விவாகரத்தான மனைவிக்கு ரூ.2700 கோடி ஜீவனாம்சம்
ஜெனீவா, மே 21-
உலகின் பெரும் செல்வந்தர்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ள ரஷ்யாவை சேர்ந்த பிரபல கோடீஸ்வரர் ஒருவர் தனது மனைவியை விவாகரத்து செய்ய 4.5 பில்லியன் அமெரிக்க டாலர்களை ஜீவனாம்சமாக தர வேண்டும் என்று சுவிட்ஸர்லாந்து நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யாவின் பிரபல கோடீஸ்வரர் ஆலிகாச் ட்மிட்ரி ரைபோலோவ்லேவ். இவர் 8.8 பில்லியன் (ஒரு பில்லியன் என்பது நூறு கோடி) அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள சொத்துகளுக்கு சொந்தக்காரர் என்று ‘ஃபோர்ப்ஸ்’ பத்திரிகை இந்த ஆண்டு அறிவித்துள்ளது.
ரஷ்யாவில் பிரபல உர தொழிற்சாலை உள்பட பல்வேறு தொழில்களை நடத்தி வந்த இவர், மோனாக்கோ கால்பந்து கிளப்பின் தலைவராகவும் உள்ளார். இவரிடம் இருந்து விவாகரத்தும், ஜீவனாம்சமும் கேட்டு சுவிட்சர்லாந்தை சேர்ந்த இவரது மனைவி ஜெனீவா கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
சுமார் ஆறாண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி, ஆலிகாச் ட்மிட்ரி ரைபோலோவ்லேவ்-வின் சொத்து மதிப்பை கருத்தில் கொண்டு, விவாகரத்து செய்யும் முன்னாள் மனைவிக்கு 4.5 பில்லியன் அமெரிக்க டாலர்களை அவர் ஜீவனாம்சமாக தர வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
உலக விவாகரத்து வழக்குகளைப் பொருத்த வரையில், இதுவரை விதிக்கப்படாத மிகப் பெரிய ஜீவனாம்சம் என்று கருதப்படும் இந்த தொகையை தந்து விட்டால், ஆலிகாச் ட்மிட்ரி ரைபோலோவ்லேவ்-வின் சொத்தில் பாதி கரைந்து விடும். எனவே, ஜெனிவா கோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதாக அவரது வக்கீல்கள் தெரிவித்துள்ளனர்.
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
http://www.youtube.com/bhakthiplanet
http://www.youtube.com/niranjanachannel