Monday 23rd December 2024

தலைப்புச் செய்தி :

‘ஆம் ஆத்மி’ கட்சியின் வீழ்ச்சி

‘ஊழல் ஒழிப்பு’ என்ற கோஷத்தை முக்கியமாக வைத்து தொடங்கப்பட்ட அரசியல் கட்சி, ‘ஆம் ஆத்மி’. அதன் அமைப்பாளரான அரவிந்த் கெஜ்ரிவால், மத்திய அரசு அதிகாரியாக பணியாற்றியவர்.

 அவர் சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேவுடன் இணைந்து, ஊழல் ஒழிப்புக்கான ‘ஜன லோக்பால்’ மசோதாவுக்காக குரல் எழுப்பி வந்தார். அதுதொடர்பாக நடைபெற்ற போராட்டங்களிலும் தன்னை ஈடுபடுத்தி கொண்டார்.

டெல்லி–முதல்–மந்திரி

அன்னா ஹசாரே, சமூக இயக்கமாகவே தனது இயக்கத்தை நடத்தி செல்ல விரும்பினார். அரவிந்த் கெஜ்ரிவாலுக்கோ தேர்தல் அரசியலில் ஈடுபடும் ஆசை ஏற்பட்டது. அதனால் அவர் ‘ஆம் ஆத்மி’ என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். அவரது எளிமையும், போராட்ட நடவடிக்கைகளும் டெல்லி மக்களை கவர்ந்தன.

காங்கிரஸ், பா.ஜனதாவுக்கு மாற்று கட்சி தேவை என்ற எண்ணம் கொண்டவர்களின் தேர்வாக ‘ஆம் ஆத்மி’ அமைந்தது. அதனால், டெல்லி சட்டசபை தேர்தலில் இரண்டாவது பெரிய கட்சி என்ற அந்தஸ்தை டெல்லி மக்கள் ‘ஆம் ஆத்மி’க்கு அளித்தனர். முதல்–மந்திரியாக இருந்த ஷீலா தீட்சித்தை அரவிந்த் கெஜ்ரிவால் தோற்கடித்தார்.காங்கிரஸ் கட்சி ஆதரவுடன், அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி முதல்–மந்திரியாக பதவி ஏற்றார். குடிநீர் வினியோகம் உள்ளிட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றினார்.

பதவி விலகினார்

ஆனால், ‘ஜன லோக்பால்’ மசோதாவை டெல்லி சட்டசபையில் நிறைவேற்றுவதற்கு காங்கிரசும், பா.ஜனதாவும் ஒத்துழைக்கவில்லை என்று குற்றம் சாட்டி, இரண்டு மாதங்களுக்குள்ளேயே அவர் முதல்–மந்திரி பதவியில் இருந்து விலகினார்.

டெல்லி சட்டசபை தேர்தலில் கிடைத்த ஆதரவால் ஊக்கம் அடைந்த அரவிந்த் கெஜ்ரிவால், பாராளுமன்ற தேர்தலில் நாடு முழுவதும் கால் பதிக்க ஆசைப்பட்டார். அதன்படி, 400–க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தினார். பா.ஜனதாவின் பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடி போட்டியிட்ட வாரணாசி தொகுதியில் அவரை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் களம் இறங்கினார்.

படுதோல்வி

ஆனால், நேற்று வெளியான தேர்தல் முடிவுகள், ‘ஆம் ஆத்மி’ கட்சியின் வீழ்ச்சியை எடுத்து காட்டுவதாக அமைந்தன. 400 தொகுதிகளுக்கு மேல் போட்டியிட்ட அக்கட்சி, 4 தொகுதிகளில் மட்டுமே, அதுவும் பஞ்சாப் மாநிலத்தில்தான், வெற்றி பெற்றது. டெல்லியில் ஒரு தொகுதியைக் கூட கைப்பற்றவில்லை. வாரணாசி தொகுதியில் மோடியிடம் அரவிந்த் கெஜ்ரிவால் தோற்றுப்போனார்.

ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும் 

வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும் 

ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும் 

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India 

For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com

http://www.youtube.com/bhakthiplanet

http://www.youtube.com/niranjanachannel

http://greensite.in/

Posted by on May 17 2014. Filed under Headlines, இந்தியா, செய்திகள், முதன்மை பக்கம். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »