மலேசிய விமானத்தை தேடும் பணிக்கு ஒபாமா ஆதரவு
கோலாலம்பூர், ஏப். 26-
மலேசியாவில் இருந்து கடந்த மார்ச் மாதம் 8-ம் தேதி 239 பயணிகளுடன் புறப்பட்டுச் சென்ற எம்.எச்.370 என்ற பயணிகள் விமானம் நடுவானில் மாயமானது. உயர்தொழில்நுட்பம் கொண்ட ரேடார்கள் உதவியுடன் விமானங்கள் மற்றும் கப்பல்கள், நீர்மூழ்கி கப்பல்கள் மூலம் தொடர்ந்து தேடும் பணி ஈடுபட்டு வருகின்றன.
விமானம் விழுந்ததாக கூறப்படும் இந்திய பெருங்கடல் பகுதியில் 95 சதவீத பகுதிகளில் தேடும் பணி முடிவடைந்துவிட்டது. இருப்பினும் விமானத்தின் அடிச்சுவட்டைக்கூட இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. விமானம் காணாமல் போய் 50-வது நாளான இன்றும் 8 ராணுவ விமானங்கள், 11 கப்பல்கள் உதவியுடன் தேடும் பணி நடைபெற்றது.
இந்நிலையில் விமானத்தைத் தேடும் பணிக்கு அமெரிக்கா உதவி செய்யும் என்று அதிபர் ஒபாமா வாக்குறுதி அளித்துள்ளார். 3 நாள் அரசுமுறைப் பயணமாக மலேசியாவிற்கு வந்துள்ள ஒபாமா கோலாலம்பூரில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது இதனை தெரிவித்தார்.
விமானத்தைத் தேடும் பணி மிகவும் கடினமானது என்பதை தான் உணர்ந்திருப்பதாக மலேசியாவின் போக்குவரத்து துறை மந்திரியிடம் ஒபாமா கூறியுள்ளார். ஒன்றாக இணைந்து பணியாற்றுவதாகவும், எப்போதும் ஆதரவு உண்டு என்றும் கூறியுள்ளார்.
மலேசிய சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு திங்கட்கிழமை பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு ஒபாமா செல்கிறார்.
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
http://www.youtube.com/bhakthiplanet
http://www.youtube.com/niranjanachannel