புதிய முதல் அமைச்சராக ஓ.பன்னீர் செல்வம் இன்று பிற்பகல் பதவி ஏற்கிறார்.
சென்னை,
சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா வுக்கு 4 ஆண்டு ஜெயிலும், ரூ. 100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது.
கோர்ட்டு தீர்ப்பையடுத்து முதல் – அமைச்சர் பதவியையும், எம்.எல்.ஏ. பதவியையும் ஜெயலலிதா தானாகவே இழந்தார். இதனால் அவருக் குப் பதிலாக புதிய முதல்- அமைச்சரை தேர்ந்து எடுக்கும் நிலை ஏற்பட்டது.புதிய முதல் – அமைச்சரை தேர்ந்து எடுப்பதற்காக அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அவரசக்கூட்டம் சென்னை அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நேற்று மாலை நடந்தது. இதில் சட்டமன்ற அ.தி.மு.க. கட்சித் தலைவராக ஓ.பன்னீர் செல்வம் ஒருமனதாக தேர்ந்து எடுக்கப்பட்டார்.
அதை தொடர்ந்து ஓ.பன்னீர் செல்வம் கிண்டியில் உள்ள கவர்னர் மாளிக் கைக்கு சென்று கவர்னர் ரோசைய்யாவை சந்தித்தார். அப்போது தன்னை சட்டமன்ற அ.தி.மு.க. தலைவராக தேர்ந்து எடுத்தற்கான தீர்மானத்தையும், புதிய அமைச்சரவை பட்டியலையும், ஆட்சி அமைப்பதற்கான கடிதத்தையும் கவர்னரிடம் கொடுத்தார்.
இதையடுத்து, ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர் களை பதவி ஏற்கும்படி அழைப்பு விடுத்தார். இதற் கான செய்திக்குறிப்பு கவர்னர் மாளிகையில் இருந்து நேற்று வெளியிடப்பட்டது.
ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் பதவி ஏற்கும் நேரம் உடனடியாக முடிவு செய்யப்படவில்லை.இன்று பிற்பகல் ஓ.பன்னீர் செல்வம் முதல் – அமைச்ச ராக பதவி ஏற்பார் என்று தெரிகிறது. அப்போது 31 அமைச்சர்களும் பதவி ஏற்கிறார்கள்.இன்று நல்ல நேரம் என்பது காலையிலேயே முடிந்து விட்டது. ராகு காலமும் காலை ஏழரை மணி முதல் 9 மணியோடு முடிந்து விட்டது. எமகண்டம் காலை 10.30 மணி முதல் 12 மணி வரை உள்ளது. குளிகையானது பிற்பகல் 1.30 மணிக்கு ஆரம்பித்து 3 மணி வரை உள்ளது. எனவே 12 மணி முதல் 1.30க்குள் பதவியேற்பு விழா திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இராகு – கேதுபெயர்ச்சிபலன்கள் 2014-2015 கிளிக்செய்யவும்
Guru Peyarchi Palan 2014-2015 CLICK HERE
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
http://www.youtube.com/bhakthiplanet
http://www.youtube.com/niranjanachannel
http://www.facebook.com/bhakthiplanet
For Astrology Consultation CLICK Here