Monday 23rd December 2024

தலைப்புச் செய்தி :

இராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2014-2015

rahu ketu peyarchiSri Durga Devi upasakar, V.G.Krishnarau.Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. Phone Number: 98411 64648, Chennai

12.07.2014 அன்று சனிக்கிழமை திருக்கணித பஞ்சாங்க படி இராகு-கேது பெயர்ச்சி ஆகிறது. ஜோதிட ரீதியான ஒன்பது கிரகங்களில் ஏழு கிரகங்கள் முன் நோக்கி நகர்கிற தன்மை கொண்டவை. ஆனால் இந்த இராகு-கேது மட்டும் பின்னோக்கி நகர்கிற கிரகங்கள் ஆகும். அதன்படி, துலா இராசியில் இருக்கும் இராகு, கன்னி இராசிக்கும், மேஷத்தில் இருக்கும் கேது, மீன இராசிக்கும் பெயர்ச்சி ஆகிறது.

வாக்கிய பஞ்சாங்கம், திருக்கணித பஞ்சாங்கம் என பஞ்சாங்கங்கள் மாறுபட்டு இருந்தாலும், நமது ஜாதகங்கள் பெரும்பாலும் கணிக்கப்படுவது திருக்கணித பஞ்சாங்க முறைப்படியே. அவ்வகையில், வாக்கிய பஞ்சாங்கப்படி 21.06.2014 அன்று இராகு-கேது பெயர்ச்சி ஆனது. திருக்கணித பஞ்சாங்கப்படி இராகு-கேது 12.07.2014 அன்று பெயர்ச்சி ஆகிறது.

இராகு, கொடுத்து கெடுப்பான் – கேது, கெடுத்து கொடுப்பான் என்பது ஜோதிட விதி. அதாவது – ஒருவருக்கு இராகு திசை நடக்கிற காலத்தில் ஆரம்பத்தில் நல்லவற்றை தந்து வரும் இராகு பகவான், தனது திசை முடிகிற தருவாயில் அதுவரையில் தந்ததை பறித்து செல்வான். அதுபோல – ஒருவருக்கு கேது திசை நடக்கிற காலத்தில் அந்த நபரை பல துன்பத்தில் மூழ்க வைக்கும் கேது பகவான், தனது திசை முடிகிற தருவாயில், அதுவரையில் தந்த துன்பங்களை அனுபவ பாடமாக்கி முன்னேற்றத்திற்கு வழிகாட்டிவிட்டு செல்வார். அதனால்தான், “இராகு, கொடுத்து கெடுப்பான் – கேது, கெடுத்து கொடுப்பான்” என்கிறது ஜோதிடகலை.

இராகு – கேது பெயர்ச்சி அன்று, துர்க்கை அம்மனையும் விநாயகரையும் வணங்க வேண்டும். உளுந்து வடையை தானம் செய்யலாம். அத்துடன் உளுந்து, கொள்ளு பறவைகளுக்கு வைக்க வேண்டும். இராகு – கேது பகவானுக்கு உகந்த காயத்ரி மந்திரத்தை 9 முறை ஜெபிக்க வேண்டும்.

ஸ்ரீ இராகு காயத்ரி மந்திரம்

ஓம் நாக த்வஜாய வித்மஹே: பத்ம ஹஸ்தாய தீமஹி
தந்நோ ராகு ப்ரசோதயாத்.

ஸ்ரீ கேது காயத்ரி மந்திரம்

ஓம் அச் வ த்வஜாய வித்மஹே சூ ல ஹஸ்தாய தீமஹி
தந்நோ கேது ப்ரசோதயாத்.

நம்பிக்கையுடன் இந்த பரிகாரங்களையும், கிரகங்களுக்குரிய காயத்ரி மந்திரங்களையும் நம்பிக்கையுடன் உச்சரித்து வந்தால், காயத்ரி தேவியின் ஆசியாலும் ராகு – கேது பகவானின் அருளாலும் நன்மைகள் கிடைக்கும்.!

