ஆவின் பாலில் தண்ணீர் கலப்பு: வைத்தியநாதனின் வங்கி கணக்கு முடக்கம்
சென்னை, செப். 26–
அம்பத்தூர் பால் பண்ணைக்கு விழுப்புரம் வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்படும் ஆவின் பால் லாரிகளில் பாலை திருடி விட்டு அதில் தண்ணீர் கலந்து அனுப்பிய சம்பவத்தை சி.பி.சி.ஐ.டி. போலீசார் சமீபத்தில் கண்டு பிடித்தனர்.
சென்னைக்கு வரும் ஒவ்வொரு ஆவின் பால் லாரிகளில் இருந்தும் குறிப்பிட்ட அளவு பாலை திருடிய பிறகு அதே அளவுக்கு தண்ணீர் நிரப்பிய சம்பவம் பல வருடங்களாக நடந்ததாகவும் விசாரணையில் தெரிய வந்தது.
இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்த திருவண்ணாமலை சுரேஷ், சத்தியராஜ், ரமேஷ் வேலூர், ராணிப்பேட்டை குணா, முருகன், சுரேஷ் அன்பரசன் உள்பட 8 பேரை போலீசார் கைது செய்திருந்தனர்.
பாலின் தரம் சரியாக இருப்பதாக தினமும் சான்றிதழ் அளித்த ஆவின் ஊழியர்கள் 3 பேர் இதில் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர்.
இந்த மோசடிக்கு முக்கிய காரணகர்தாவாக விளங்கிய சென்னை அசோக்நகரை சேர்ந்த முக்கிய அரசியல் பிரமுகர் வைத்தியநாதன் (44) என்பவரை கைது செய்து தற்போது போலீஸ் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.
இதில் வைத்தியநாதன் பல தகவல்களை வாக்கு மூலமாக அளித்து வருகிறார். தினமும் எவ்வளவு லிட்டர் பால் திருடப்பட்டது. அதில் எவ்வளவு தண்ணீர் கலக்கப்பட்டது என்ற விவரத்தையும் அவர் விரிவாக கூறி உள்ளார். இந்த மோசடி பணத்தில் யார் யாருக்கு எவ்வளவு லஞ்சம் பணமாக கொடுக்கப்பட்டது என்ற விவரங்களையும் தெரிவித்துள்ளார். தொடர்ந்து அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டு வருகிறது.
வைத்தியநாதன் வங்கி கணக்கில் நிறைய பணம் உள்ளதால் அந்த பணத்தை அவர் எடுக்க முடியாத அளவுக்கு போலீசார் முடக்கி வைத்துள்ளனர்.
இராகு – கேதுபெயர்ச்சிபலன்கள் 2014-2015 கிளிக்செய்யவும்
Guru Peyarchi Palan 2014-2015 CLICK HERE
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
http://www.youtube.com/bhakthiplanet
http://www.youtube.com/niranjanachannel
http://www.facebook.com/bhakthiplanet
For Astrology Consultation CLICK Here