வதோதராவில் தொடரும் முதலைகள் அட்டகாசம்
வதோதரா, ஏப். 26-
குஜராத் மாநிலத்தின் மூன்றாவது பெரிய நகரமான வதோதராவில் ஓடும் விஷ்வாமித்ரி நதிக்கரையை ஒட்டி நவிநகரி என்ற குடிசைப் பகுதி உள்ளது. நேற்று அந்தப் பகுதியில் வசித்து வந்த 60 வயது முதியவர் ஒருவர் மதியம் 2.30 மணி அளவில் ஆற்றுப்பக்கம் சென்றுள்ளார். அப்போது அங்குள்ள முதலை ஒன்று அவரைக் கடித்துக் குதறியதில் அவர் இறந்துள்ளார்.
அந்த வழியே சென்ற வழிப்போக்கர் ஒருவர் இதனைப் பார்த்து தீயணைப்புத்துறைக்குத் தகவல் தர அவரகள் சம்பவ இடத்திற்கு வந்து முதலையிடமிருந்து இறந்தவரின் உடலைப் பெற முயற்சி செய்தனர். ஆனால் உடலைவிட மறுத்த முதலை நதியின் மற்றொரு கரைக்கு சென்றுள்ளது. இறுதியில் ஒரு மணி நேரம் போராடிய பின்னரே முதலையிடமிருந்து அவர்களால் இறந்தவரின் உடலை விடுவிக்க முடிந்தது. இது அந்தப் பகுதியில் கடந்த 20 நாட்களில் நடக்கும் மூன்றாவது சம்பவம் என்று கூறப்படுகின்றது.
20 நாட்களுக்கு முன்னர் சவ்லி பகுதியில் உள்ள அசோஜ் கிராமத்தில் சவிதா கோஹில் என்ற வயதான பெண்மணி ஒருவர் அங்கிருந்த ஏரிக்கு சென்றிருந்தபோது முதலை ஒன்றால் தாக்கப்பட்டு இறந்துள்ளார். பின்னர் கடந்த 20ஆம் தேதியன்று 15 வயதான அர்விந்த் ஷர்மா என்ற சிறுவன் மகர்புரா அருகே உள்ள மரேகா கிராமத்தில் நதி ஒன்றைக் கடந்து செல்லும்போது மரப்பாலத்திலிருந்து தவறி விழுந்தபோது முதலை தாக்கி இறந்துள்ளான்.
முதலைகள் இந்தப் பருவத்தில்தான் முட்டைகளை இடுகின்றன. அவற்றைப் பாதுகாக்கும் பெண் முதலைகள் அந்த சமயத்தில் மிகவும் ஆக்ரோஷமாகக் காணப்படும். அவற்றின் கூடுகளின் அருகே வருபவர்களை இந்த முதலைகள் தாக்கக்கூடும். எனவே கோடைக்காலங்களில் ஆற்றங்கரை அருகே நடமாடுவதை மக்கள் தவிர்ப்பது நல்லது என்று விலங்கு ஆர்வலர்களான விஷால் தாக்கூர், ராகேஷ் வத்வானா ஆகியோர் தெரிவிக்கின்றனர்.
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
http://www.youtube.com/bhakthiplanet
http://www.youtube.com/niranjanachannel