இந்த இராகு-கேது பெயர்ச்சி ஆகும் பொழுது, 12 இராசிகாரர்களுக்கும் எவ்வகையான பலன்களை தந்திடும் என்பதையும், யாருக்கு சாதனை செய்யும்? யாருக்கு வேதனை செய்யும்? என்பதையும் பார்ப்போம்.

meshamமேஷ இராசி அன்பர்களே…. உங்கள் இராசிக்கு 12-ம் இடத்தில் கேது பகவான், புதன் சாரத்தில் அமரப்போகிறார். கேது பகவானை, குரு பார்வை செய்வதால், இனி உங்களுக்கு பொற்காலமே. இராசிக்கு 3-6-க்குரிய புதனின் சாரத்தில் அமர்வதால், தொட்டது துலங்கும். கடன் பிரச்னைகள், வழக்குகள் ஒழிந்தோடும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும். இராகு பகவான், உங்கள் இராசிக்கு 6-ம் இடத்தில் செவ்வாய் சாரத்தில், அதாவது 1-8-க்குரிய சாரத்தில் அமர்வதால், திடீர் பண வரவை அடைவீர்கள். இராகு, செவ்வாயின் சாரத்தில் அமர்வதால் வீடு, மனை வாங்கும் யோகம் உண்டு. உடல்நலனில் மட்டும் சற்று கவனம் தேவை. பொருளாதார வசதியை பெருவீர்கள்.

rishabamரிஷப இராசி அன்பர்களே… உங்கள் இராசிக்கு 11-ல் கேது பகவான் புதன் சாரத்தில் அதாவது, 2-5-க்குரிய சாரத்தில் அமர்வதால், வாக்கு வன்மை உண்டாகும். குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் தீரும். திருமணம் கைக்கூடி வரும். பூர்வீக சொத்துக்களில் வழக்குகள் இருப்பின் வெற்றி கிடைக்கும். இராசிக்கு 5-ம் இடத்தில் செவ்வாய் சாரத்தில், அதாவது 7-12-க்குரிய சாரத்தில் அமரும் இராகு பகவான், வெளிநாட்டில் வேலை வாய்ப்பை வழங்குவார். முன் கோபத்தை உண்டாக்குவதால் பொறுமை தேவை. நண்பர்களால் ஆதாயம் உண்டு. தொழில்துறை மேன்மை பெறும். குழந்தை பாக்கியம் உண்டாகும். உயர் பதவி கிட்டும்.

mithunamமிதுன இராசி அன்பர்களே… உங்கள் இராசிக்கு 10-ம் இடத்திற்கு கேது பகவான், புதன் சாரத்தில், அதாவது 1-4-க்குரியவர் சாரத்தில் அமர போகிறார். 10-ல் கேது, குருவின் பார்வை பெற்றதால், படுத்த தொழில் நிமிர்ந்து எழும். நல்ல வேலை வாய்ப்புகளுக்காக அலைந்தவர்களுக்கு வேலை வாய்ப்பு தேடி வரும். பண வரவு தாராளமாக கிடைக்கும். 4-ம் இடத்தில் இராகு, செவ்வாயின் சாரத்தில் அதாவது, 6-11-க்குரியவர் சாரத்தில் அமர்வதால், சற்று வாகனங்களை நிதானமாக ஓட்டவும். மனை, வீடு வாங்கும் விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை. பிறரின் ஜாமீன் விஷயத்தில் தலையிடுவதிலும் எச்சரிக்கையாக இருக்கவும்.

kadagamகடக இராசி அன்பர்களே… உங்கள் இராசிக்கு 9-ம் இடத்திற்கு கேது பகவான், புதன் சாரத்தில் அதாவது, 3-12-க்குரியவர் சாரத்தில் அமரப் போகிறார். கேது பகவான், குரு பார்வை பெறுவதால், விரயங்கள் தவிர்க்க போகிறார். சொத்து-சுகங்களை அள்ளி தரப் போகிறார். உங்கள் தைரியத்தால், எதையும் வெற்றிக் கொள்வீர்கள். 3-ம் இடத்தில் இராகு பகவான், செவ்வாயின் சாரத்தில் அதாவது 5-10-க்குரிய சாரத்தில் அமர்வதால், கடன் பிரச்னைகள் தீரும். தொழில்துறை முன்னேற்றம் பெறும். அரசாங்க ஆதரவு கிடைக்கும். நன்மைகள் நாடி வரும். ஷேர் மார்கெட்டில் சிலர் லாபம் அடைவார்கள். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடக்கும்.

