சென்னையில் விதிகளை மீறி 50 கட்டிடங்களை இடிக்க சிஎம்டிஏ நோட்டீஸ்
சென்னையில் 11 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததை அடுத்து, சென்னை மற்றும் புறநகர்களில் சிஎம்டிஏ குழு நடத்திய ஆய்வில் 50 கட்டிடங்கள் விதிகளை மீறி கட்டப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த கட்டிடங்களை ஏன் இடிக்கக் கூடாது என கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. சென்னை அருகே போரூர்-குன்றத்தூர் சாலையில் உள்ள மவுலிவாக்கத்தில் 11 மாடி கட்டிடம், ஜூன் 28ம் தேதி இடிந்து விழுந்து தரைமட்டமானது. இந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கி 61 பேர் உயிரிழந்தனர். 27 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். இந்த கட்டிட விபத்து நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை அடுத்து, சென்னை மற்றும் புறநகர்களில் தற்போது கட்டப்பட்டு வரும் அனைத்து அடிக்குமாடி கட்டிடங்களையும் ஆய்வு செய்ய சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும(சிஎம்டிஏ) அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டது.
சிஎம்டிஏ, பணி நிறைவு சான்று வழங்கியுள்ள கட்டிடங்கள், பணி நிறைவு சான்று ஆய்வு நிலையில் உள்ள கட்டிடங்கள், இந்த ஆண்டில் இதுவரை திட்ட அனுமதி வழங்கப்பட்ட கட்டிடங்கள், திட்ட அனுமதிக்கான ஆய்வு நிலையில் உள்ளவை என சுமார் 350 கட்டிடங்களை ஆய்வு செய்ய சிஎம்டிஏ முடிவு செய்தது. இதற்காக மொத்தம் 57 பேரை கொண்டு 19 குழுக்கள் அமைக்கப்பட்டன. இக்குழுவினர் கடந்த 7ம் தேதி முதல் சென்னை மற்றும் புறநகர்களில் புதிதாக கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி கட்டிடங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இது வரை 47 அடுக்குமாடி கட்டிடங்களும், 187 சிறப்பு கட்டிடங்களும் சோதனை செய்யப்பட்டன.
இதில், திட்ட அனுமதிப்படி கட்டாமல் சுமார் 50 கட்டிடங்கள் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்த 50 கட்டிடங்களின் உரிமையாளர்களுக்கும், விதிகளை மீறி கட்டப்பட்ட கட்டிடத்தை ஏன் இடிக்கக் கூடாது என்று விளக்கம் கேட்டு சிஎம்டிஏ நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதுகுறித்து சிஎம்டிஏ அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘சிஎம்டிஏ குழுவினர் நடத்திய ஆய்வில் 2 அடுக்கு மாடி கட்டிடங்கள் பெரிய அளவில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ளது. 50 கட்டிடங்கள் திட்ட அனுமதியை மீறி கட்டப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. இது குறித்து அதன் உரிமையாளர்கள் 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்கும்படி நோட்டீஸ் அனுப்பபட்டுள்ளது. விதிமீறல்கள் சரி செய்யப்படாத பட்சத்தில் அவற்றுக்கு சீல் வைத்து இடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இராகு – கேதுபெயர்ச்சிபலன்கள் 2014-2015 கிளிக்செய்யவும்
Guru Peyarchi Palan 2014-2015 CLICK HERE
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
http://www.youtube.com/bhakthiplanet
http://www.youtube.com/niranjanachannel