ஈரான் சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் 4 பேரை மீட்க வேண்டும்: பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்
சென்னை, செப். 26–
பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்– அமைச்சர் ஜெயலலிதா இன்று ஒரு கடிதம் எழுதியுள்ளார்.
அதில் அவர் கூறி இருப்பதாவது:–
தமிழ்நாட்டைச் சேர்ந்த 4 மீனவர்கள் கடந்த 22–ந்தேதி ஈரான் கடலோர காவல் படையால் பிடித்து சிறை வைக்கப்பட்டுள்ளது பற்றி உங்கள் கவனத்துக்கு கொண்டு வர விரும்புகிறேன்.
தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் சசிகுமார் (40), அந்தோணி (29), அந்தோணி (34), ஆரோக்கியம் (30) ஆகிய 4 பேரும் ஒப்பந்த அடிப்படையில் கத்தார் நாட்டில் மீன்பிடி தொழில் செய்ய சென்று இருந்தனர். அவர்கள் 4 பேரும் கடந்த 16–ந்தேதி எந்திரப் படகில் கடலில் மீன் பிடிக்க சென்றனர்.
நடுக்கடலில் அவர்கள் 4 பேரும் மின் பிடித்து கொண்டிருந்த போது தவறுதலாக ஈரான் நாட்டின் கடல் பகுதிக்குள் சென்றுவிட்டனர். அவர்கள் 4 பேரையும் ஈரான் கடலோர காவல் படையினர் கடந்த 22–ந்தேதி கைது செய்துள்ளனர்.
தற்போது அவர்கள் 4 பேரும் ஈரான் நாட்டுக்கு சொந்தமான கிஷ் தீவில் சிறை வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் 4 பேரை நம்பித்தான் அவர்களது குடும்பமே உள்ளது.
தங்கள் வாழ்க்கையை கவுரவமாக அமைத்துக் கொள்ளும் நோக்கத்தில்தான் தமிழக மீனவர்கள் 4 பேரும் ஒப்பந்த அடிப்படையில் கத்தார் நாட்டுக்கு சென்றுள்ளனர். அவர்கள் ஈரான் நாட்டு சிறையில் நீண்ட நாட்கள் தவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டால், அது இந்தியாவில் உள்ள அவர்களது குடும்பத்தினரையும் கடுமையாக பாதிக்கும்.
எனவே இந்த விவகாரத்தில் தாங்கள் தனிப்பட்ட முறையில் தலையிட்டு, டெக்ரானில் உள்ள நமது இந்திய தூதரகத்தை நேரடியாகத் தொடர்பு கொண்டு பேசி, தமிழகத்தைச் சேர்ந்த ஏழ்மையான அப்பாவி மீனவர்கள் 4 பேரையும் உடனே விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அந்த கடிதத்தில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இராகு – கேதுபெயர்ச்சிபலன்கள் 2014-2015 கிளிக்செய்யவும்
Guru Peyarchi Palan 2014-2015 CLICK HERE
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
http://www.youtube.com/bhakthiplanet
http://www.youtube.com/niranjanachannel
http://www.facebook.com/bhakthiplanet
For Astrology Consultation CLICK Here