Simamசிம்ம இராசி அன்பர்களே… உங்கள் இராசிக்கு கேது பகவான், 8-ல் அமரப் போகிறார். அஷ்டம கேது அள்ளி தர இருக்கிறார். அதாவது, 2-11-க்குரிய புதன் சாரத்தில் அமர்ந்து, குரு பார்வை பெற்றதால், இதுவரையில் கிள்ளி கொடுத்த கேது, இன்பமான வாழ்க்கையை அள்ளிக் கொடுக்கப் போகிறார். இராசிக்கு 2-ல் அமரும் இராகு, 4-9-க்குரிய செவ்வாய் சாரத்தில் அமரப் போவதால் பரபரப்பு அடைவதை விடுங்கள். முன் கோபத்தையும் விடுங்கள். பொறுமையை கையாளுங்கள். தன இராகு, திருமணம் நடத்தி வைப்பார். மற்றவர்களால் புகழச் செய்வார். வழக்கு பிரச்னை தீரும். செல்வாக்கோடு வாழ்வீர்கள்.

kanniகன்னி இராசி அன்பர்களே… கேது பகவான் உங்கள் இராசிக்கு 7-ல் அமரப் போகிறார். 1-10-க்குரிய புதன் சாரத்தில் அமர்ந்து, குரு பார்வை பெறுவதால் இடப் பெயர்ச்சி உண்டாக்குவார். வேலையில் இட மாற்றம், உயர் பதவி உண்டு. நோய்நொடிகள் அகலும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடக்கும். கடன் பிரச்சனை சற்று தீரும். ஜென்ம இராகு, 3-8-க்குரிய செவ்வாய் சாரத்தில் அமர்வதால் பயணங்கள் அதிகரிக்கும். செலவும் அதிகரிக்கும். கல்வி தடையில்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். குடும்பத்தில் சச்சரவு வருவதை உங்கள் பேச்சால் தடுக்க பாருங்கள். மௌனம் சிறந்தது. எதிர்பாரா நன்மைகள் நாடி வரும்.

Thulamதுலா இராசி அன்பர்களே… கேது பகவான், உங்கள் இராசிக்கு 6-ம் இடத்தில் அமரப் போகிறார். 9-12-க்குரிய புதன் சாரத்தில் அமர்ந்து, குரு பார்வை பெறுவதால், வேலை பளு அதிகமாகும். உழைப்பு அதிகம் கொடுக்கும். மேலதிகாரியிடம் கவனம் தேவை. உடல்நலனில் அக்கறை செலுத்தவும். உங்கள் இராசிக்கு 12-ம் இடத்தில் அமரும் இராகு, 2-7-க்குரிய செவ்வாயின் சாரத்தில் இருப்பதால், பண வரவு உண்டு. திருமண நிகழ்ச்சி நடைப்பெறும். மனைவியால் ஆதாயம் கிடைக்கும். தூர பயணம் உண்டு. சிலர் வெளிநாட்டில் வேலையில் அமரும் யோகத்தை பெறுவர். 12-ம் இடத்தில் உள்ள இராகு, யோகத்தை வாரி வழங்குவார்.

viruchigamவிருச்சிக இராசி அன்பர்களே… உங்கள் இராசிக்கு 5-ம் இடத்தில் உள்ள கேது, 8-11-க்குரிய புதனின் சாரத்தில் அமரப் போகிறார். குருவின் பார்வையும் பெறுவதால், பஞ்சம கேது, எதிர்பாரா யோகத்தை அள்ளி கொடுப்பார். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள், வேலை வாய்ப்பு, தொழில் துறையில் லாபம் போன்றவற்றை கொடுப்பார். 11-ல் அமரும் இராகு லாபத்தில் இருந்தாலும், 1-6-க்குரிய செவ்வாயின் சாரத்தில் இருப்பதால், கடன்கள் உருவாக செய்வார். உடல்நலனிலும் கவனம் தேவை. விரோதங்களை விட்டுவிடுங்கள். நிதானமே பிரதானம். வாகன பயணத்தில் பொறுமையாக செல்லவும்.

