ஸ்ரீரங்கம் கோயிலில் இருந்து திருப்பதிக்கு வஸ்திர மரியாதை
திருச்சி
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் இருந்து திருப்பதி வெங்கடாசலபதி கோயிலுக்கு ஆடி 1ம் தேதி வஸ்திர மரியாதை செய்யப்பட்டு வருகிறது. ஆடி மாதம் நாளை பிறப்பதையொட்டி, ஸ்ரீரங்கம் கோயிலில் இருந்து திருப்பதி கோயிலுக்கு எடுத்துச் செல்லப்படும் வஸ்திரங்கள், குடைகள், மங்கல பொருட்கள் அனைத்தும் பெரிய தட்டுகளில் ரங்க விலாச மண்டபத்தில் வைக்கப்பட்டு இருந்தது. இன்று காலை 7.20 மணிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு யானை மீது ஒரு தட்டை வைத்துக் கொண்டு மற்ற தட்டுகளை அதிகாரிகள், கோயில் ஊழியர்கள் எடுத்துக் கொண்டு ரங்கா கோபுரம் வழியாக ஊர்வலமாக வந்து பின்னர் திருப்பதிக்கு எடுத்துச் சென்றனர்.
கோயில் இணை ஆணையர் ஜெயராமன், மேலாளர் விஜயன், அறங்காவலர்கள் ரங்காச்சாரி, கஸ்தூரி, சுந்தர்பட்டர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். வஸ்திர மரியாதையை இன்று எடுத்து செல்லும் இவர்கள் ஆடி முதல் நாளான நாளை திருப்பதியில் அளித்து மரியாதை செய்து விட்டு பின்னர் ஸ்ரீரங்கம் திரும்புவார்கள்.
இராகு – கேதுபெயர்ச்சிபலன்கள் 2014-2015 கிளிக்செய்யவும்
Guru Peyarchi Palan 2014-2015 CLICK HERE
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
http://www.youtube.com/bhakthiplanet
http://www.youtube.com/niranjanachannel