Wednesday 22nd January 2025

தலைப்புச் செய்தி :

Archive for: May, 2014

மதுரா பாராளுமன்ற தொகுதியில் நடிகை ஹேமமாலினி வெற்றி நடிகைகள் நக்மா, ஜெயப்பிரதா, தோல்வியை தழுவினார்கள்

புதுடெல்லி, மதுரா பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட நடிகை ஹேமமாலினி வெற்றி பெற்றார். பிஜ்னோர் தொகுதியில் நடிகை ஜெயப்பிரதாவும், மீரட் தொகுதியில் நடிகை நக்மாவும் தோல்வி அடைந்தனர். நடிகர்–நடிகைகள் போட்டி எந்த தேர்தலிலும் இல்லாத அளவுக்கு இந்த பாராளுமன்ற தேர்தலில் வட மாநிலங்களில் அதிக அளவில் சினிமா நட்சத்திரங்கள் பல்வேறு கட்சிகளின் சார்பில் போட்டியிட்டனர். அவர்களில் பலர் வெற்றி பெற்றனர். சிலர் தோல்வியை தழுவினார்கள். உத்தரபிரதேச மாநிலம் மதுரா தொகுதியில் பாரதீய ஜனதா சார்பில் போட்டியிட்ட நடிகை ஹேமமாலினி […]

வரும் 21-ம் தேதி மோடி பிரதமராக பதவி ஏற்கிறார்

புதுடெல்லி, மே.17 – நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா அமோக  வெற்றிபெற்று ஆட்சியை பிடித்துள்ளது. நரேந்திர மோடி வருகின்ற 21-ம் தேதி பிரதமராக பதவி ஏற்கிறார். மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சியில் ஊழல் மலிந்துவிட்டதால் மக்கள் வெறுப்படைந்தனர். இதனால் மாற்றத்தை விரும்பும் மக்களின் எண்ணத்தை புரிந்துகொண்ட பாரதிய ஜனதா நரேந்திர மோடிக்கு முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கியது. கோவா மாநிலத்தின் தலைநகர் பனாஜியில் நடந்த பாரதிய ஆட்சிமன்றக்குழுக்கூட்டத்தில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பாரதிய […]

இந்தியாவின் புதிய பிரதமராக பதவியேற்க உள்ள நரேந்திர மோடிக்கு, தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து

சென்னை, இந்தியாவில் பிரதமர் பதவியேற்க இருக்கும் நரேந்திர மோடிக்கு தமிழகத்தை சேர்ந்த அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். விஜயகாந்த் நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்து தே.மு.தி.க.தலைவர் விஜயகாந்த் அனுப்பி உள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:– தே.மு.தி.க.அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி இந்தியாவின் பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க போகிறது. இதற்காக எனது இதயங்கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இந்தியாவில் உள்ள ஏழை–எளிய மக்களின் தேவைகள் நிறைவேறவும், குஜராத்தை போன்று ஊழலற்ற, […]

மோடி-ஜெயலலிதாவுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து

பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ள நரேந்திரமோடி மற்றும் தமிழகத்தில் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ள முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆகியோருக்கு நடிகர் ரஜினிகாந்த் டுவிட்டரில் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். இதில் அவர் கூறி இருப்பதாவது: சரித்திர புகழ்வாய்ந்த வெற்றிக்காக நரேந்திரமோடி ஜி, உங்களுக்கு என் இதயபூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மகத்தான வெற்றி பெற்ற தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு ரஜினிகாந்த் கூறி உள்ளார். ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்  வாஸ்து […]

பிரதமர் பதவியை இன்று ராஜினாமா செய்கிறார், மன்மோகன் சிங்

புதுடெல்லி, மே 17- பிரதமர் மன்மோகன் சிங் தனது பதவியை இன்று ராஜினாமா செய்கிறார். இன்று பிற்பகல் 12.45 மணிக்கு ஜனாதிபதி மாளிகைக்கு செல்லும் அவர், பிரணாப் முகர்ஜியிடம் தனது ராஜினாமா கடிதத்தை ஒப்படைக்கிறார். முன்னதாக, மத்திய மந்திரிசபையின் கடைசி சம்பிரதாய கூட்டத்தை கூட்டும் மன்மோகன் சிங், ராஜினாமாவுக்குப் பின்னர், நாட்டு மக்களிடையே உரையாற்றுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் வழங்கியப் பிறகு தனது அதிகாரப்பூர்வ அரசு இல்லத்தை மன்மோகன் சிங் காலி செய்வார் என்றும் […]