Thanusuதனுசு இராசி அன்பர்களே… உங்கள் இராசிக்கு கேது பகவான், 4-ம் இடத்தில் அமரப் போகிறார். 7-10-க்குரிய புதனின் சாரத்தில் அமர்ந்து, குரு பார்வை பெறுவதால், திருமண தடை நீங்கும். வீடு, மனை அமையும். உயர் கல்வி உண்டாகும். உறவினர் வருகை அதிகரிக்கும். 10-ம் இடத்தில் அமரும் இராகு, 5-12-க்குரிய செவ்வாயின் சாரத்தில் அமர்வதால், பிள்ளைகள் விஷயத்தில் செலவு அதிகரிக்கும். பயணங்களும் அதிகமாக இருக்கும். தொழிலிதுறையில் செலவுகள் தரும். உத்தியோகத்தில் அலைச்சல் ஏற்படுத்தும். இருப்பினும் கஷ்டத்திற்கு ஏற்ப பலனையும் பெறுவீர்கள். வெளிநாட்டவரால் ஆதாயம் அடைவீர்கள்.

makaramமகர இராசி அன்பர்களே… உங்கள் இராசிக்கு 3-ம் இடத்தில் கேது அமர்ந்து, 6-9-க்குரிய புதனின் சாரத்தை அடைந்து, குருவின் பார்வையும் பெறுகிறார். நீங்கள் தொட்டது துலங்கும். கடன், வழக்குகள் காற்றில் பறந்துவிடும். சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டு. பூர்வீக சொத்து சிலருக்கு கிடைக்கும். பண வரவு தேடி வரும். 9-ம் இடத்தில் அமரும் இராகு, 4-11-க்குரிய செவ்வாயின் சாரத்தை பெறுவதால், கல்வியில் தடை ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். தொழில்-உத்தியோகத்தில் நிதானமாக பலன் கிடைக்கும். சிலருக்கு வெளிநாட்டில் வேலை அமைய சாதமான நேரம் உண்டாக்கும்.

kumbamகும்ப இராசி அன்பர்களே… உங்கள் இராசிக்கு 2-ம் இடத்தில் கேது பகவான் அமர்ந்து, 5-8-க்குரிய புதனின் சாரத்தை அடைந்து, குருவின் பார்வை பெறுவதால், உங்கள் சொல்லுக்கு மதிப்பு கிடைக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் தீரும். சுபநிகழ்ச்சிகள் நடக்கும். கஷ்டங்கள் அத்தனையும் மறையும். 8-ம் இடத்தில் அமரும் இராகு, 3-10-க்குரிய செவ்வாயின் சாரத்தை பெறுவதால், நண்பர்களின் உதவி தேடி வரும். வேலை வாய்ப்பு கதவை தட்டும். முடங்கிய தொழில் முன்னேற்றம் அடையும். பல நாட்களாக நிம்மதியை பாதித்த வழக்குகள் முடிவுக்கு வரும். பண வரவு நன்கு அமையும்.

Meenamமீன இராசி அன்பர்களே… உங்கள் இராசிக்கு ஜென்மத்தில் அதாவது, உங்கள் இராசியிலேயே கேது பகவான் அமர்ந்து, 4-7-க்குரிய புதனின் சாரத்தை பெற்று, குருவின் பார்வையையும் பெறுவதால், மண்ணை தொட்டாலும் பொன்னாகும் நேரம். மனக்கவலை தீரும். நோய்நொடிகள் பறந்தோடும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடைப்பெறும். உறவினர் வருகை அதிகரிக்கும். 7-ம் இடத்தில் அமரும் இராகு, 2-9-க்குரிய செவ்வாய் சாரத்தை அடைவதால் வேலை வாய்ப்பும், சொந்த தொழிலும் சிறப்பாக இருக்கும். சிலருக்கு உயர் பதவி கிடைக்கும். துன்பங்கள் நீங்கி இன்பங்களை அள்ளி தந்து, வளமான வாழ்க்கை அமையச் செய்யும் இந்த இராகு-கேது பெயர்ச்சி.!

for Rahu-Ketu Peyarchi ENGLISH VERSION click here

ASTROLOGY ARTICLES more…

RASI PALAN more…

VAASTU ARTICLES more…

SPIRITUAL ARTICLES more…

மேலும் ஜோதிட கட்டுரைகள் படிக்கவும்…

மேலும் இராசி பலன்கள் படிக்கவும்…

மேலும் வாஸ்து கட்டுரைகள் படிக்கவும்…

மேலும் ஆன்மிக கட்டுரைகள் படிக்கவும்…

ஜோதிட ஆலோசனைக்கு இங்கே பார்க்கவும்…

For ASTROLOGY CONSULTATION click here..

Send your feedback to: editor@bhakthiplanet.com

For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India

http://www.youtube.com/bhakthiplanet

http://www.facebook.com/bhakthiplanet

For Astrology Consultation CLICK Here

Donate© 2014 bhakthiplanet.com  All Rights Reserved

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »