வேட்டி கட்டியோரை அனுமதிக்காத கிளப்புகளின் அனுமதி ரத்து செய்யப்படும்: முதல்வர் ஜெயலலிதா எச்சரிக்கை!
சென்னை:
வேட்டி கட்டியவர்களை அனுமதிக்காமல் தமிழர் நாகரிகத்துக்கு எதிராக செயல்படும் மன்றங்களின் (கிளப்புகள்) அனுமதிகள் ரத்து செய்யப்படும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா கடுமையாக எச்சரித்துள்ளார்.
தமிழக சட்டசபையில் இன்று முதல்வர் ஜெயலலிதா விதி எண் 110-ன் கீழ் வேட்டி விவகாரம் குறித்து அறிக்கை ஒன்றை தாக்கல் செய்து பேசியதாவது: வேட்டி கட்டிக் கொண்டு சென்ற நீதிபதியை அனுமதிக்காத கிளப்பின் செயல் கடுமையாக கண்டிக்கத்தக்கது.
வேட்டி கட்டியவர்களை அனுமதிக்காதது தமிழர் நாகரிகத்தை அவமதிக்கும் செயல். தமிழர் நாகரிகத்தைக் கொச்சைப்படுத்தும் செயல். வேட்டி கட்டியோரை அனுமதிக்கமாட்டேன் என்று அரசியல் சட்டத்துக்கு எதிரானது. ஆங்கிலேயர் ஆட்சி அகன்று 67 ஆண்டுகளான பின்னரும் வேட்டி கட்டியோரை அனுமதிக்கமாட்டோம் என்பது வேதனைக்குரியது.
வேட்டி கட்டியவர்களை அனுமதிக்க முடியாது என்று கூறிய கிளப்புக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்படும். எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாத வகையில் கிளப்புகள் சட்டத்தில் நடப்பு கூட்டத் தொடரிலேயே திருத்தங்கள் கொண்டுவரப்படும். இந்த பிரச்சனை குறித்து சம்பந்தப்பட்ட கிளப்புக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழர் நாகரிகத்துக்கு எதிராக செயல்பட்டால் இத்தகைய கிளப்புகளின் அனுமதி ரத்து செய்யப்படும். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
இராகு – கேதுபெயர்ச்சிபலன்கள் 2014-2015 கிளிக்செய்யவும்
Guru Peyarchi Palan 2014-2015 CLICK HERE
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
http://www.youtube.com/bhakthiplanet
http://www.youtube.com/niranjanachannel