ரஷ்யாவுக்கு எதிராக புதிய பொருளாதார தடை: ஒபாமா எச்சரிக்கை
டோக்கியோ: அமெரிக்க அதிபர் ஒபாமா தனது ஆசிய பயணத்தின் முதல்கட்டமாக ஜப்பான் வந்துள்ளார். அப்போது அவர் அந்நாட்டுப் பிரதமர் ஷின்சோ அபேவுடன் இணைந்து செய்தியாளர்களை சந்திந்தப்போது கூறியதாவது:- ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைக்கு தேவையான ஆதரவு கிடைப்பதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறேன். கிழக்கு உக்ரைனில் பதற்றத்தை தணிப்பதற்காக, கடந்த வாரம் ஜெனீவாவில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை ரஷ்யா பின்பற்றவில்லை.
ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் மூலம் அப்பகுதியில் ஆக்கிரமிப்பு செய்துவரும் நடவடிக்கைகளில் இருந்தும் அந்நாடு பின்வாங்கவில்லை. சர்ச்சைக்குரிய அந்த தீவுக் கூட்டங்கள், வரலாற்று ரீதியாக ஜப்பான் ஆளுகையின் கீழ் இருந்துள்ளன. இப்பிரச்சனை தொடர்பாக ஜப்பானுக்கு எதிராக ராணுவ அச்சுறுத்தல் எழும் பட்சத்தில், அந்நாட்டுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி ஜப்பானுக்கு ஆதரவாகவே அமெரிக்கா செயல்படும்.
இந்த விவகாரத்தில் ஒருதலைபட்சமாக முடிவெடுப்பதை அனுமதிக்க முடியாது. எனவே, சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் அமைதியான முறையில் இதற்கு தீர்வு காண முயல வேண்டும் என்று ஒபாமா கூறியுள்ளார்.
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
http://www.youtube.com/bhakthiplanet
http://www.youtube.com/niranjanachannel