தேர்தல் முடிவு மக்களுக்கு மகிழ்ச்சி என்றால் எங்களுக்கும் மகிழ்ச்சிதான்: மு.க.ஸ்டாலின்

நாடாளுமன்றத்தேர்தலில் தமிழகத்தில் அதிமுக 37 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. தற்போதைய நிலவரப்படி திமுக ஒரு தொகுதிகளில் கூட முன்னிலை பெறவில்லை. இந்த நிலையில், தோல்வி குறித்து திமுக பொருளாளர் ஸ்டாலின் கூறியபோது, திமுக ஒரு போதும் தோல்வி கண்டு துவளாது. தேர்தல் முடிவு மக்களுக்கு மகிழ்ச்சி என்றால் எங்களுக்கும் மகிழ்ச்சிதான்.மேலும் நாட்டின் பிரதமாரக பதவியேற்கவுள்ள மோடிக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்று தெரிவித்தார். ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்  வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்  […]

பிரதமராகும் மோடிக்கு தொலைபேசியில் ஒபாமா வாழ்த்து

வாஷிங்டன், மே 17- 16-வது பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. அபார வெற்றி பெற்றதையடுத்து, நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்பது உறுதியாகிவிட்ட நிலையில் அமெரிக்க அதிபர் ஒபாமா, மோடிக்கு தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த தொலைபேசி உரையாடலின்போது, உலக பொருளாதார நிலையை மேம்படுத்துவது தொடர்பாக இந்தியா – அமெரிக்கா ஆற்றவுள்ள பங்களிப்பு குறித்து இரு தலைவர்களும் விவாதித்ததாக தெரிகிறது. உலகின் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் வாக்காளர்கள் வழங்கியுள்ள வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்புக்கு பாராட்டு […]

37 தொகுதிகளை கைப்பற்றிய அ.தி.மு.க.வின் வரலாற்று சாதனை சென்னை, மே 17-

தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 பாராளுமன்ற தொகுதிகளில் போட்டியிட்ட அ.தி.மு.க. 37 தொகுதிகளில் வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்தது. இந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் உள்ள 39 பாராளுமன்ற தொகுதிகளிலும், புதுச்சேரி பாராளுமன்ற தொகுதியிலும் அ.தி.மு.க. தனித்து போட்டியிட்டது. எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்காமல் அ.தி.மு.க. துணிச்சலுடன் தனித்து களம் இறங்கியது முதல்-அமைச்சர் ஜெயலலிதா மாநிலம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து, அ.தி.மு.க. அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்களை சொல்லி மக்களிடம் வாக்கு கேட்டார். அவரது […]

மோடிக்கு சிகப்புக் கம்பளம் விரிக்க தயாராகும் அமெரிக்காவின் வெள்ளை மாளிகை

வாஷிங்டன், மே 17- 2002-ம் ஆண்டு குஜராத்தில் நடைபெற்ற கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவம் மற்றும் அதன் எதிரொலியான கலவரங்களை மனித உரிமை மீறல் என்று குற்றம்சாட்டிய அமெரிக்கா, கடந்த 2005-ம் ஆண்டு அந்நாட்டிடம் விசா கேட்டு விண்ணப்பிப்பவர்களின் கறுப்புப் பட்டியலில் மோடியின் பெயரை இணைத்து அறிவிப்பு வெளியிட்டது. இதன்பிறகு, பல சந்தர்ப்பங்களில் மோடிக்கு அமெரிக்க விசா வழங்குவது தொடர்பாக பட்டும்படாமல் பேசி வந்த வெள்ளை மாளிகை அதிகாரிகள், ‘விசா கேட்டு மோடி விண்ணப்பித்தால், ஏனைய விண்ணப்பங்களைப் […]

குருப்பெயர்ச்சி பரிகாரம் (குருவே சரணம்)

குருப்பெயர்ச்சி பரிகாரம் (குருவே சரணம்) | GURU PEYARCHI PARIHARAM (GURUVE SARANAM) Visit: www.youtube.com/niranjanachannel

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2025. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »