பிரதமரின் ‘டுவிட்டர்’ கணக்கு மூடல்: பாரதீய ஜனதா கொதிப்பு
புதுடெல்லி, மே 21-
பிரதமர் அலுவலகத்துக்கு என்று ‘டுவிட்டர்’ சமூக வலைத்தள கணக்கு உண்டு. இதை 14 லட்சம் பேர் பின்பற்றி வந்தனர். இப்போது பிரதமர் மன்மோகன் சிங் பதவி விலகி, புதிய பிரதமராக நரேந்திர மோடி பதவி ஏற்க உள்ளார். இந்த நிலையில், பிரதமர் அலுவலக ‘டுவிட்டர்’ கணக்கு அப்படியே தொடர்ந்திருக்க வேண்டும்.
ஆனால் பிரதமர் அலுவலக ‘டுவிட்டர்’ கணக்கை, தேர்தல் முடிவுகள் வெளிவந்த உடனேயே மூடி, (தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின்கீழ்) ஆவணக் காப்பகமாக மாற்றி விட்டனர்.
இதன் காரணமாக புதிய பிரதமராக நரேந்திரமோடி பதவி ஏற்கிற நிலையில், பிரதமர் அலுவலகத்துக்கு புதிய ‘டுவிட்டர்’ கணக்கு தொடங்க வேண்டியதாகி விட்டது. இப்படி பிரதமர் அலுவலக ‘டுவிட்டர்’ கணக்கை மூடி, அதை ஆவண காப்பகமாக மாற்றிவிட்டு, புதிதாக கணக்கு தொடங்க இருப்பதற்கு பாரதீய ஜனதா செய்தி தொடர்பாளர் நிர்மலா சீத்தாராமன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
தனிப்பட்ட முறையில் நரேந்திர மோடியின் ‘டுவிட்டர்’ கணக்கை 42 லட்சம் பேர் பின்பற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
http://www.youtube.com/bhakthiplanet
http://www.youtube.com/niranjanachannel