடம் பெற வேண்டும் என்று விவாதிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் ஜாமீன் மனு தயாரிக்கப்பட்டது.
பொதுவாக சிறை தண்டனை விதிக்கப்படும் ஒருவர், 3 ஆண்டுகளுக்கு கீழ் தண்டனை பெற்றிருந்தால் எங்கு தீர்ப்பு வழங்கப்பட்டதோ அதே கோர்ட்டில் மனு செய்து ஜாமீன் பெற முடியும். 3 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை விதிக்கப்படும் பட்சத்தில் ஐகோர்ட்டை அணுகிதான் ஜாமீன் பெற முடியும். ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால் அவர் ஜாமீன் கேட்டு கர்நாடகா ஐகோர்ட்டில்தான் ஜாமீன் மனு செய்ய முடியும்.
இந்த அடிப்படையில் கர்நாடக மாநில ஐகோர்ட்டில் இன்று ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்யபட்டது. கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வகேலாவை நேரில் சந்தித்து மனு செய்யப்படும் என்று முதலில் கூறப்பட்டிருந்தது. இந்த நிலையில் உயர்நீதிமன்ற கிளர்க்கிடம் ஜாமீன் மனுக்களை அதிமுக தரப்பு வக்கீல்கள் அளித்துள்ளனர்.
அளிக்கப்படும் மனுக்கள் எப்போது விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்ற அட்டவணை இன்று மாலை 5 மணி முதல் 6 மணிக்குள் வெளியாகும்.
பெங்களூர் ஐகோர்ட்டுக்கு தசரா விழாவுக்காக வரும் 5-ந்தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. எனவே பெங்களூர் ஐகோர்ட்டில் நடக்கும் வழக்கமான சட்ட நடைமுறைகள் எதுவும் இந்த வாரம் முழுவதும் நடைபெறாது என்றாலும் ஜாமீன் மனு மீதான முடிவை எடுத்து விசாரணை நடத்த உத்தரவிடும் அதிகாரம் ஐகோர்ட்டு பதிவாளருக்கு உள்ளது.
ஜெயலலிதா ஜாமீன் மனுவை ஏற்றுக் கொள்ளும் பெங்களூர் ஐகோர்ட்டு பதிவாளர் இது தொடர்பான விசாரணையை இந்த வாரமே நடத்த உத்தரவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெங்களூர் ஐகோர்ட்டில் நாளையும் (செவ்வாய்க் கிழமை) 2-தேதியும் (வியாழக்கிழமை) விடுமுறை கால சிறப்பு கோர்ட்டு இயங்க உள்ளது.
எனவே ஜெயலலிதா ஜாமீன் மனு மீதான விசாரணை நாளையே எடுத்துக் கொள்ளப்பட வாய்ப்புள்ளது. இதுபற்றி அ.தி.மு.க. வக்கீல் ஒருவர் கூறுகையில், ’எங்கள் தலைவியை முதலில் ஜாமீனில் வெளியில் அழைத்து வர வேண்டும். எனவே நாளை மனு மீது விசாரணை நடக்கும் என்று காத்திருக்கிறோம் என்றார்.
இந்த நிலையில் ஜெயலலிதாவின் ஜாமீன் மனு மீதான விசாரணை நாளை பெங்களூர் ஐகோர்ட்டில் எடுத்துக் கொள்ளப்படும்போது ஜெயலலிதாவுக்காக பிரபல வக்கீல் ராம்ஜெத் மலானி ஆஜராகி வாதாடுவார் என்று தெரிகிறது. 91 வயதாகும் ராம்ஜெத்மலானி கடந்த சனிக்கிழமை வழங்கப்பட்ட ஜெயலலிதாவுக்கான தீர்ப்பு பற்றி கடுமையாக விமர்சித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. எனவே அவர் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட தண்டனையில் சுப்ரீம் கோர்ட்டின் வழிகாட்டுதல்கள் கடைபிடிக்கப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டி வாதாடுவார் என்று கூறப்படுகிறது.
மேலும் 3 விதமான அம்சங்களை ராம்ஜெத்மலானி வலியுறுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி அவரது முதல் வாதம் -சிறப்பு கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்பதாக இருக்கும். இரண்டாவது, 4 ஆண்டுகள் தண்டனை என்பதற்கு இடைக்கால தடை விதித்து ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என் பதை ராம்ஜெத்மலானி வலியுறுத்துவதாக இருக்கும்.
மூன்றாவது, ஜெயலலிதாவுக்கு ரூ. 100 கோடி அபராதம் விதித்து இருப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று ராம்ஜெத்மலானி வாதாடுவார். ராம்ஜெத்மலானி இப்படி வாதாடுவதற்கு ஏற்ப ஜெயலலிதாவின் ஜாமீன் மனு தயாரிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 4 விதமான ஜாமீன் மனுக்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சசிகலா,இளவரசி,சுதாகரன் ஆகியோர் சார்பிலும் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யபட்டு உள்ளது.
இராகு – கேதுபெயர்ச்சிபலன்கள் 2014-2015 கிளிக்செய்யவும்
Guru Peyarchi Palan 2014-2015 CLICK HERE
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
http://www.youtube.com/bhakthiplanet
http://www.youtube.com/niranjanachannel
http://www.facebook.com/bhakthiplanet
For Astrology Consultation CLICK Here