வாரணாசி, வதோதரா இரு தொகுதிகளிலும் நரேந்திர மோடி அமோக வெற்றி வதோதராவில் ஓட்டு வித்தியாசம் 5½ லட்சம்
வாரணாசி,
தான் போட்டியிட்ட வாரணாசி, வதோதரா ஆகிய இரு பாராளுமன்ற தொகுதிகளிலும் நரேந்திர மோடி அமோக வெற்றி பெற்றார். வதோதரா தொகுதியில் அவர் சுமார் 5¾ லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடினார்.
5¾ லட்சம் வாக்கு வித்தியாசம்
பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, தனது சொந்த மாநிலமான குஜராத்தில் உள்ள வதோதரா பாராளுமன்ற தொகுதியிலும், உத்தரபிரதேசத்தில் உள்ள வாரணாசி பாராளுமன்ற தொகுதியிலும் போட்டியிட்டார்.
இந்த இரு தொகுதிகளிலும் அவர் அமோக வெற்றி பெற்றார்.
இதில் வதோதரா தொகுதியிலும் மோடி மிகப்பெரிய வெற்றியை பெற்றார். இந்த தொகுதியில் அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் மதுசூதன் மிஸ்திரியை 5 லட்சத்து 70 ஆயிரத்து 128 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இந்த தொகுதியில் பதிவான 11 லட்சத்து 63 ஆயிரம் வாக்குகளில் மோடி 8 லட்சத்து 45 ஆயிரத்து 464 வாக்குகளை பெற்றார். மதுசூதன் மிஸ்திரிக்கு 2 லட்சத்து 75 ஆயிரத்து 336 வாக்குகள் கிடைத்தன. ஆம் ஆத்மி வேட்பாளர் சுனில் குல்கர்னி உள்பட 6 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர்.இந்த தொகுதியில் நோட்டாவில் 18 ஆயிரத்து 53 வாக்குகள் பதிவாகி இருந்தன.
வாரணாசியில் கெஜ்ரிவாலுக்கு 3–வது இடம்
வாரணாசி தொகுதியில் நரேந்திர மோடி, ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், காங்கிரஸ் சார்பில் அஜய் ராய் உள்பட மொத்தம் 42 பேர் போட்டியிட்டனர். இந்தியாவிலேயே அதிக வேட்பாளர்கள் போட்டியிட்ட இரு தொகுதிகளில் வாரணாசியும் ஒன்று. இதேபோல் 42 வேட்பாளர்கள் போட்டியிட்ட மற்றொரு தொகுதி தென் சென்னை.வாரணாசி தொகுதியில் மோடிக்கு கெஜ்ரிவால் கடும் போட்டியை ஏற்படுத்துவார் என்று கருதப்பட்டது. ஆனால் கெஜ்ரிவால் ஒரு பொருட்டே அல்ல என்றும், மோடி மகத்தான வெற்றி பெறுவார் என்றும் பாரதீய ஜனதா கட்சியினர் கூறினார்கள். மேலும் கருத்து கணிப்புகளும் மோடியின் வெற்றியை உறுதி செய்தன.
எனவே எதிர்பார்த்தது போலவே வாரணாசி தொகுதியில் மோடி அமோக வெற்றி பெற்றார். காங்கிரஸ் வேட்பாளர் மதுசூதன் மிஸ்திரியை விட 85 ஆயிரத்து 285 வாக்குகள் அதிகம் பெற்று அவர் வெற்றிவாகை சூடினார். அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 3–வது இடமே கிடைத்தது.
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
http://www.youtube.com/bhakthiplanet
http://www.youtube.com/niranjanachannel